மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 13

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 13

“அக்குளுக்கு அல்ல இடைத் துண்டு” என்கிற இவரின் ஒற்றை வரியே ஓராயிரம் அரசியல் சொல்லும். “அதிகாரக் கலப்பையெடுக்காமல் ஆதிக்க வயலை உழாமல்” என்கிற காத்திரமான கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர். தலித் பெண்ணிய ஆய்வாளர், செயற்பாட்டாளர், மிகச் சிறந்த கல்வியாளர், எனப் பல்துறை ஆளுமை மிக்கவர் பேராசிரியர் அரங்க மல்லிகா அவர்கள்.

 

Sri Kumaran Mini HAll Trichy

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 26 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியர் பணி செய்து கடந்த மூன்று வருடங்களாக தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பவர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும், வழிகாட்டலும் ஆலோசனை கூறலும், நீர் கிழிக்கும் மீன், பெண்ணின் வெளியும் இருப்பும், தலித் பெண்ணிய அழகியல், புலரும் அறத்தின் காலை, பெண் மைய வாசிப்பும் அரசியலும், புலரும் அறத்தின் காலை ( தன் வரலாறு) என எட்டுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி இருப்பவர்.
ஒளவை விருது, படைப்பாளர் விருது, (கவிதைக்காக) சிறந்த கல்வியாளர் விருது, பெண்ணிய இயக்கவியலாளர் விருது, தமிழ் நிதி விருது, ஐயை விருது, பாரத் ரத்தன் விருது, Education icon award. Quintessence of change award for women empowerment, திருவையாறு ஒளவை கோட்டம் ஒளவை விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேரவைத் தலைவராகவும், “பல்லுயிர்மம்” குறித்துப் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்தியவராகவும். இளையோர் தலைமைத்துவப் பயிற்சி வழங்குபவராவும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும், பல கல்லூரிகளில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ் இலக்கியம், பெண்ணியம், தலித்தியம் ஆகிய துறைகளில் 75 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், மணிமேகலை காப்பியத்தில் பெளத்தப் பண்பாட்டு விழுமியங்கள் என்னும் தலைப்பில் செம்மொழி மத்திய நிறுவனத்தில் ஆய்வினைச் சமர்ப்பித்திருக்கும் இவரால் நம் மலைக்கோட்டை மாநகரம் பெருமை கொள்கிறது என்றால் அது மிகையாகாது.

 

-பாட்டாளி 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.