அங்குசம் பார்வையில் ‘வெப்’ திரைப்படம்?

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

  அங்குசம் பார்வையில் ‘வெப்’ திரைப்படம்?

தயாரிப்பு: ‘வேலன் புரொடக்‌ஷன்ஸ்’ வி.முனிவேலன். டைரக்‌ஷன்: ஹாரூன். நடிகர்—நடிகைகள்: நட்டி, ஷில்பா மஞ்சுநாத், சுபப்ரியா, அனன்யா, சாஷ்வி பாலா, தீப்ஷிகா, மொட்டை ராஜேந்திரன், முரளி. தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை: கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு: கிறிஸ்டோபர் ஜோசப், எடிட்டிங்: ஆர்.சுதர்சன், ஆர்ட் டைரக்டர்: அருண் சங்கர் துரை. நிர்வாகத் தயாரிப்பாளர் & பி.ஆர்.ஓ. கே.எஸ்.கே.செல்வா.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஷில்பாமஞ்சுநாத், அனன்யா, சுபப்ரியா ஆகிய மூன்று பேரும் வேலை நேரம் போக மற்ற  எந்நேரமும் பப்பும் மப்புமுமாக அலைகிறார்கள். வீட்டிலும் போதையே சிறந்த எனெர்ஜி என்ற நினைப்பில் பவுடர் சரக்கை ஊதித்தள்ளுகிறார்கள்.  ஒருநாள் ஆபீஸ் கொலீக்கின் பெர்த்டேவை முன்னிட்டு, பப்பில் ஓவர் மப்பாகி, காரில் செல்கிறார்கள். முழித்துப் பார்த்தால் பாழடைந்த ஒரு கட்டிடத்திற்குள், கட்டிலில் கட்டிப் போடப்பட்டிருக்கிறார்கள்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

3

எப்படி இங்கே வந்தோம்? ஏன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என இளஞ்சிட்டுகள் நால்வரும் திகிலடித்துப் போய் இருக்கும் போதே, மேலும் திகிலடிக்க வைத்தபடி டெரர் முகத்துடன் எண்ட்ரியாகிறார் நட்டி. இந்த நட்டி ஏன் அந்த இளஞ்சிட்டுகளைக் கடத்தி வந்திருக்கிறார்? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘வெப்’.

போதை என்ற சிலந்தி வலைக்குள் சிக்கினால் இளசுகளின் வாழ்க்கையே நாசமாகிவிடும். இதிலிருந்து மீண்டு வாழ்வு சிறக்க என்ன வழி? என்ற அருமையான கண்டெண்டுடன் களத்தில் இறங்கியிருக்கார் புதுமுக இயக்குனர் ஹாரூன். ஆனால் எந்த இயக்குனரிடமும் சினிமா பழகாமல்( இது அவரே சொன்னது தாங்க) சினிமா டைரக்ட் பண்ண வந்ததன் எஃபெக்ட்,  முதல் ஒரு மணி நேரம் பத்து நிமிடம், அதாவது இடைவேளை வரை, சூப்பர் கண்டெண்டை, சகட்டுமேனிக்கு கண்டதுண்டமாக்கி, பார்வையாளர்களை ரொம்பவே இம்சிக்கிறார்.

4

ஒன்றரை கிலோ வெயிட்டுள்ள இரும்புக் குண்டு ஒன்றை வாக்கிங் ஸ்டிக்கில் மாட்டிக் கொண்டு, “டொம்…டொம்..டொம்…” என தரை அதிரும்படி நடந்து வருகிறார் நட்டி. “ஊ…ஊ….ஊ…” என ஊளையிடுகிறார், திடீர்னு விசிலடிக்கிறார். ‘சதுரங்க வேட்டை’க்குப் பிறகு எந்தப் படமும் உருப்படியா இல்ல, ஆனா தொடர்ந்து நடிச்சே தீருவேன்னு நட்டி ஏன் விடாப்பிடியா இருக்காருன்னு தெரியல.  அப்பப்ப அந்த இளசுகளும் தப்பிச்சுப் போக ட்ரை பண்ணுதுக, மாட்டிக்கிருதுக. இந்த இம்சை பத்தாதுன்னு மொட்டை ராஜேந்திரன் திடீர்னு வந்து பத்து  நிமிசம் கொலையா கொல்றாரு.  ஏன்யா எங்களப் போட்டு பாடாய்படுத்துறீகன்னு அந்த இளசுகள் மாதிரியே நாமளும் நினைச்சுக்கிட்டிருக்கும் போதே, நல்ல வேளை, இடைவேளை விட்டாய்ங்க.

இடைவேளைக்குப் பின் தான், அதுவும் கடைசி இருபது நிமிடங்கள் தான், நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து, படத்தைக் கூர்ந்து பார்க்க வைக்கிறார்கள். கேமராமேனுக்கு பெருசா ஒண்ணும் வேலையில்லை, அவரும் எதுவும் வேலை பார்த்த மாதிரி தெரியல. நாலஞ்சு ஹெலிகேம் ஷாட் மூலமா ஐடி கம்பெனிய காட்றாரு, அப்புறம் அந்த பாழடஞ்ச பங்களாவுக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்திருக்காரு. இசை காத்திக் ராஜான்னு டைட்டிலில் போட்டார்கள். சாரி சகோதரா.. ஏதாவது சொல்லி உங்கள நோகடிக்க விரும்பல.

‘வெப்’ வெரிகுட்னு சொல்ல முடியாது, வெரி பேட்னு சொல்ல முடியாது.

–மதுரைமாறன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.