துறையூரில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப்போட்டி ! எம்.எல்.ஏ வை புறக்கணித்த அரசுப்பள்ளி நிர்வாகம்.
துறையூரில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப்போட்டி ! எம்.எல்.ஏ வை புறக்கணித்த அரசுப்பள்ளி நிர்வாகம்.
திருச்சி மாவட்டம் துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ,துறையூர் வட்டார அளவிலான குறுவட்ட தடகளப் போட்டிகள் இன்று நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் தலைமை வகித்தார்.
கோட்டப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருள் ஜோஸ்பின் முன்னிலை வகித்தார் தடகளப் போட்டிகளில் மாணவ மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் , துறையூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி ஒலிம்பிக் கொடி ஏற்றி போட்டியை துவக்கி வைத்தார் .கோட்டப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை மரியா வரவேற்றார்.
கோட்டப்பாளையம் புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் துறையூர் வட்டாரத்தில் உள்ள 31 ஆண்கள் பள்ளிகளிலும் 29 பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் இருந்து மாணவ மாணவிகள் தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் 600 மாணவர்கள் 500 மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்த வருடம் கோட்டப்பாளையம் புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் கல்வித்துறை மற்றும் காவல்துறை சார்பில் அதிகாரிகளை அழைத்து நிகழ்ச்சியை நடத்திய கோட்டப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளூரிலேயே இருந்தும் அவர்களை நிகழ்ச்சிக்கு பங்கேற்க அழைக்காமல் போட்டிகளை நடத்திய விதம் அங்கு பார்வையாளர்களாக பங்கேற்ற சமூக ஆர்வலர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் துறையூர் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வருடா வருடம் நடைபெறும் பொழுது குறிப்பாக உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தி அவர்களை கௌரவித்து அவர்கள் முன்னிலையில் போட்டிகள் துவக்கி வைப்பது வழக்கம் ஆனால் இந்த முறை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் உளியூரிலேயே இருந்தும் அவர்களை அழைக்காமல் போட்டிகளை நடத்தியது ஏன் என்று கேள்விகள் எழுப்பினர் இது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் இனிவரும் காலங்களிலாவது மக்கள் பிரதிநிதிகளை அழைத்து போட்டிகளை நடத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதே நேரத்தில் மாவட்ட உயர்கல்வி ஆய்வாளர் சரோஜினி தன்னுடைய பெயரை அழைப்பிதழில் கடைசிய போட்டியிருக்கிறார்கள் என்று நிகழ்ச்சி வர மாட்டேன், என்னுடைய பெயரை முன்னிலைப்படுத்தி பெரிதாக போட்டு அழைப்பிதல் கொண்டு வாருங்கள் என்று நெருக்கடி கொடுத்துள்ளார். அதன் பிறகு அவசர அவசரமாக வேறு ஒரு பத்திரிகை தயார் செய்து கொடுத்த பின்னரே நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அது வரை நிகழ்ச்சி ஏதுவும் தொடங்காமலே இவருடைய வருகைக்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.