ஆசிரியயை பள்ளி வகுப்பறைக்குள் வைத்து குத்திக் கொலை செய்த கணவர்… மதுரையில் பரபரப்பு…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரதிதேவி. இவருக்கும், அவருடைய கணவர் குருமுனீஸ்வரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (22.07.2019)வழக்கம் போல பள்ளிக்கு வந்த ரதிதேவி, மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்த அவருடைய கணவர் குருமுனீஸ்வரன், ரதிதேவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

அப்போது எழுந்த ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியர் மீது சராமாரியாக குத்தினார். இதில், கதறிய ஆசிரியை ரத்த வெள்ளத்தில் பள்ளி வகுப்பறையிலே சரிந்தார். இதை பார்த்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வகுப்பறையை விட்டு ஓடினர்.

மற்றவர்கள் வந்து பார்ப்பதற்குள் ஆசிரியை ரதிதேவி உயிரிழந்துவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரதிதேவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கான அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக காவலர்கள் பதிவு செய்துள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மனைவியை கொலை செய்த குருமுனீஸ்வரன் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சமயத்தில் திருமங்கலம் காவல்நிலையத்தில் அவர் சரணடைந்தார். ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.