பொங்கல் வந்துபோகும் நாளா..?
பொங்கல்
உணவு மட்டுமா?
‘எங்கள் வாழ்வு
மங்காது..’
எனச் சொல்லும்
உணர்வு.
கரும்பு
பயிர் மட்டுமா?
பிறர் வாழ்வை
இனிப்பூட்டும்
உயிர்களின்
அடையாளம்!
மஞ்சளும் இஞ்சியும்
மண்ணின்
புதையலா?
நமது வேரை
நினைவூட்டும்
காலத்தின்
தொட்டில்!
பசுவும் காளையும்
விலங்கா?
அது
உழைப்பைக்
கும்பிடும்
பண்பின்
தமிழ்ப் பாதை!
ஏரின் தோழனே
பாரின் அச்சு.
ஆனால்
வயலின் வாழ்வு
இன்று
சாலையில்..
சரியா நண்பனே?
பொங்கல் என்பது
உணவு மட்டுமா
உணர்வு
அதுவும்
தன் உணர்வு!!
வழக்கம்போல்
உங்கள்
நந்தலாலா
