திருச்சியில் ரூ. 1000 கோடி மதிப்பில் திட்ட பணிகள் – கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

0

திருச்சியில் ரூ. 1000 கோடி மதிப்பில் திட்ட பணிகள் – கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் தென்னரசு வரவேற்று பேசினார்.

 

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், திருச்சி மேயர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

4 bismi svs

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, திருச்சியில் ரூ. 1000 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், சுற்றுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

 

- Advertisement -

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசும்போது கட்டுமானத் துறையின் உயர்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவோம் என்றார்.

 

மாநாட்டு விழா மலரை வெளியிட்ட பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேசும் போது, கடந்த 1 ஆண்டில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நல வாரியத்தில் இணைந்துள்ளனர். கட்டுமானத் துறையினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணக்கமாக இருந்தால் தான் பொருளாதாரம் உயரும். தமிழகத்தில் கட்டுமான தொழில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ‌‌.  கட்டுமானத்துறையில் வெளி மாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. அதேபோல் தமிழக தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு செல்வதும் கவலை தருகிறது. தமிழக தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தால் தான் தமிழக பொருளாதாரம் உயரும் அதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார் ‌‌‌.

 

மாநாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும், நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.