செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு சார்பாக முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு

0

முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு 02 05 2024 செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது தொடக்கவிழாவில் கல்லூரியின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் சே ச  தனது ஆசியுரையில் மாற்று மருத்துவ சிந்தனை கூர்ந்து நோக்குகின்ற பார்வையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்லூரியின் செயலர் அருள்முனைவர் அமல் சே ச அவர்கள் வாழ்த்துரையில் மருத்துவம் வணிகமயமாகியுள்ளது இச்சூழல் அபாயகரமானது இதனை மாற்ற இம் மாற்று மருத்துவமே சரியான தீர்வு இதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என வாழ்த்துரையில் கூறினார்.

முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு
முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு

கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சே ச  தனது வாழ்த்துரையில் பாரம்பரிய மருத்துவத்தையும் மாற்று மருத்துவ முறைகளையும் கற்று அறிந்து கொண்டு மக்களின் உடல் மனம் பேனவும் நாம் உதவ வேண்டும் என வாழ்த்தினார்.

கருத்துரை முன்னால் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய இயக்கம் நிர்வாக உறுப்பினர் டாஸ் சாந்தி  ஆரம்ப நிலையில் நோய்களை தடுக்கவும் உடல் மற்றும் மனநல தொடர்ந்து நல்ல முறையி;ல் வைத்து கொள்ளவும் மாற்று மருந்து பெரிதும் உதவுகிறது மக்கள் நலன் பேண மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தனார்.

முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு
முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு

தொடக்க விழாவில் விரிவாக்கத்துறை இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச  இப்பயிலரங்கனின் நோக்கம் இம்மாற்று மருத்துவம் ஏதாவது ஒரு வழி முறையில் நோய்களை நீங்கி நலவாழ்விற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறி அனைவரையும் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து மருத்துவர் அக்குபஞ்சர் முருகன் தூய்மை படுத்தும் முத்திரைகள் பற்றி பயிற்சி கொடுத்தார் இதன் பிறகு வழக்கறிஞர் மார்டின் ஆங்கில மருத்துவத்தை பற்றியும் அதன் பக்க விளைவுகள் பற்றி எடுத்துக் கூறினார்.  ஜந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இப்பயிலங்கத்தில் சித்த மருத்துவம், மலர் மருத்துவம் பாத சிகிச்சை, தொடு சிகிச்சை முத்திரைகள், அக்கு பஞ்சர், ஆயூர் வேதம், துளசி மருத்துவம் , யோக தியானம், இயற்கை மருத்துவம், இயற்கை வாழ்வியல் பாரம்பரிய மருத்துவத்தில் வேம்பு மூலிகை, தோட்ட களப்பார்வை மூலிகை மருத்துவ பயிற்சி, என வழங்க இருக்கிறது.

முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு
முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு

இப்பயிலரங்கதின் நிகழ்ச்சியை முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் தொகுத்து வழங்கினார் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஜெயசீலன் யசோதை ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள் இப்பயிற்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து மருத்துவ சேவையில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.