நெருக்கடியில் தமிழக ஆளுநர் – இருக்கும் இரண்டு வாய்ப்புகள் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தமிழக ஆளுநருக்கு இருக்கும் வாய்ப்புகள்  இரண்டு !

ஆளுனர் - தமிழக முதல்வர்
ஆளுனர் – தமிழக முதல்வர்

“தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன் வடிவு என்னும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துக் காலம் கடத்துகிறார். இதனால் மக்கள் நலப் பணிகள் செய்யமுடியாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இதனைக் கருத்தில்கொண்டு ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஒரு கால நிர்ணயம் செய்யவேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு நவம்பர் 10 தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, “மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஏன் காலதாமதம் செய்கிறார் என்பதற்கு உரிய விளக்கம் அளிக்கவேண்டும்” என்று ஆளுநருக்கும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கும் உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை நவம்பர் 20ஆம் நாளுக்கு ஒத்திவைத்தது.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
3

இந்நிலையில், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் கிடப்பில் போட்டு வைத்திருந்த 15 கோப்புகளில் 10 மசோதாக்கள் அடங்கிய கோப்புகளை 13ஆம் நாள் கையெழுத்திட்டுத் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தார். திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட அந்த 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பி வைப்பதற்கு இன்னென்ன காரணங்கள் என்று எதையும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளார் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அவைத்தலைவர் அப்பாவு
அவைத்தலைவர் அப்பாவு
4

மேலும், ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை எந்த மாற்றமுமின்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கத் தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் 18.11.2023ஆம் நாள் கூட்டம் அவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. 10 மசோதாக்கள் மீது மீண்டும் விவாதம் நடத்தப்பட்டு, அந்த மசோதாக்கள் அனைத்தும் முறைப்படி மீண்டும் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்னர்ச் சட்ட அமைச்சகத்தின் வழியாக 18.11.2023ஆம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அலுவலகம் 10 மசோதாக்கள் அடங்கிய கோப்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 19.11.2023ஆம் நாள் ஆளுநர் உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை பெற மாலை 5.00 மணிக்குத் தலைநகர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தலைமை நீதிபதி சந்திரசூட்
தலைமை நீதிபதி சந்திரசூட்

நவம்பர் 20ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நேர்நின்று வாதங்களை முன்வைத்தார். அப்போது சிங்வி,“ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 15 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. ஆளுநருக்கு அவகாசம் தேவையெனில் வரும் சனிக்கிழமை வரை எடுத்துக்கொள்ளலாம்”என்றார்.

வழக்கறிஞர் முகுல் ரோத்தகி
வழக்கறிஞர் முகுல் ரோத்தகி

தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கில் நேர்நின்று வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,“ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தால் அதற்காகக் காரணங்களைக் குறிப்பிடவேண்டும். காரணம் கூறாமல் மசோதாக்களைத் திருப்பி அனுப்பமுடியாது என்று அரசியல் சாசனம் குறிப்பிடுகின்றது. ஆளுநர் 10 மசோதாக்களை எந்தக் காரணமும் கூறாமல் திருப்பி அனுப்பியுள்ளார்” என்று வாதிட்டார்.

தலைமை நீதிபதி ஒன்றிய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியைப் பார்த்து, “கடந்த 10 தேதி ஆளுநருக்கு விளக்கம் கேட்டு, உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவசரஅவசரமாக ஆளுநர் 13ஆம் நாள் 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி
அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி

இது எங்களுக்குக் கவலையளிக்கின்றது. 2020ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்றால் கடந்த 3 ஆண்டு காலம் ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார். உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் ஏன் காத்திருக்கவேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

அட்டார்னி ஜெனரல் விளக்கம் அளிக்கும்போது,“தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.இரவி 2021ஆம் ஆண்டுதான் ஆளுநராகப் பொறுப்பேற்றார்” என்றவுடன், தலைமை நீதிபதி,“நாங்கள் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பேசவில்லை, ஆளுநர் அலுவலகச் செயல்பாடுகள் குறித்துப் பேசுகிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவின்படி ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கலாம். அல்லது வழங்காமல் மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கலாம். அல்லது குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்ற இந்த 3 நடவடிக்கைகளை மட்டுமே ஆளுநர் மேற்கொள்ளவேண்டும். தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கமுடியாது என்று ஆளுநர் சொல்லமுடியுமா?” என்ற கேள்விகளை எழுப்பினார்.

வழக்கறிஞர் சிங்வி
வழக்கறிஞர் சிங்வி

வழக்கறிஞர் சிங்வி வாதிடும்போது, “ஆளுநருக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் என்று அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவு குறிப்பிடுகின்றது. எந்த விளக்கமும் அளிக்காமல் மசோதாக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் அம் மசோதாக்களை இனிக் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கமுடியாது. ஒப்புதல் தந்தாகவேண்டும் என்றுதான் அரசியல் சாசனம் குறிப்பிடுகின்றது” என்றார்.

வழக்கறிஞர் வில்சன்
வழக்கறிஞர் வில்சன்

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நேர்நின்று வாதிட்ட மற்றொரு வழக்கறிஞர் வில்சன்,“அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க 5 ஆண்டுகள் காலஅவகாசம் எடுத்துக்கொண்டால் மாநில அரசின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும்” என்று வாதிட்டார். அப்போது பேசிய தலைமை நீதிபதி,“அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவது ஆளுநரின் தனிப்பட்ட முடிவு.

2020 ஆண்டு தொடங்கி ஆளுநர் 181 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்துள்ளார். 5 மசோதாக்கள் அரசால் திரும்பப்பெறப்பட்டுள்ளது. 9 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. 5 மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்று ஆளுநர் ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அட்டார்னி ஜெனரல்,“ஆளுநர் தற்போது பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். இந்த வேந்தர் பொறுப்பைப் பறிக்கும் விதத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஒரு சிக்கலான பிரச்சனை. இதில் ஆளுநர் முடிவெடுக்கக் காலஅவகாசம் தேவைப்படுகின்றது” என்றார். தலைமை நீதிபதி காலஅவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

M.K.S Vs RN
M.K.S Vs RN

அடுத்த விசாரணையை எப்போது வைத்துக்கொள்ளலாம்” என்று கேட்டதற்கு, அட்டார்னி ஜெனரல் அடுத்தவாரத்திற்கு வழக்கை ஒத்திவைக்கலாம்” என்றவுடன், வழக்கு டிசம்பர் 1ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆளுநர் 10 மசோதாக்களை ஏன் காரணம் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பினார் என்பதற்கான விளக்கத்தை வரும் 29ஆம் நாளுக்குள் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கவேண்டும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆளுநர் அரசியல் சாசனத்தின்படி நடந்துகொள்ளாமல் தனிமனித விருப்பு வெறுப்புடன் நடந்துகொள்கிறார் என்று வழக்கில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்று ஆளுநர் தரப்புக்கு வாக்கலாத்து வாங்கி உள்ளூர் பிஜேபி பிரமுகர்கள் தொலைக்காட்சி ஊடகங்களில் பேசிவருகின்றனர்.

ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர் அட்டார்னி ஜெனரல் எங்கேயும் ஆளுநருக்குச் சட்டப்படி எல்லா வகையான உரிமையும் இருக்கிறது என்று எங்கேயும் பேசவில்லை. உள்துறை அமைச்சகம் ஆளுநரைக் கைவிட்டுவிட்டதுபோல் உள்ளது. ஆளுநருக்கு இருக்கும் வழிகள் இரண்டு. 1. மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தது தமிழ்நாடு அரசோடு இணக்கமாக இருப்பது 2. ஆளுநர் பதவியிலிருந்து விலகிக்கொள்வது என்பதாகும். ஆளுநர் எதைச் செய்யப்போகிறார் என்பதை டிசம்பர் 1ஆம்நாள் விசாரணை தெளிவுபடுத்திவிடும்.

ஆதவன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.