தை மகளை வரவேற்போம் !
தை மகளை வரவேற்போம்
தரணியில் மகிழ்ச்சி பொங்க
தமிழர்களின் வீரம் பொங்க
வயல்நிலம் நெல்மணிகளால் நிரம்ப
உழவனின் உள்ளம் பொங்க
உழவுத்தொழிலில் வளர்ச்சி பொங்க வந்தாரை
வாழ வைக்கும் தமிழனின் மரபு ஓங்க
மாவிலை தோரணம் தொங்க
மகளிரின் வண்ண கோலங்கள் வாசலில் அழகுற
தித்திக்கும் செங்கரும்பாய் வாழ்வினிக்க
தெவிட்டாத சர்க்கரையாய் உறவினிக்க
தை மகளை ஆர்ப்பரிப்பரிப்போடு வரவேற்போம் வழிபடுவோம்.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
