6 MP தொகுதியில் களம் இறங்கிய மதிமுக ! அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் !

0

பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது  திமுக கூட்டணி  (?)  பரபரப்பாகும் அரசியல் களம்

பாஜகவோடு கூட்டணி முறிந்துவிட்டது என்று அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை எழுத்துப்பூர்வமாகவும் வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் மிகவும் வலுவான நிலையில் திமுக கூட்டணி உள்ளது என்று கூட்டணிக் கட்சியினரும் கூறிவந்தனர். இந்தியா டூ டே, டைம்ஸ் நவ் நிறுவனங்கள் நடத்திய 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 53% வாக்குகளைப் பெற்றுத் தமிழ்நாடு+புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

https://businesstrichy.com/the-royal-mahal/

வைகோ - துரை வைகோ
வைகோ – துரை வைகோ

கடந்த செப்.15 மதுரையில் மதிமுக நடத்திய அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் பேசிய அக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ‘நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை’ என்றும் ‘கட்சி நிறுத்தும் வேட்பாளரின் வெற்றிக்கு உழைப்பேன்’ என்று தெரிவித்திருந்தார். காரணம் திமுக துரை வைகோவை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வற்புறுத்தியதே என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மதிமுக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் வழங்கப்பட்ட ஒரே தொகுதியான ஈரோட்டில் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். இந்த முறை அதிக இடங்களில் போட்டியிடவும் மேலும் பம்பரம் சின்னத்தில் போட்டியிடவும் மதிமுக விரும்புகின்றது என்பதைக் கட்சியின் முன்னணித் தலைவர்களின் பேச்சுகள் வழி உணர்ந்துகொள்ள முடிந்தது.

மதிமுக கோரும் இடங்களைக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுக தரமறுத்தால் ஒருவேளை அதிமுகவோடு இணைந்தோ அல்லது தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவரின் வாட்ஆப்பில் ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது என்னவெனில் மதிமுக 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டது என்றும் ஈரோடு, விருதுநகர், திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை என்று தொகுதிகளின் பெயரையும் அறிவிக்கப்பட்டிருந்தது. மதிமுக வட்டாரத்திலிருந்து 6 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களும் தெரியவந்துள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஈரோடு – கணேசமூர்த்தி (தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்)
விருதுநகர் – துரை வைகோ (கழக முதன்மைச் செயலாளர்)
திருச்சி – டாக்டர் ரொஹையா (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
காஞ்சிபுரம் (தனி) – மல்லைச் சத்யா (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
கடலூர் – மு.செந்திலதிபன் (கழகப் பொருளாளர்)
மயிலாடுதுறை – ஆசைத்தம்பி (மாநில இளைஞர் அணி)

வைகோ - மு.க. ஸ்டாலின்
வைகோ – மு.க. ஸ்டாலின்

மதிமுக வட்டாரத்திலிருந்து கிடைத்த செய்திகள் என்னவெனில்,“மதிமுக தன்னுடைய பம்பரம் சின்னத்தில் நிற்கவேண்டும் என்று விரும்பியே 6 தொகுதிகளைக் கோருகின்றது. 4 தொகுதிகள் கிடைத்தால் திமுக கூட்டணியில் நீடிக்கும். இல்லையென்றால் தனித்தே களம் காணும். இந்தியா கூட்டணியில் நீடிப்போம். அதிமுகவோடு கூட்டணி என்பது கிடையாது.

கேரளாவில் இந்தியக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போட்டியிடுகின்றன. மேற்கு வங்கத்தில் இந்தியக் கூட்டணியில் உள்ள திருணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர்.

டெல்லியில் இந்தியக் கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் போட்டியிடுகின்றன. வெற்றிபெறுவர் இந்தியக் கூட்டணி என்று கூறிக்கொள்வார்கள். அதுபோலத் தமிழ்நாட்டில் தனித்து நின்று மதிமுக வெற்றி பெற்றால் இந்தியக் கூட்டணி வெற்றி என்று கூறிக்கொள்வோம்” என்கிறார்கள்.

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பான்னு அழைப்போம் என்ற நாட்டுப்புறச் சொலவடைதான் நினைவுக்கு வருகின்றது.

– சிறப்பு செய்தியாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.