ஏ.வி.ஆர் மருத்துவமனை புதிய கட்டிடம் திறப்பு அமைச்சர் டி.ஆர். பி. ராஜா பங்கேற்பு !
ஏ.வி.ஆர் மருத்துவமனை புதிய கட்டிடம் திறப்பு அமைச்சர் டி.ஆர். பி. ராஜா பங்கேற்பு !
கும்பகோணம், சீனிவாசநல்லூர் காரைக்கால் சாலையில் சிறிய அளவில் அவசர மருத்துவ உதவி கிளினிக்காக செயல்பட்டு வந்தது. தற்போது 24 மணி நேர சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் மாண்புமிகு டி ஆர் பி.ராஜா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஸ்ரீதரன், மருத்துவர் ஸ்ரீ நிஷா கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள்.
இவர்களோடு மாநகராட்சி மேயர் சரவணன், மாநகர துணை மேயர் மாநகர செயலாளர் சுப. தமிழழகன் , ஒன்றிய தலைவர் சுபா திருநாவுக்கரசு, மருத்துவர்கள், தொழில் அதிபர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் செவிலியர்கள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை செயல் அதிகாரி ராஜரிஷி தலைமையில் செய்திருந்தனர்.
– ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
கும்பகோணம்