சந்தனம் மணந்த இடங்களில் சாராய வாடை ! போலீஸ் கப்சிப் ?
சந்தனம் மணந்த இடங்களில் சாராய வாடை ! போலீஸ் கப்சிப்? திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள ஜவ்வாது மலை ஒரு காலத்தில் மணக்கும் சந்தனத்திற்கு பெயர்போனது. ஜவ்வாது சந்தன மரங்களுக்கென்றே தனி மனமும் கிராக்கியும் இருந்த காலம் அது. இன்றோ, உயிரைக் கெடுக்கும் கள்ளச்சாராய விற்பணைக்கு பெயர்போன ஊராக நாறிக்கிடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மணியார்குப்பம், தென்னம்பட்டு, மோட்டூர் மாரப்பட்டு, செங்கிலி குப்பம், மின்னூர், ஆலங்குப்பம்,பெரியாங்குப்பம், சோலூர், உம்மராபாத் வேப்பங்குப்பம், வடக்கரை, தோட்டாளம், பெரிய வரிகம், வடச்சேரி, பாலூர் உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கள்ளச் சாராயத்திற்கு பெயர் போன ஊர்களாக மாறியிருக்கின்றன.
அண்டையில் இருக்கும் ஆந்திரா வனப் பகுதியில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி கடத்தி வந்து இந்த ஊர்களில் விற்பனை செய்து வருவதாகவும் தகவல். கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையோ “கப்பம்” வாங்கிக் கொண்டு “கப்சிப்” என இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள், சமூக ஆர்வலர்கள். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட குற்றம்சாட்டியிருந்தது, குறிப்பிடத் தக்கது.
”இளைஞர்கள் இருவர் இருசக்கர வானகத்தில் கள்ளச்சாராயத்தை வைத்து, ரொக்கமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை பாக்கெட் 50 ரூபாய்தான் என கூகுள்பே, போன் பே வழியாக பணத்தை டிஜிட்டல் முறையில் பெறுவதுமாக ஹைடெக்காக கள்ளச்சாராய விற்பணையில் ஈடுபட்ட வீடியோ” ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆம்பூர் – மணியார்குப்பத்தை சேர்ந்த சரத் மற்றும் தசரத விஜயன் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “ இந்த பகுதியில் பெண்களே சிலர் சாராயம் காய்ச்சி விற்று வருவதாகவும்; இதுகுறித்து புகார் அளித்தால் இங்கு உள்ள காவல்துறையினர் இதனை கண்டும் காணாமல் சாராய விற்பனைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும்” குற்றச்சாட்டுகிறார்.
இதில் கொடுமை என்னவென்றால், ஒரு பாக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பது தொடங்கி இரண்டு பாக்கெட் வாங்கினால் சைடிஷ் முட்டை மசாலா இலவசம் என்ற விளம்பரங்களோடு விற்பணை ஜோராக நடக்கிறது என்பதுதான்.
இந்த விவகாரம் தொடர்பாக, உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கள்ளச்சாராய விற்பணையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
விழுப்புரம் கள்ளச்சாராய சாவுகளையடுத்து, கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற கடந்த ஆண்டு எச்சரித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த கண்டிப்பெல்லாம் காற்றோடு போனதால்தான், சந்தனம் மனந்த இடங்களில் தற்போது சாராய வாடை வீசுகிறது என வேதனைப்படுகிறார்கள், ஏரியா வாசிகள்.
– மணிகண்டன்.
வீடியோ லிங்