“சித்தர் வாக்கு தான் இந்தப் படம்” –‘கடைசி உலகப் போர்’ குறித்து ஹிப் ஹாப் ஆதி சொன்னது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“சித்தர் வாக்கு தான் இந்தப் படம்” –‘கடைசி உலகப் போர்’ குறித்து ஹிப் ஹாப் ஆதி சொன்னது! ஹிப்ஹாப் தமிழா எண்டெர்டெயின்மென்ட் பேனரில் ஹிப்ஹாப் தமிழா ஆதி தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் படம் ‘கடைசி உலகப்போர்’.  போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.

இந்த செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது ‘கடைசி உலகப் போர்’. இதனையொட்டி படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் செப்டம்பர் 11–ஆம் தேதி சென்னை பி.எஸ்.ஜி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

kadaisi ulaga por
kadaisi ulaga por

இந்நிகழ்வில் பேசியவர்கள்…. இயக்குநர் சுந்தர் சி.
“என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார்.அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் ஆதி போன்ற என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை தம்பி ஆதி வளர்ந்து  வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. மென்மேலும் அவன் வளர என் வாழ்த்துகள்”.

நடிகர் நட்டி (எ) நட்ராஜ் “இந்தப்படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர் சி குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஹிப் ஹாப் ஆதியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்துவிட்டேன். இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்”.

இயக்குநர், நடிகர் அழகம் பெருமாள் “புதுப்பேட்டைக்குப் பிறகு எனக்கு அமைந்த மிகச்சிறந்த படமென இதைச் சொல்வேன். புலிப்பாண்டி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். புதுப்பேட்டையிலிருந்து, மாறுபட்ட வித்தியாசமான அரசியல்வாதியாக படத்தில் வருகிறேன். இந்த மாதிரி படம் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை. நிச்சயம் ஒரு கல்ட் சினிமாவாக இப்படம் இருக்கும்.

ஆதியைப் பார்த்துப் பிரமிப்பு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது அண்ணனாக என்னையும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி. இந்தக்குழு அத்தனை நுணுக்கமாக அயராத உழைப்பைத் தந்துள்ளனர்”.

kadaisi ulaga por
kadaisi ulaga por

நடிகர் சிங்கம்புலி
‘ஹிப் ஹாப் ஆதியை முதன் முதலில் சுந்தர் சி சாருடன் தான் பார்த்தேன். உங்களை மிகவும் பிடிக்கும், என் முதல் படத்திலிருந்து உங்களை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன் என்றார். இந்தப்படத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தில் நடிக்கும் போது அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொண்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒரு கமர்ஷியல் படத்தை எடுப்பதை விட்டுவிட்டு, கடைசி உலகப்போர் என ஒரு அழுத்தமான படத்தை எடுக்கும் அவரது மனதுக்கு வாழ்த்துகள். பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடக்கும் போது, ஆதிக்கு அம்மை வந்துவிட்டது ஆனாலும் ஷூட்டிங் வர்றேன் என்றார். ஆனால் நான் தான் அவரை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தேன்.  அவரது அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள்”.

நடன இயக்குனர் கல்யாண்
“நான் நடித்து பல வருடமாகிவிட்டது. ஆதி சொன்ன பிறகு இந்தப்படத்தில் நடித்தேன். இவ்வளவு சின்ன வயதில் மிக மெச்சூர்டாக படம் செய்வது, மிகப்பெரிய விசயம். மொத்த டீமும் அவ்வளவு சிரத்தையாக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்”.

நடிகர் குமரவேல் “மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு மீண்டும் ஹிப்ஹாப் ஆதியுடன் நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. சுந்தர் சி இரண்டு நல்ல மனமுள்ள இளைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் ஆதியின் மொத்த டீமும் அற்புதமாக உழைத்துள்ளார்கள்”. ஹீரோயின் அனகா “ஆதியுடன் இது இரண்டாவது படம். கதையே மிக வித்தியாசமாக இருந்தது. நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஆதி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். நான் இதுவரை செய்யாத மிக வித்தியாசமான ரோல், படக்குழுவினரின் ஒத்துழைப்பில் ரொம்ப ஈஸியாக நடித்தேன். எல்லோருக்கும் நன்றி. இந்தப்படம் மிக மிக வித்தியாசமான படமாக இருக்கும்”.

ஒளிப்பதிவு அர்ஜூன்ராஜா
“இந்தக்கதை சொல்லும் போதே “புதிதாக ஒரு விசயத்தை முயற்சி செய்துள்ளோம்.ரசிகர்களுக்கு மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது”.

kadaisi ulaga por
kadaisi ulaga por

ஹிப் ஹாப் தமிழா ஆதி
“என்னை அறிமுகம் செய்த சுந்தர் சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி. நட்டி சாருக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல், மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறையப் பேர் நடித்துள்ளார்கள். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாகப் பெரிய நடிகராக வருவார். இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும்.  இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில்நுட்பக் கலைஞர்கள் தான். அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம்.

நாகு சார் அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார். எங்கள் டீம் தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ஜீவா தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளார். தயாரித்த அனுபவமே புதிது தான். ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே! எனும் சித்தர் வாக்கு தான் இந்தப்படத்தின் அடிப்படை. நாம் சண்டையிட்டுக்கொண்டால் உலகம் அழிந்து போய் விடும் என்பது தான் இப்படம். ரசிகர்களுக்குக் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்”.

ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில்  நாசர், நட்டி, அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா சாரா குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்பக் குழு–
இயக்குநர்&
தயாரிப்பாளர்: ஹிப் ஹாப் ஆதி.
ஒளிப்பதிவு : அர்ஜூன்ராஜா .
இசை: ஹிப் ஹாப் ஆதி
எடிட்டர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குநர் : R.K நாகு
சண்டைப் பயிற்சி : மகேஷ் மேத்யூ
பாடல்கள் : ஹிப்ஹாப் ஆதி, விக்னேஷ் ஸ்ரீகாந்த், FOTTY SEVEN, சிவவாக்கியார்.
ஒலி வடிவமைப்பாளர் : ராகவ் ரமேஷ், ஹரி பிரசாத் M.A
VFX : 85FX
ஆடை வடிவமைப்பாளர் : கீர்த்தி வாசன்
தயாரிப்பு மேற்பார்வை : C. ஹரி வெங்கட்
நிர்வாக மேலாளர் : கோகுல்நாத், எஸ். பார்த்திபன்
நிர்வாகத் தயாரிப்பாளர் : வாசுதேவன்
மக்கள் தொடர் : சதீஷ் குமார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.