உலகக் கோப்பை – கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது எப்படி ?

0

உலகக் கோப்பை – கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது எப்படி ?

ஐசிசி (International Cricket Council) என்னும் உலகளாவிய கிரிக்கெட் அமைப்பு இந்தியாவில் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் உள்ள கிரிக்கெட் அமைப்புடன் சேர்ந்து கடந்த 45 நாள்களுக்கு மேலாக நடத்தியது. இதில் 10 அணிகள் கலந்துகொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒருமுறை மோதின. இதில் 9 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் இந்தியா அணி இருந்து வந்தது. இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா இருந்தது. இந்த இரு அணிகளுக்கும் கடந்த 19.11.2023ஆம் நாள் குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ள இரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எப்படிச் சாத்தியமானது என்பதைப் பற்றி விவரிக்கின்றது இந்தக் கட்டுரை.

https://businesstrichy.com/the-royal-mahal/

இந்தியா தொடர் வெற்றி
இந்தியா தொடர் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை 2முறை இந்தியா கோப்பையை வென்றிருக்கின்றது. ஆஸ்திரேலியா 5 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா வலுவான அணி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால் 2023 தற்போது நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆடிய 9 ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றது. டாஸ்-இல் வெற்றி பெற்று இந்தியா பேட்டிங் செய்தபோதும், டாஸ்-இல் வெற்றிபெறாத நிலையில் அடுத்த நிலை பேட்டிங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது உலகக் கோப்பையை வென்றிருக்கும் ஆஸ்திரேலியாவை லீக் போட்டியில் இந்தியா வெற்றி கண்டது என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது. இந்தியாவின் கோப்பை கனவை ஆஸ்திரேலியா எப்படித் தகர்த்துக் கோப்பையைத் தன்வசப்படுத்திக்கொண்டது என்பதில்தான் ஆஸ்திரேலியாவின் மதிநுட்பம் சார்ந்த வியூகம் வெற்றிபெற்றுள்ளது என்பதே சாலப்பொருத்தமுடையதாகும்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இறுதிப்போட்டி – ஆஸ்திரேலியாவின் வியூகம்

இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா – ஆஸ்திரேலியா

இறுதிப்போட்டி குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப் போட்டியைக் காணத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற அரசியல் தலைவர்களும் இந்தியத் திரைநட்சத்திரங்களும் பல்வேறு முக்கிய விஐபிகளும் கலந்துகொண்டனர். இந்திய மண்ணில் இந்திய அணி வெற்றிபெறும் என்ற எண்ணத்தோடு இலட்சக்கணக்கில் இரசிகர்கள் கூடுவார்கள்.

அவர்களின் ஆரவாரத்தை யாரலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே இருக்கும். மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடத்த லீக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறும்போது, இந்திய இரசிகர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்ட வண்ணம் இருந்தார்கள். இது பாகிஸ்தான் அணி வீரர்களின் மனஉறுதியைக் குலைப்பதாகவே அமைந்திருந்தது.

ஆஸ்திரேலியா அணி தலைவர் கம்மின்ஸ்
ஆஸ்திரேலியா அணி தலைவர் கம்மின்ஸ்

இதை மனதில் கொண்டு ஆஸ்திரேலியா அணி தலைவர் கம்மின்ஸ் 18.11.2023ஆம் நாள் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,“இறுதிப்போட்டியில் இந்திய அணியை நாங்கள் வெற்றிகொள்கிறோமோ அல்லது தோல்வியடையப் போகின்றோமா என்பதல்ல பிரச்சனை; இறுதி ஆட்டத்தைக் காண வரும் 1,30,000 இலட்சம் இந்திய இரசிகர்களை (வந்தது 1,60,000) அமைதியாக இருக்கையில் இருக்க வைப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுப்போம்” என்றார். இந்தச் செய்தியை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இந்திய அணி வெற்றிபெறும் என்ற மனநிலையில் தொடர்ந்து இருந்து வந்தது. அப்படியானால் இந்திய இரசிகர்களை அமைதியாக உட்கார வைக்க ஆஸ்திரேலியா ஏதோ ஒரு “சம்பவத்தை” செய்ய இருக்கின்றது என்பதை மட்டும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அந்தச் சம்பவம் யாராலும் அனுமானிக்க முடியாத அளவிற்குப் பரமரகசியமாகவே ஆஸ்திரேலியா வைத்திருந்தது என்பதில்தான் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கான வியூகம் தொடங்கியது

ஆடுகளத்தில் அரங்கேறிய சம்பவம்

சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாடு

19.11.2023 ஞாயிறு சூரியனின் ஒளி பிரகாசமாகவே இருந்தது. மழை வருவதற்கான அறிகுறியாக மேகங்கள் எங்கேயும் இல்லை. இந்தியக் கிரிக்கெட் இரசிகர்களுக்கு மட்டுமல்ல; இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை நல்லபடியாகவே பிறந்தது. அகமதாபாத் நரேந்திரமோடி விளையாட்டு அரங்கின் கொள்ளளவு 1,30,000 பேர். கொள்ளவை மீறி 1,60,000 பேர் கலந்துகொண்டனர். அகமதாபாத் அரங்கைச் சுற்றிச் சுமார் 10 இலட்சம் நின்றுகொண்டிருந்தனர். இந்தியாவின் சுமார் 140 கோடி மக்களும் தங்களின் நண்பகல் உணவை 1.00 மணிக்கெல்லாம் முடித்துக்கொண்டு, தொலைக்காட்சி மற்றும் அலைபேசி வழி YouTube மூலம் கிரிக்கெட் போட்டியைக் காணத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் பெருநகரங்கள் பிற்பகல் 1.30 மணியளவில் வெறிச்சோடி இருப்பதைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. மேலும், இந்தியாவின் வெற்றிக்காக நாட்டு மக்கள் அனைவரும் கோவில்களில் பிரார்த்தனை செய்தனர். ஆஸ்திரேலியா தோற்கவேண்டும் என்பதற்காக முட்டை மந்திரத்து வைத்தார்கள். வெற்றிக்காக யாகம் வளர்த்தார்கள். பள்ளிக்கூட மாணவ, மாணவியர் 100 மீட்டர் நீளத்திற்கு இந்தியத் தேசியக் கொடியை ஏந்தியும், பறக்கவிட்டும் இந்தியாவின் வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சியின் தலைவர்கள் பலரும் இந்தியா வெற்றிபெறச் சமூக வலைதளங்களில் தங்களின் வாழ்த்துகளைப் பரிமாறியிருந்தனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

டாஸ்...
டாஸ்…

பகல் 1.45 மணியளவில் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளத்தில், யார் ஆட்டத்தைத் தொடங்குவது என்பதற்கான டாஸ் என்னும் பூவா தலையா போடப்பட்டது. அதில் தலை விழுந்து ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இந்திய அணியினர் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் தொடங்குவார்கள். நாம் போலிங் என்னும் பந்து வீச்சைத் தொடங்குவோம் என்ற மனநிலையில் இருந்தார்கள். யாரும் எதிர்பார்க்க வண்ணம் ஆஸ்திரேலியா அணித் தலைவர்,“இந்தியா பேட்டிங் செய்யட்டும். நாங்கள் பந்து வீச்சைத் தொடங்குகிறோம்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தியா டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங்கைத்தான் தொடங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆஸ்திரேலியா டாஸ் வென்று “நம்மைப் பேட்டிங் செய்யச் சொல்கிறார்களே” என்பதில் ஆஸ்திரேலியா “ஒரு சம்பவத்தை” நிகழ்த்த உள்ளது என்பதை அறியாமல் இந்தியா பேட்டிங் செய்யத் தொடங்கியது என்பதில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வியூகம் செயல்படத் தொடங்கியது.

இந்திய அணி ஆட்டத்தில் இரசிகர்களின் அமைதி

இந்திய அணி ஆட்டத்தில் இரசிகர்களின் அமைதி
இந்திய அணி ஆட்டத்தில் இரசிகர்களின் அமைதி

பிற்பகல் 2.00 மணியளவில் இந்திய அணியின் சார்பில் ரோகித் மற்றும் கில் பேட்டிங்கைத் தொடங்கினர். இருவரும் அடித்து ஆடினர். ரன் ஸ்கோர் 10 என்ற அளவில் உயர்ந்திருந்தது. இரசிகர்களின் ஆரவாரம் களத்தில் பெரிதாக இருந்தது. 4 ரன் எடுத்திருந்த நிலையில் கில் ஆட்டமிழந்தார். அடுத்துக் கோஹ்லி ஆடவந்தார். ரோகித் கோஹ்லியும் பொறுப்புடன் ஆடி ரன் ரேட்டை உயர்த்தினர். 7ஆவது ஓவரில் கோஹ்லி தொடர்ந்து 3 பந்துகளில் தொடர்ந்து பவுண்டரி அடித்து இரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தார். 10ஆவது ஓவரில் மேகஸ்வெல் வீசிய பந்துகளில் அடுத்தது சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடித்து விளையாடி ரோகித் அடுத்த பந்தில் தேவையில்லாமல் ஆடி ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய ஷ்ரேயாஸ் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை இந்தியா எடுத்தது. ரன் ரேட் நல்ல அளவில் இருந்தாலும் விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறத் தொடங்கியது. கோஹ்லி, கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் இந்தியாவின் ரன் எடுக்கும் வேகம் கட்டுப்படுத்தியது. ரன் ரேட் 8 அளவில் இருந்தது 5 என்ற அளவிற்குக் குறையத் தொடங்கியது.

கோஹ்லி 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜடேஜா விளையாடி 9 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இராகுல் 66 ரன் எடுத்து அடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா வீசிய 99 பந்துகளில் 77 பந்துகளில் இந்திய அணி ஒரு ஓட்டத்தைக்கூட எடுக்கவில்லை. இந்திய இரசிகர்களின் ஆரவாரம் குறைந்து அமைதியாக இருந்தனர். இந்திய அணி எடுக்கும் ஒரு ஒட்டத்திற்குக்கூட ரசிகர்கள் ‘ஆக’ என்று ஆஸ்திரேலியா சொல்ல வைத்ததுதான் அந்தச் சம்பவமோ என எண்ணத் தோன்றியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 50 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது. இந்த லீக் போட்டியின் 9 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவில்லை. இறுதிப்போட்டியில் மட்டுமே இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பது முக்கியச் சம்பவமாக இருந்தது. இந்தியா எடுத்த 240 ரன்களை ஆஸ்திரேலியா எளிதாக எடுத்துவிடும் என்றும் இந்தியா ஒருவேளை தோல்வியடையுமோ என்ற மனநிலைக்கு இந்திய இரசிகர்கள் தள்ளப்பட்டார்கள் என்பதில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வியூகம் வேகம் கொண்டது.

ஆஸ்திரேலியா அணி ஆட்டத்திலும் இரசிகர்கள் அமைதி

1,60,000 பேர் - அமைதியில் உறைந்த ரசிகர்கள்..
1,60,000 பேர் அமைதியில் உறைந்த ரசிகர்கள்..

241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியாவின் வார்னர் மற்றும் ஹெட் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கினர். வார்னர் 7 ரன் எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஷமி வீசிப் பந்தில் முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவைக் கண்டு அமைதியாக இருந்த இந்திய இரசிகர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கினர். மார்ஷ் 15 ஓட்டங்கள் எடுத்தும், ஸ்மித் 4 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை எடுத்தது இந்திய இரசிகர்களை மகிழ்ச்சி கொள்ளவைத்தது. இந்தியப் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தங்களின் தாக்குதலைத் தொடங்கினர். ஹெட் மற்றும் லாபுஷேன் ஜோடி நங்கூரம் பாய்ச்சி நின்று மிகவும் நிதானமாக விளையாடினர்.

அடிக்க வேண்டிய பந்தை அடித்தும், தட்டிக் கொடுக்கவேண்டிய பந்தைத் தட்டிக் கொடுத்தும் ரன் ரேட்டை ஆஸ்திரேலிய வீரர்கள் உயர்த்திக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய வீரர்கள் கொடுத்த வாய்ப்பை இந்தியா தவறவிட்டனர். 10 ஓவர் தொடங்கி 49ஆவது ஓவர் வரை ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை எடுக்கமுடியாமல் இந்திய அணி திணறத் தொடங்கியது. 20 ஓவர் தொடங்கி 50ஆவது ஓவர் ஆட்டம் முடியும் வரை இந்திய இரசிகர்கள் கைகட்டி, வாய்பொத்தி அமைதியாக இருந்தனர்.

ஒரு சிறு ஆரவாரம்கூட ஆடுகளத்தில் யாரும் எழுப்பவில்லை. 40ஆவது ஓவரில் இந்தியாவின் தோல்வி உறுதி செய்யப்பட்டவுடன் இந்திய இரசிகர்கள் தங்களின் இருக்கைகளைவிட்டு எழத் தொடங்கிவிட்டனர். அரங்கத்தில் பாதி இருக்கைகள் காலியாகிவிட்டன. 49.5ஆவது ஓவரில் 137 ரன் எடுத்திருந்த ஹெட் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் மொத்த ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன் எடுத்திருந்தது. அடுத்து ஆடவந்த மேக்ஸ்வெல் 50ஆவது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தியாவின் தோல்வி என்பது ஆஸ்திரேலியா ஆடிய 20 ஓவரில் தெரியத் தொடங்கிவிட்டது. 40ஆவது ஓவரில் உறுதியானது. ஏதாவது அதிசயம் நடந்தால்தான் இந்தியாவுக்கு வெற்றி என்ற மனநிலையில்தான் இந்திய இரசிகர்கள் இருந்தனர். இந்தியா வெற்றி பெறும் என்ற பெருத்த நம்பிக்கையோடு இருந்த இரசிகர்கள் மற்றும் மக்கள் ஆஸ்திரேலியாவின் வெற்றியால் மனச்சிதைவுக்கு உள்ளனார்கள் என்பதைப் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய கிரிக்கெட் இரசிகர்களின் பேட்டிகள் வெளிப்படுத்திய வண்ணம் இருந்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய 2ஆவது நாடு என்ற பெருமை கொண்ட இந்தியாவை வெறும் 3 கோடி மக்கள்தொகையை மட்டும் கொண்டுள்ள ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருப்பதும், ஆடுகளத்தில் இரசிகர்களை அமைதியாக இருக்க வைக்க அவர்கள் முன்வைத்த வியூகமும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் முன்வைக்கும் கேள்வி “9 லீக் ஆட்டங்களில் அதிரடிகாட்டி ஆடிய இந்தியா, இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைபற்ற வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியாவிடம் அதிரடியைக் காட்டாதது ஏன். எங்களின் கனவு ஏன் கானல் நீரானது” என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.