அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

செந்நிறச் சூரியன் !

கலைஞரின் படைப்பாற்றல் - 3

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்ட முத்தமிழறிஞர் கலைஞருக்கு கம்யூனிச சித்தாந்தத் தலைவர்கள் மீது எப்போதுமே மதிப்பு உண்டு. “பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நான் கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன்“ என்றவர் கலைஞர். அவர் பிறந்த அன்றைய கீழத்தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிச இயக்கமும் திராவிட இயக்கமும் ஆழமாக வேர் ஊன்றியிருந்தன. அதனால் கலைஞரின் படைப்புகளில் சமூக நீதிக் குரலுடன் உழைப்பாளர் உரிமைக் குரலும் வெளிப்படும்.

“உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்தவர் யார்?” என்ற கேள்விக்கு, கலைஞர் சொன்ன பதில் ஃபிடல் காஸ்ட்ரோ. புரட்சியின் மூலம் கியூபாவை, அமெரிக்காவின் பொம்மை ஆட்சியிலிருந்து விடுதலையடையச் செய்து, அதன் அதிபராக இருந்த கம்யூனிசத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், 2006 ஆம் ஆண்டு சென்னையில் கியூபாவின் பெருமைப் போற்றும் விழா ஒன்றில் கலந்து கொண்டு, காஸ்ட்ரோ பற்றிய தனது கவிதையையும் வாசித்தார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

ஃபிடல் காஸ்ட்ரோ
ஃபிடல் காஸ்ட்ரோ

கியூபா சின்னஞ் சிறிய நாடு

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

ஆயிரக்கணக்கான

தீவுகள்கொண்ட

அழகிய தேன்கூடு.

தேன்கூடென்று

ஏன் சொல்கிறேன் தெரியுமா?

தெரியாமல் அமெரிக்கா

கை வைக்கும் போதெல்லாம்

கொட்டிவிடும் தேனீக்கள்

கியூபாவின் மக்கள் – அந்தக்

கூடு காக்கும் காவல்காரர்தான்

ஃபிடல் காஸ்ட்ரோ!

– ஒருங்கிணைந்த உழைப்பில் உருவாவதுதான் தேன்கூடு. புரட்சிக்குப் பிறகான உழைப்பில் கட்டமைக்கப்பட்ட கியூபாவுக்கு தேன்கூட்டையே அருமையான உவமையாக்கியிருந்தார் கலைஞர்.

உலக வரைபடத்தில் அமெரிக்காவுக்கு கீழே கியூபா இருந்தாலும், தன் மீதான அமெரிக்கா வல்லரசின் ஆதிக்கத்தை அது எதிர்த்து நின்று முறியடித்ததையும் மற்றொரு அழகான உவமையால் விளக்கினார்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

வாழை- தென்னை மரங்களை

வலிமைமிகு துதிக்கையால்

யானை முறித்துப் போட்டுவிடும்.

அந்த யானை போன்றதே

அமெரிக்கா என்றனர்.

அதற்கு காஸ்ட்ரோ

அஞ்சி நடுங்கவில்லை.

வாழை மரம் தென்னை மரங்களை

யானை வாயிலே

போட்டுக் கொள்ளலாம்

எளிதாக! ஆனால்

அங்குசத்தை யானை

விழுங்க முடியுமா?

அங்குசந்தான் கியூபா

அமெரிக்க யானைக்கு!

– கலைஞர் இந்த வரிகளைப் படித்தபோது அரங்கம் அதிர்ந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் மூலமாக இந்தக்  கவிதை மொழிபெயர்க்கப்பட்டு, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களிடமே வழங்கப்பட்டது. அவர் மிகவும் மகிழ்ந்து தனது மேசையில் அதனை வைத்துக்கொண்டார். தன்னைக் கவர்ந்த உலகத் தலைவரின் இதயத்தையும் தன் படைப்பாற்றலால் கவர்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தொடரும்

–              கோவி.லெனின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.