ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பரிசு பெற்ற திருச்சி அணிக்கு பாராட்டு விழா !

0

அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே ... தொடர்பு எண் - 9488842025 அங்குசம் இதழ் டிசம்பர் 1-15 (2023) இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி நாமக்கல் மாவட்டத்தில் 14. 09. 23 முதல் 17. 09. 23 வரை நடைப்பெற்றது . இதில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தை பெற்றது.

இதில் பரிசு பெற்றவருக்கு 20.09.23 புதன் மாலை 6.30 மணியளவில் திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி தளவாய் (TSP 1BN) அலுவலத்தில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு விழா நடந்தது.

2

திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில் , பொருளாளர் ரவிசங்கர், துனண செயலாளர் ரமேஷ், கனகராஜ், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023
ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023
3

நாமக்கல் நடந்த தமிழ்நாடு மாவட்ட அளவிளான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 திருச்சி மாவட்ட அளவில் 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் பெற்று 6வது இடம் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கேடயம் பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி தளவாய் (Commandant of Police ) எம். ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நினைவு பரிசு உடன் பாராட்டு சான்றிதழ் , வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவிற்கு திருச்சி மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் லாசர், நடராஜ், இளங்கோ, லட்சுமணன் , ஜீவா, தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி தளவாய் அதிகாரிகள் மற்றும் தடகள வீரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.