அங்குசம் பார்வையில் ‘பார்க்கிங்’!    

0

அங்குசம் பார்வையில் ‘பார்க்கிங்’.       

 

தயாரிப்பு: பேஸன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & கே.எஸ்.சினிஷ். டைரக்டர்: ராம்குமார் பாலகிருஷ்ணன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ரமா ராஜேந்திரா, இளவரசு, பிரார்த்தனா நாதன். இசை: சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு: ஜிஜு சன்னி, எடிட்டிங்: பிலோமின் ராஜ். பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா டி ஒன்

https://businesstrichy.com/the-royal-mahal/

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஹரிஷ் கல்யாண், இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஹரிஷ் ஒரு வாடகை வீட்டில் மனைவி இந்துஜாவுடன் குடியேறுகிறார். அதே காம்பவுண்ட் டில் இருக்கும் கீழ் போர்ஷனில் குன்றத்தூர் பேரூராட்சியில் அதிகாரியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மனைவி ரமா, மகள் பிரார்த்தனாவுடன் வாடகைக்கு வசிக்கின்றார்.

Parking Review
Parking Review

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மனைவி இந்துஜாவின் ஆசைப்படி இ.எம்.ஐ.யில் கார் வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். எம்.எஸ்.பாஸ்கர் பைக்கில் ஆபீசுக்கு போய் வருகிறார். ஒரு நாள் இரவு எம் எஸ் பாஸ்கர் வீடு திரும்பி பைக்கை நிப்பாட்டும் போது ஹரிஷின் புது காரில் லேசாக ஸ்க்ராச் ஆகிவிடுகிறது. இதனால் ஹரிஷுக்கும் பாஸ்கருக்குமிடையே லேசான உரசல் ஏற்படுகிறது. ஹரிஷை கடுப்பேத்த வேண்டும் என்பதற்காகவே பாஸ்கரும் புதிய கார் வாங்குகிறார்.

அதன் பின் காரை பார்க்கிங் செய்வதில் இருக்கும் இடையே மோதல் தீவிரமாகி, போலீஸ் கேஸாகி லாக் அப்பில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வருகிறார் ஹரிஷ். அதன் பின்னர் இருவருக்கும் இடையே நடக்கும் உக்கிரமான ஈகோ மோதல் தான் இந்த ‘பார்க்கிங்’. நடுத்தர வர்க்கத்தின் ஆசை, அந்த ஆசையால் வரும் சங்கடம், அந்த சங்கத்தால் வரும் அந்த கோபத்தால் ஏற்படும் கசப்பான பின் விளைவுகள் இதையெல்லாம் திரையில் நேர்த்தியாக கொண்டு வந்திருக்கார் டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இதில் ஓப்பனிங் சாங், தத்துவ வசனம், ஹீரோயினுடன் டூயட் இப்படி எதுவுமே இல்லை என்று தெரிந்ததும் இந்தக் கதைக்குள் தன்னைப் பார்க்கிங் செய்திருக்கார் ஹரிஷ் கல்யாண். கண்டென்ட் நச்சுன்னு இருந்தா எல்லாமே நச்சுன்னு அமையும் என ஹரிஷுக்கு இப்ப பிடிபட்ருக்கும் போல.

இந்தப் பிடியை விடாமல் இருப்பது ஹரிஷ் கல்யாண் கைகளில் தான் இருக்கு. ஹரிஷ் மனைவியாக இந்துஜா க்ளைமாக்ஸ் வரை கர்ப்பிணியாக வந்து நடிப்பில் நம்மை கவர்கிறார். ஹரிஷ் ஜெயிலுக்குப் போனதும் எம் எஸ் பாஸ்கரிடம் “அப்பா கேஸை வாபஸ் வாங்குங்கப்பா…” என கெஞ்சும் இடத்தில் உருக வைக்கிறார். எம் எஸ் பாஸ்கர், சும்மா சொல்லக்கூடாது, மனுசன் வில்லத்தனத்திலும் விளையாடியிருக்கார். “ஏய்யா ஒடஞ்சு போன மிக்ஸிய மாத்திக் கொடுக்க வக்கில்ல.

இந்த லட்சணத்தில் புதுசா கார் வாங்குறியா” ன்னு பாஸ்கரிடம் ஆவேசம் காட்டும் மனைவின கேரக்டரில் ரமா ராஜேந்திராவும் “வேணாம்ப்பா அந்த அக்கா பாவம்ப்பா ” என பாஸ்கரிடம் கெஞ்சும் மகள் கேரக்டரில் பிரார்த்தனாவும் கவனிக்க வைக்கிறார்கள். சாம் சி.எஸ்.ஸின் இசையும் ஜிஜு சன்னி யின் கேமராவும் பார்க்கிங்கிற்கு நல்ல சப்போர்ட்டிங்கா இருக்கு. க்ளைமாக்ஸுக்கு முந்தைய கால் மணி நேரம் தான் இந்த பார்க்கிங்கில் கடுப்படிக்கும் ஏரியா. மற்றவைகள் எல்லாம் பார்க்கக் கூடிய ஏரியா தான்.

–மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.