அங்குசம் பார்வையில் ‘ஜோ’ படம் எப்படி இருக்கு ! ..      

0

அங்குசம் பார்வையில் ‘ஜோ’ படம் எப்படி இருக்கு ! ..      

ஜோ -படம்
ஜோ -படம்

தயாரிப்பு: ‘விஷன் சினிமா ஹவுஸ்’ டி.அருளானந்து & மேத்யூ அருளானந்து. எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: வீரசங்கர். டைரக்டர்: ஹரிகரன் ராம்.எஸ். ஆர்ட்டிஸ்ட்: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிஹா, சார்லி, பிரவீனா, இளங்கோ குமரன், அன்புதாசன், பிரவீன், வினோத். ஒளிப்பதிவு: ராகுல் கே.ஜி.விக்னேஷ், இசை: சித்து குமார், எடிட்டிங்: வருண் கே.ஜி. பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர்.

இராமேஸ்வரத்தில் +2 முடித்து விட்டு கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பை தொடர்கிறார் ஜோ (ரியோ ராஜ்). அதே கல்லூரியில் தனது வகுப்பறை மாணவியான கேரளாவைச் சேர்ந்த மாளவிகா மனோஜ் மீது காதல் கொள்கிறார். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு மாளவிகா விடம் ரியோ காதலைச் சொல்ல, அவரும் ஓகே சொல்கிறார். ஒரு கட்டத்தில் மாளவிகாவின் வீட்டுக்கு போய், அவரது பெற்றோரிடம் தங்களின் காதலைச் சொல்லிவிடுகிறார் ரியோ.

அப்போது நடக்கும் கைகலப்பில் தனது அப்பாவை ரியோ தள்ளிவிட்டதாக நினைத்து ஆத்திரப்படும் மாளவிகா, ” வீட்டைவிட்டு வெளியே போ. இனிமேல் என் முகத்துல முழிக்காதே” என்கிறார். இதை நினைத்து குடிக்க ஆரம்பிக்கிறார் ரியோ. மாளவிகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கப் போவது தெரிந்து நண்பர்களுடன் ஆலப்புழா செல்கிறார் ரியோ. ஆனால் அங்கே அவருக்கு பேரதிர்ச்சி. மணக்கோலத்தில் இருக்க வேண்டிய மாளவிகா, பிணக்கோலத்தில் இருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs
Joe's film
Joe’s film

தனது லவ்வர் தற்கொலைக்கு தான் தான் காரணம் என நினைத்து ரியோவும் தற்கொலைக்கு முயன்று நண்பர்களால் காப்பாற்றப்படுகிறார். அதன் பின் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறார். தாலி கட்டுவதற்கு முதல் நாள் இரவு, ரியோவுக்கு போன் பண்ணி ” இந்த கல்யாணத்ல எனக்கு இஷ்டமில்லை. அதனால் நீயே கல்யாணத்தை நிப்பாட்டிரு” என்கிறார் மணப்பெண் பவ்யா. ஆனாலும் கல்யாணம் நடந்து விடுகிறது. இதனால் ரியோ மீது அதிக வெறுப்பு காட்டுகிறார் பவ்யா.

அதன் பின்னர் க்ளைமாக்ஸை நோக்கி நடக்கும் ஜோரான ஆட்டம் தான் இந்த ‘ஜோ’. படத்தின் ஒன் லைன் மட்டுமல்ல, மெயின் லைனே, டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம் ‘ தான் என்றாலும் கரண்ட் சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி ஃப்ரெஷ்ஷான சீன்களையும் நம்பும்படியான க்ளைமாக்ஸையும் வைத்து ‘ஜோ’ வின் ஆட்டத்தை ஜோர் ஆக்கிவிட்டார் டைரக்டர் ஹரிகரன் ராம். படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே நமக்கு சில லாஜிக் ஓட்டைகள் தெரிய, அதையும் சில கேரக்டர்கள் பேசும் டயலாக் மூலம் அடைத்து விடுகிறார் டைரக்டர்.

ஜியோவின் 5 ஜி சிம்கார்டு மாதிரி செம ஸ்மார்ட் & ஸ்பீடாக இருக்கார் ரியோ. ரியோவின் காதலியாக வரும் மாளவிகா மனோஜ், ரொம்பவே சின்னப் பொண்ணு மாதிரி தெரிந்தாலும் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி. மனைவியாக வரும் பவ்யா நல்ல உயரம், நல்ல கலர், நல்ல நடிப்பு என கவனிக்க வைக்கிறார். கேமரா மேன் ராகுல் விக்னேஷ் நல்ல ரசனைக்காரர் போல. காட்சிகளின் பேக் ரவுண்டில் பல விஷுவல்களை காட்டி ரசிக்க வைக்கிறார். மியூசிக் டைரக்டர் சித்து குமார், பேக்ரவுண்ட் ஸ்கோர் செம ஜோர். இடைவேளை வரை குட் ஃபீல் லவ். இடைவேளைக்குப் பிறகு ஃபேமிலி ஜவ். இருந்தாலும் இந்த ‘ ஜோ’ வுக்கு “ஜே” போடலாம்.      ‌

– மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.