“எனது வெற்றிக்கு காரணம் ஒரு ஆண்” – சாய் தன்ஷிகா சீக்ரெட் !

0

“எனது வெற்றிக்கு காரணம் ஒரு ஆண்” – சாய் தன்ஷிகா சீக்ரெட்! ‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் ‘தி ப்ரூஃப்’ (THE PROOF) பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற்றது.

https://businesstrichy.com/the-royal-mahal/

THE PROOF
THE PROOF

இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

தயாரிப்பாளர் கோமதி பேசியதாவது…
இந்த விழாவிற்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் நன்றிகள். இது என் முதல் படம். எனக்கு மட்டுமல்ல, ஹீரோ, மியூசிக் டைரக்டர் என எல்லோருக்கும் இது முதல் படம். அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.

நடிகர், இயக்குநர் யூகி சேது பேசியதாவது…
நான் ஒரு படம் செய்துள்ளேன் அப்படத்தின் எல்லா பாடலுக்கும் ராதிகா தான் டான்ஸ் மாஸ்டர். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு. ராதிகா மாஸ்டரிடம் ஒரு மறைமுக திறமை இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித் தான் ஷாட்டுக்கு போகிறார்கள.ஒரு தலைமைப்பண்பு இயல்பிலேயே அவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும் போது,”இது என் குடும்பத்துப் படம். ராதிகா என் உயிர் நண்பனின் மகள். அவரை குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். இவர் வளர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களை ஆட வைப்பார் என நினைக்கவில்லை. மிகப்பெரிய உழைப்பாளி. அந்த திறமையில் தான் எழுத்து இயக்கத்தையும் செய்துள்ளார்.

இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்போது போதைப்பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம். பெரிய ஹீரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவாஜி சார் காலத்தில் இப்படியா இருந்தது .

THE PROOF
THE PROOF

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…
இத்திரைப்படத்தில் என் பெண்ணுக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும்.

நடிகர் மைம் கோபி பேசியதாவது…
ராதிகாவை நான் என் தங்கையாக மட்டுமே பார்க்கிறேன். நிறையப்படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் அவ்வளவு அன்பாக பழகுவார். என்னையும் இப்படத்தில்ஆட வைத்துள்ளார்‌.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது, ராதிகா மாஸ்டரின் முதல் பைலட்டில் நான் தான் நடித்தேன். அப்போதிலிருந்து அவரைத் தெரியும். நிறையப் போராடி இப்படத்தைக் கொண்டு வந்துள்ளார். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது படத்தில் வேலை பார்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

ஹீரோயின் சாய் தன்ஷிகா பேசியதாவது,
“இது மிக முக்கியமான மேடை. ராதிகா மாஸ்டர் அதற்கு மிக முக்கிய காரணம். எத்தனையோ மேடைகளில் பிரபலங்கள் பேசிவிட்டு உடனே கிளம்புவதைப் பார்த்துள்ளேன், இந்த மேடையில் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராதிகா மாஸ்டரின் மீதான அன்பு தான் காரணம். இந்தப்படம் அவரது ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம். ராதிகா எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும்.

பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். ராதிகா மாஸ்டர் எப்போதும் எனக்கு டார்லிங் தான். அவர் இயக்குநர் ஆவார் என்றே நினைக்கவில்லை. அவர் கதை சொன்ன போதே ரொம்ப பிடித்தது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம்.

நாயகன் ருத்விக் பேசியது,“ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம், நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது”.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது,
“ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை. நான் இந்தப் படம் குறித்து கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய். இனி பத்திரிகையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

இசையமைப்பாளர் தீபக் பேசியதாவது…
இது எனக்கு முதல் வாய்ப்பு, தயாரிப்பாளர் கோமதி மேடத்திற்கு நன்றி. இப்படத்தில் என்னுடன் பணிபுரிந்த இசைக் கலைஞர்களுக்கு நன்றி. இசை சொல்லித் தந்த என் அப்பாவிற்கு நன்றி.

இயக்குநர் ராதிகா பேசியதாவது…
என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற என் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில் அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.