நிதி நிறுவன மோசடி – உரிமையாளருக்கு பத்து வருட சிறை தண்டனை ! மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசுக்கு குவியும் பாராட்டு !
மதுரையில் நிதிநிறுவனம் நடத்தி 500-க்கும் அதிகமானோரிடமிருந்து, சுமார் 8.50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள், மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்.
இது தொடர்பாக, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை காமராஜர் சாலையில் உள்ள கன்னி மாடம் சந்து பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி. இவர் K.L.K.நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து உள்ளார். முதிர்வு காலம் முடிந்த பின்பு முதிர்வு தொகையை திருப்பித் தராமல் நிதி நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததுஇதேபோன்று நிதி நிறுவனத்தில் பணம் கட்டி – ஏமாந்த 550 பேரிடம் ரூ. 8.50 கோடி மோசடி செய்ததாக 1999-ம் ஆண்டு நிதி நிறுவனம் மீது புகார் அளித்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து 2004- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்பும் இந்நிறு வனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட இருவர் 2002, 2004 ஆம் ஆண்டு புகார் அளித்ததின் போரில்புகார் மனுவை பெற்று தனித்தனியாக நிதி நிறுவனம் நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான மதுரை பெருங்குடியில் உள்ள 6 வீடுகள், கடச்சனேந்தல் பகுதியில் 4 வீட்டடி மனைகள், 143 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை அரசாணை பெற்று நீதிமன்றத்தால் சொத்துக்கள் நிரந்தர முடக்கம் செய்யப்பட்டது. மேலும் 45 கிராம் தங்க நகை, ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 900 மற்றும் வங்கியில் உள்ள ரூ. 63 ஆயிரத்து 632 இருப்பு, மதுரை சக்கிமங்கலம், அவனியாபுரம், உத்தங்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் வீட்டடி மனைகள் நீதிமன்றத் தால் நிரந்தர முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. பால நாகதேவி. ஐ.ஜி. சத்திய பிரியா ஆகியோரின் பேரில்அறி வுரையின் படி சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் மதுரை டி.எஸ்.பி.குப்புசாமி தலைமையிலான பொரு ளாதார குற்றப்பிரிவினர் வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர்.
பல்வேறு கட்டங்களாக நீதிமன்ற விசாரணை அடிப்படையில் நிதி நிறுவன உரிமையாளர் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிதி நிறுவன உரிமையாளர் க K.L.சுப்பிர மணியன் என்பவருக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் தண்ட னையும் ரூ. 24 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோதி தீர்ப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து நிதி நிறுவன உரிமையாளர் சிறை யில் அடைக்கப்பட்டார்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு 10 வருட தண்டனை, ரூ. 24 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு DSP குப்புசாமியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.