தங்கதமிழ்ச்செல்வன் சிக்கியிருப்பது திமுகவிடமா ? அதிமுகவிடமா ?

0

தங்கதமிழ்ச்செல்வன் சிக்கியிருப்பது திமுகவிடமா ? அதிமுகவிடமா ?

பல மாதங்களாக கட்சிக்குள்ளேயே பேசப்பட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன் – தினகரன் மோதல் திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வெளியே வந்தது. திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலே தினகரன் சிலர் குழப்பிக்கொண்டே இருப்பார்கள; அவர்களை பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க என்கிற ரீதியில் தினகரன் பேசிய தகவல்கள் வெளியே வந்ததும் கட்சிக்காரர் ஒருவருக்கு போனை போட்டு என்னைப் பற்றி உனக்கு தெரியாது, பொட்டதனமான அரசியல் செய்யக்கூடாது, வேண்டுமென்றால் என்னை கட்சியை விட்டு நீக்குங்கள் இதுபோன்று கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது. என்று தங்க தமிழ்ச்செல்வன் பேச பதிலுக்கு பதிலுக்கு தினகரன் சரி என்னை பார்த்தால் பொட்டிபாம்பு போல் அடங்கிவிடுவார் என்று தினகரன் பேச என்னை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள் என்று தங்கதமிழ்செல்வன் அடுத்த பதில் தொடர்ச்சியா வார்த்தை போராக மாறியிருக்கிறது.

தங்கதமிழ்செல்வன் – செந்தில்பாலாஜி திமுகிவில் இணைந்த போதே பரபரப்பாக திமுகவில் இணைந்து விடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது எந்த பக்கம் போகிறார் என்பது தற்போது அரசில் கட்சயினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

பன்னீர் செல்வத்தின் பரம எதிரியான தங்கதமிழ் செல்வன் மீண்டும் அதிமுகவில் இணை வாய்ப்பு இருக்கிறதா ? தேர்தலில் இருக்கிற எல்லா பணத்தையும் இழந்து நிற்கும் தங்கதமிழ்செல்வன் தற்போது ஒரு முழுமையான முடிவு எடுத்து தான் நிற்கிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பன்னீர் செல்வத்துக்கு ட்வீட் வைப்பது போல எப்படியாவது தங்க தமிழ்ச்செல்வனை நம் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சிலருக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராம்.

ஆனால் அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புதிய வலதுகரம் செந்தில்பாலாஜி மதுரை – தேனி பக்கம் மு.க. அழகிரிக்கு அரசியலை சமாளிக்க தங்கதமிழ்செல்வன் நமக்கு தேவை என்பதால் எப்படியும் திமுக பக்கம் தான் வருவார் எல்லாம் பேசி முடிச்சாச்சு. சட்டமன்ற கூடும் போது எல்லா அரசியல் கூத்தும் அரங்கேறும் என்கிறார்கள்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.