செய்தியாக்கும் முன் சின்ன ஆய்வுகள் அவசியம் என்பதுகூடத் தெரியவில்லை😡😡😡

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

செய்தியாக்கும் முன் சின்ன ஆய்வுகள் அவசியம் என்பதுகூடத் தெரியவில்லை😡😡😡

உண்மையில் சில youtube செய்தி சேனல்களின் செய்திகள் கண்ணில் படும்போது செம எரிச்சலாக இருக்கிறது. ஒரு சின்ன ஆய்வோ அல்லது google பண்ணிப்பார்த்தாலே போதுமான தகவல் கிடைத்துவிடும். அதை விட்டு பரபரப்புக்காக எதையாவது போடணும்ன்னு போட்டு அதிலும் தெளிவில்லாமல் பேசி குழப்பத்தை ஏற்படுத்தின்னு கடுப்பைத்தான் ஏற்படுத்துகிறார்கள்.

 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இன்று காலை bhindwoods செய்தி ஒன்று கண்ணில் பட்டது. அதில் ஒருவருக்கு வேலை பார்க்கும்போது கையில் வெட்டுப்படுகிறது. தையில் போடச் சொல்லி அருகே இருக்கும் அரசு ஆரம்பிச் சுகாதார நிலையம் செல்கிறார். மருத்துவர் பணி முடிந்து சென்றிருந்த நிலையில், பணி செவிலியர் மட்டுமே இருந்திருக்கிறார்.

 

அவரிடம் காட்டப்பட்டு தையில் போடுங்கள் எனக் கேட்டுள்ளார். ஆனால் தையல் போடாமல் ஸ்டாபிளர் பின் போட்டு அனுப்பி விட்டதாக குற்றச்சாட்டுடன் செய்தியாக்கப் பட்டிருக்கிறது. அந்தச் செய்தியில் காட்டப்பட்டக் காணொளியை வேறு ப்ளர் செய்துவிட்டனர். செவிலியர் மீதும், மருத்துவர் மீதும் நடவடிக்கை வேணும் என்று முடிகிறது செய்தி.

 

3

பார்த்தவுடன் செமக் கடுப்பு கூந்தல்தான் வந்தது. ஒரேயொரு சின்ன ஆய்வுதான் தேவை. அது என்னான்னா நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ஸ்டாப்பிளர் பின்கள் நம் உடலில் அடிக்க முடியாது. அப்படியே அடித்தாலும் காயத்தை மூடும் அளவுக்கு கட்டாயம் அது செயல்படாது.

ஆனால் மருத்துவத் துறையில் அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டாப்பிளர் பின்கள் கட்டாயம் காயத்தை மூடும். இன்னும் சொல்லப்போனால் தையலை விடத் தழும்புகள் குறைவாகவே தெரியும். இவற்றையும் கடந்து இன்று அறுவை சிகிச்சைகளில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டன.

 

4

பேஸ்ட் போட்டு கிழிக்கப்பட்ட பகுதிகளை தையல், ஸ்டாப்பிளர் போன்றவை இல்லாமல் ஒட்டி விடுவது முதல் தழும்புகளே இல்லாத அறுவைசிகிச்சைகள் வரை என்றெல்லாம் முன்னேற்றம் அடைந்துவருகிறது.

 

பொதுமக்களுக்கு வேண்டுமானால் இவைக் குறித்த அறிமுகமோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் செய்தியாக்குபவர்கள் இதனைப் பற்றித் தெரிந்து கொள்லாமலும், ஆய்வு செய்யாமலும் உடனடியாக மருத்துவர் மற்றும் செவிலியரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கி, செய்தியானதால் விசாரணை மற்றும் கூடுதல் சுமை என்றெல்லாம் அனுபவித்து மீண்டு வருவதற்கு போதும்போதுமென ஆகிவிடும்.

– இனியன் மூத்த பத்திரிகையாளர்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.