”சலுகைகளை எதிர்பார்க்காத சீக்கியர்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி – கொதித்தெழுந்த தலித் கிருஸ்தவர்கள் 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

”சலுகைகளை எதிர்பார்க்காத சீக்கியர்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி கொதித்தெழுந்த தலித் கிருஸ்தவர்கள் 

ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை போலவே செயல்படுகிறார் என தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் நடைபெற்ற சீக்கியர் விழாவில் சிறுபான்மையினரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிவிட்டார் என்ற அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

சீக்கிய மதத்தின் முதல் குருவாக கருதப்படும் குருநானக்தேவ் பிறந்தநாளான நவ-27 அன்று குருநானக் ஜெயந்தி விழாவாக கடைபிடித்து வருகிறார்கள். சீக்கிய மதத்தின் முக்கிய விழாவாக கருதப்படும், குருநானக் ஜெயந்தி விழா கடந்த நவ-27 அன்று சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ குருநானக் சத் சங்க சபாவில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, குருநானக்கின் நித்திய போதனைகள் குறித்தெல்லாம் பேசியதோடு, “சீக்கிய சிறுபான்மையினர்கள் எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். சலுகையை எதிர்பார்க்காத சீக்கிய சிறுபான்மை மக்களை நான் வாழ்த்துகிறேன்” என்று அவர் பேசியது தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சீக்கியர்கள் விழாவில்.. கவர்னர்
சீக்கியர்கள் விழாவில்.. கவர்னர்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தலித் கிருஸ்தவர்கள் தேசிய பேரவையின் மாநில தலைவர் மற்றும் தேசிய ஆலோசகருமான சார்லஸ் அவர்களிடம் அங்குசம் சார்பில் பேசினோம்.

“சீக்கியர்களின் விழாவில் கலந்துகொண்டதையோ, சீக்கியர்களின் மதக்குருவின் பெருமைகளைப்பற்றி அவர் பேசியதையோ நாங்கள் குறை சொல்லவில்லை. மாறாக, சலுகையை எதிர்பார்க்காத சீக்கியர்கள் என்று பேசியிருப்பதன் மூலம், சலுகையாக அல்ல அரசிடம் உரிமையாக சில விசயங்களுக்காக போராடிவரும் எங்களைப்போன்ற சிறுபான்மையினரை சிறுமைபடுத்துவது போல, கொச்சைப் படுத்துவது போல அமைந்திருக்கிறது என்பதைத்தான் கண்டனமாக தெரிவிக்கிறோம்.

தலித் கிருஸ்தவர்கள் தேசிய பேரவையின் மாநில தலைவர் மற்றும் தேசிய ஆலோசகருமான சார்லஸ்
தலித் கிருஸ்தவர்கள் தேசிய பேரவையின் மாநில தலைவர் மற்றும் தேசிய ஆலோசகருமான சார்லஸ்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்தியாவில், பௌத்தம், சீக்கியம், பாரசீகம், இஸ்லாம், கிறிஸ்துவம் என ஐந்துவகையான மத சிறுபான்மையினர்களும் இதுவல்லாமல் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினர்களும் இருக்கிறார்கள்.

இந்து மதத்தில் தலித்துகளாக இருந்து பௌத்தம், சீக்கியம், பாரசீகம் ஆகிய மதங்களுக்கு மாறியவர்களுக்கு இந்த சிக்கல் எழவில்லை. அவர்கள் எல்லாம் மதம் மாறிய பின்னரும் தலித்துகளுக்கான சலுகைகளை இன்றும் அனுபவித்துதான் வருகிறார்கள்.
ஆனால், தலித்துகளாக இருந்து இஸ்லாமாகவோ, கிறிஸ்தவர்களாவோ மதம் மாறுபவர்களுக்கு மட்டும் அவர்களுக்கான உரிமை மறுக்கப்படுவதுதான் வேதனையானது. எஸ்.சி. என்ற வகைப்பாட்டில் இருக்கும் இந்து பறையர் கிறிஸ்துவ பறையராக மதம் மாறினால் பி.சி. என்ற வகைப்பாட்டில் வந்து விடுகிறார். இதன்காரணமாக, பட்டியலின சாதியினருக்கான அரசின் எந்த ஒரு உரிமையையும் சலுகையையும் பெற முடியாதவராகிவிடுகிறார்.

இவ்வாறு பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராகவும், தலித்துகளுக்குரிய சலுகைகள் மறுக்கப்படுவதற்கெதிராகவும் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வருகிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாக, 1950 இல் அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாதன் மிஷ்ரா கமிசன் தெளிவாக தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. இந்தியாவில் நிலவும் சாதிய கட்டமைப்பை கருத்திற் கொண்டு இந்துவாக இருந்து வேறு மதத்திற்கு மாறியிருந்தாலும், மதம் மாறியதற்காக தலித்துகளுக்கான உரிமைகளை மறுக்கக்கூடாது என்று அந்த கமிஷனின் பரிந்துரைகளை இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான இராஜேந்திரபிரசாத் நிறுத்தி வைத்தார். அதே நிலை இன்றும் தொடர்கிறது.

தேசிய ஆலோசகருமான சார்லஸ்
தேசிய ஆலோசகருமான சார்லஸ்

இந்த பின்னணியிலிருந்துதான், ஆர்.என்.ரவி பேசியிருப்பதை எதிர்க்கிறோம். ஆளுநர் என்பவர் பொதுவானவர். ஒரு பிரிவினரை சார்ந்து நின்று மற்றொரு பிரிவினரை பாகுபாடு காட்டுவது போலவோ, அவர்களை சிறுமைபடுத்துவது போலவோ நடந்துகொள்ளக்கூடாது என்பதைத்தான் வலியுறுத்த விரும்புகிறோம்.

எங்களைப் போன்ற சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது வருந்தத்தக்கது. வன்மையான கண்டனங்களுக்குரியது.” என்கிறார், அவர்.

“குருநானக்கின் ஆன்மிக போதனைகள், அவருடைய கருணை மற்றும் மனித குலத்துக்கு ஆற்றிய சேவைகள் உலக அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த மிகவும் பொருத்தமானவை” என்று டிவிட்டர் வழியே ஊருக்கு உபதேசம் சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி, மேடையில் அவற்றுக்கு எதிரான வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் என்பதுதான் இதில் வேடிக்கையானது!

– மித்ரன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.