“அடல்ட் காமெடி தான், ஆனால் முகச்சுழிப்பு இருக்காது”– ‘பெருசு’ பத்தி கார்த்திக் சுப்புராஜ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. வரும்  14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதால், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் 08-ஆம் தேதி மதியம் நடந்தது.

இதில் பேசியோர்….

இனிய ரமலான் வாழ்த்துகள்

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம்,

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணித் தான் இந்தியாவில் படங்கள் இருக்கும்.  மேற்கத்திய நாடுகளில் இதை  சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம்,
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம்,

இந்த விஷயங்களை ‘பெருசு’ படத்தில் உடைத்து சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம். அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம். இதை சாத்தியப்படுத்திக்  கொடுத்த டைரக்டர் இளங்கோ ராமுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. எங்களுடன் இணைந்து பவேஜா ஸ்டுடியோஸூம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவு தேவை”.

 வசன கர்த்தா பாலாஜி,

“எழுத்தாளராக இதுதான் எனக்கு முதல் படம். இதற்கு முன்பு நான் வெப்சீரிஸில் எழுதியிருக்கிறேன். அடல்ட் காமெடி என்றாலும் பார்க்கும் யாரும் முகம் சுழிக்கும்படியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக கதை-வசனம் எழுதியிருக்கிறோம். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”

நடிகை தனலட்சுமி,

“இந்தப் படம் எனக்கு பெரிய வாய்ப்பு. என்னைப் பல பேர் ‘நக்கலைட்ஸ் மூலம் காமெடி கதாபாத்திரத்தில் தான்  பாத்திருப்பீர்கள். ஆனால், இதில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் வளர்ந்திருக்கிறேன். சாவு என்பதை யாராலும்  தவிர்க்க முடியாதது. அந்த யதார்த்தத்தை இந்தப் படம் சொல்லியிருக்கிறது”.

நடிகர் சுவாமிநாதன், 

“சுந்தர்.சி எப்படி படத்தை ஜாலியாக எடுப்பாரோ அதேபோல இளங்கோவும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுப்பார். குடும்பத்துடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம் இது”.

நடிகர் கஜராஜ்,

“எனக்கும் காமெடி வரும் என நம்பி வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர்  இளங்கோ ராமுக்கும் நன்றி. நான் நன்றாக நடித்திருக்கிறேன்னு எனது மகன் கார்த்திக் சுப்புராஜும்சொல்லிட்டான். மக்களாகிய நீங்களும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டிக் கொள்கிறேன்”.

நடிகர் கருணாகரன்,

“முதல்முறையாக எனக்கு ஒரு கதையை இயக்குநர் சொல்லவில்லை. தயாரிப்பாளர், நடிகர் வைபவ் என மற்றவர்கள்தான் கதை சொன்னார்கள். அருமையான படமாக வந்திருக்கிறது. கிரேஸி மோகனின்  டச் படத்தில் இருக்கும். ஜாலியான காமெடி படத்தில் நடித்தது மகிழ்ச்சி”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகர் முனீஷ்காந்த்,

“கார்த்திக் சுப்புராஜ் சாரை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருந்தேன்.  ஆனால் அவரோ   இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துவிட்டார். அடல்ட் படம் என்று இதை சொன்னாலும் கதையில் எந்த முகாந்திரமும் அதற்கானதாக இருக்காது. நல்ல படமாக வந்திருக்கிறது”.

நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி,

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

“இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.   எல்லாரும் சூப்பர் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்”.

நடிகர் பால சரவணன்,

“இந்த அடல்ட் காமெடி கதையை எல்லோரும் பார்க்கும்படி முகம் சுழிக்காத வண்ணம் படமாக்கியுள்ளார் இயக்குநர் இளங்கோ ராம். இந்தப் படம் என் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும். வாய்ப்பு தந்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத அனுபவமாக இந்தப் படம் இருக்கும். ’பெருசு’ நின்னு பேசும்”.

நடிகை சாந்தினி,
நடிகை சாந்தினி,

நடிகை சாந்தினி,

“இந்த வருடம் எனக்கு பெரிதாக அமைந்துள்ளது. மூன்றாவது படம் எனக்கு ரிலீஸ் ஆகிறது. சத்தியமாக இதுபோன்ற கதை இதற்கு முன்பு வந்தததில்லை. எப்படி இப்படி ஒரு கதையை இயக்குநர் யோசித்தார் என்பது ஆச்சரியம்தான்.  படத்தில் என்ன ‘பெருசு’  என்பதை  திரையரங்கில் வந்து பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக குடும்பமாக வந்து பார்க்கலாம்”.

ஹீரோயின்  நிஹாரிகா,

“பாலாஜி சாருக்கு முதலில் நன்றி. அவர்தான் என்னை இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கார்த்திக் சுப்புராஜ் சாருடன் வேலை பார்த்தது எனக்கு பெருமை. நான் ஸ்கூல், காலேஜ் படித்த காலத்தில் இருந்து பார்த்து வளர்ந்த நடிகர்களுடன் சேர்ந்து நான் நடித்திருப்பது மகிழ்ச்சி”.

ஹீரோயின்  நிஹாரிகா,
ஹீரோயின்  நிஹாரிகா,

விநியோகஸ்தகர் சக்திவேலன்,

“இந்த வருடம் ‘பெருசு’ படத்துடன் ஸ்டோன் பெஞ்ச்சுக்கு பாசிட்டிவாக தொடங்கும்.  ஸ்டோன் பெஞ்ச் மிகவும் விருப்பதுடன் படம் செய்யக்கூடியவர்கள். நல்ல சினிமாவை ரசிகர்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.  ’பெருசு’ படம் தொடங்கும்போதே பெரிய ட்விஸ்ட் இருக்கும். மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்”.

இயக்குநர் இளங்கோ ராம்,

“படத்தை நல்லவிதமாக கொண்டு போய்ச் சேர்க்க நல்ல பேனர் கொண்ட தயாரிப்பாளர்கள் முக்கியம். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. ‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும். வைபவ்- சுனில் இந்த கதைக்கு மிகப்பொருத்தமாக இருந்தார்கள். தனம், சுவாமிநாதன், கஜராஜ், தீபா என எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். எந்த இடத்திலும் முகம் சுழிக்க மாட்டீர்கள். நல்ல டீம் எனக்கு கிடைத்துள்ளது”.

ஹீரோ வைபவ்,

ஹீரோ வைபவ்,
ஹீரோ வைபவ்,

“குடும்பத்துடன் பார்க்கும்படியான சூப்பராக கதையாக வந்துள்ளது.  நீங்கள் தியேட்டரில் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். படத்தில் நடித்த எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் செம ஜாலியாக சென்றது. உங்களைப் போலவே நானும் படம் பார்க்க ஆவலாக உள்ளேன். என் அண்ணன் கூட முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறேன்”.

 கார்த்திக் சுப்புராஜ்,

“நானும் ராம் சாரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் நல்ல படங்கள் வந்தால் என்னிடம் சொவ்வார். அப்படித்தான் ‘கூழாங்கல்’ படம் நாங்கள் பிரசண்ட் செய்வதாக இருந்தது. சில காரணங்களால் அது மிஸ் ஆனது. பின்பு ராம் சார் சொன்ன படம் தான் இந்த ‘பெருசு’. மற்றவர்களை சிரிக்க வைப்பது கடினமான விஷயம். வசனகர்த்தா பாலாஜி அதை சிறப்பாக செய்திருக்கிறார்.

 கார்த்திக் சுப்புராஜ்,
கார்த்திக் சுப்புராஜ்,

கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நான் தான் வைபவ்வும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சரியாக எழுதப்பட்ட கதை இது. உங்கள் ஆதரவு தேவை”.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.