கர்நாடகாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் மது பாட்டில்கள் கடத்திய கணவன்- மனைவி திருச்சியில் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

சென்னையில் போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

கடந்த ஜீன் மாதம் 2 ம் தேதி  அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி மற்றும் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் ஆய்வாளரின் தலைமையிலான காவல் துறையினர் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவங்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் 3 கார்களை மடக்கிப் பிடித்தனர். சுதாகரித்துக் கொண்ட குற்றவாளிகள் வாகனங்களில் இருந்து தப்பியோடி விட அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வரும் நேபாள் நாட்டைச் சேர்ந்த சோனு (39) என்பவர் மட்டும் காவல் துறையினரிரம் பிடிபட்டார்.

 

மேலும், மடக்கிய வாகனங்களை பரிசோதனை செய்தபோது அதில் 60 பெட்டிகள் அடங்கிய 2,880 மதுபாட்டில்களும் 50 பெட்டிகள் அடங்கிய 477 பீர் பாட்டில்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்திய கார்கள்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும், அந்த கார்களில் judge, govt of india போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டது. இதை வைத்தே வழிநெடுகிலும் அவர்கள் பயணித்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனையடுத்து கண்டெய்னர் லாரி மற்றும் 3 கார் ஆகிய வாகனங்களையும் மொத்தமாக கைப்பற்றப்பட்ட 3,327 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல் துறையினர் சோனு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணை அறிக்கையை மதுவிலக்கு அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

பிடிபட்ட சோனுவிடம் நடத்தப்படும் விசாரணையில் மதுபாட்டில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது? சென்னையில் யாரிடம் கொண்டு சேர்க்கப்படவுள்ளது ? கைப்பற்றப்பட்டை அடையாள அட்டையில் உள்ள போலி பத்திரிக்கையாளர் யார் ? அடையாள அட்டை கொடுத்த சங்கத்தை பற்றியும்? நீதிபதி என்று ஸ்டிக்கர் ஓட்டிய வாகனங்கள் யாருடையது என்று தொடர் விசாரணை செய்து வந்தனர்.

 

இந்த நிலையில் கணவன் – மனைவியாக இரண்டு பேர் இந்த கள்ள சந்தையில் மதுபாட்டில்களை கடந்தி வந்த வாகனங்களில் கார்களில் judge, govt of india போன்ற ஸ்டிக்கர்கள் பயன்படுத்தியவர்கள் என்று தெரியவந்த்து. இவர்களோடு உறவினர் ஒருவரின் துணையோடு அவர் காரில் தான் இத்தனை மதுபாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்த்து.

 

வங்கி கணக்குகள் மூலம் இலட்ச கணக்கில் பணபரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்ததால்  கடந்த 1 மாதமாக அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், கண்காணிப்பில் தலைமறைவாக இருந்த கணவன் – மனைவியின் செல்போன் டவர்கள் கண்காணித்து வந்த போது திருச்சி டோல்கேட் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ரகசியமாக தங்கியிருப்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து சரவணன் தலைமையிலான போலிசார் இன்று அதிகாலை திருச்சி வந்து பதுங்கியிருந்த கணவன் – மனைவியை சுற்றிவலைத்து பிடித்துள்ளனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.