அங்குசம் பார்வையில் ‘கருடன்’

0

அங்குசம் பார்வையில் ‘கருடன்’ – தயாரிப்பு: ‘லார்க் ஸ்டுடியோஸ்’ கே.குமார் & ‘கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ்’ வெற்றிமாறன். ரிலீஸ்; ஃபைவ் ஸ்டார் கே.செந்தில்குமார். டைரக்‌ஷன்: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். நடிகர்—நடிகைகள்: சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, சமுத்திரக்கனி, ஷிவதா, பிரிஹிடா சாஹா, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, ரோஷிணி ஹரிப்ரியன். இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ.வில்சன், எடிட்டிங்: பிரதீப் இ.ராகவ். பி.ஆர்.ஓ.யுவராஜ்

Karudan review
Karudan review
கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

தேனி மாவட்டம் கோம்பையில் ஆதியும் [சசிக்குமார் ] கருணாவும் [ உன்னி முகுந்தன் ] இளம் பிராயத்திலிருந்தே  உயிர் நண்பர்கள். அம்மா-அப்பா இல்லாத அனாதையாக சாமியார்கள் மடத்தில் இருக்கும் ஒரு சிறுவனிடம் நட்பு பாராட்டி தனது வீட்டிற்கு அழைத்து வருகிறான் கருணா. அவனுக்கு சொக்கன் [ சூரி ] என்று பெயர் வைக்கிறார் கருணாவின் அப்பத்தா செல்லாயி [ வடிவுக்கரசி ]. அன்றிலிருந்து கருணாவின் விசுவாசமிக்க தம்பியாக இருக்கும் சொக்கன், ஆதியையும் அண்ணனாக நினைத்து பாசம் காட்டுகிறான்.

வாழ்ந்துகெட்ட ஜமீனான கருணா, செங்கல் சூளை நடத்துகிறான். லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி, நண்பனுக்கு உதவியாக இருக்கிறான் ஆதி. இந்த இருவரின் அன்பு வளையத்திற்குள் இருந்தாலும் கருணாவின் தீவிர விசுவாசியாக இருக்கிறான் சொக்கன்.

- Advertisement -

சென்னையில் இருக்கும் 350 ஏக்கர் காலி நிலம் கோம்பையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமானது என்ற விபரமும் அந்த நிலத்திற்கான ஒரிஜினல் பத்திரமும் பட்டயமும் கோவிலின் தர்மகர்த்தா செல்லாயி பாதுகாப்பில், வங்கி லாக்கரில் இருக்கும் விபரமும் பத்திரப்பதிவு அமைச்சர் தங்கபாண்டியனுக்கு [ ஆர்.வி.உதயகுமார் ] தெரிகிறது. அந்த 350 ஏக்கர் நிலத்தை ஆட்டையைப் போட தேவாரத்தில் குவாரி நடத்தும்  தனது கைத்தடி மைம் கோபிக்கு உதவுமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனிக்கு உத்தரவு போடுகிறார் அமைச்சர்.

இதற்காக களத்தில் இறங்கும் போது தான் ஆதி-கருணா-சொக்கன் கூட்டணி பற்றித் தெரியவருகிறது சமுத்திரக்கனிக்கு. அதன் பின் நடக்கும் சகுனி ஆட்டம், ரத்தவெறியாட்டம்  தான் இந்த ‘கருடன்’.

Karudan review
Karudan review

சும்மா சொல்லக் கூடாது சொக்கன் கேரக்டரில் சொக்க வைக்கிறார், அசர வைக்கிறார், ஆச்சர்யப்பட வைக்கிறார், அதிர வைக்கிறார் சூரி. கட்டம் போட்ட முக்கால்கை சட்டை, தொள தொள பேண்ட், ரப்பர் செருப்பு, கையைத் தொங்கவிட்டபடியே பாடிலாங்குவேஜ், கொம்பன் படத்தில் வேட்டைக்குப் போகும் சுடலைமாடசாமி [ராஜ்கிரண்] சாமி வந்து ஆடும் ஆவேசம் ஆங்காரக்கூச்சல் போல, இந்த சொக்கனுக்கும் சாமி வந்து ஆடும் ஆங்காரக் கூச்சல், க்ளைமாக்சில் மைம் கோபியுடனும் உன்னி முகுந்தனுடனும் போடும் சண்டையில் ஆவேசப் பாய்ச்சல், விண்ணரசியுடன் [ ரேவதி சர்மா ] காதல்  என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடிவிட்டார் மனுசன்.

சூரியின் சினிமா கேரியர் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதை சூதானமாக பார்த்துக் கொள்வதும் சூரியின் கைகளில் தான் உள்ளது.

4 bismi svs

சூரிக்கு நிகரான கேரக்டர் என்றால் அது நம்ம சசிக்குமாருக்குத் தான். எதிரிகளிடம் விலை போய், தனக்கு துரோகியாக மாறும் கருணா [ கேரக்டருக்குப் பேரு கரெக்டாத்தான் வச்சிருக்காரு டைரக்டர் ]வின் கையாலேயே வெட்டுப்பட்டுச் சாகும் காட்சியில் சிலிர்க்க வைக்கிறார் சசிக்குமார்.

ஆள் பார்க்க வாட்டசாட்டமாக இருந்தாலும் கருணா கேரக்டரின் வெயிட்டைத் தாங்கி நடிக்க ரொம்பவே திணறியிருக்கிறார் உன்னி முகுந்தன். போலீஸ் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனியின் பார்வையில் ஃப்ளாஷ்பேக்காக கதை நகர்வதால், எந்தக் குறையும் இல்லாமல்  நிறைவாகவே நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

சொக்கனின் சொக்கியாக விண்ணரசியாக வரும் ரேவதி சர்மாவின் முகத்தில் இருக்கும் சில பருக்கள் பேரழகு. நடிப்பு அழகோ அழகு. சசிக்குமாரின் மனைவியாக வரும் ஷிவதாவுக்கும் வெயிட்டான கேரக்டர் தான். சில சீன்களே வந்தாலும் செல்லாயி அப்பத்தா வடிவுக்கரசி, தான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபித்துவிட்டார்.

Karudan review
Karudan review

பாசம், விசுவாசம், துரோகம், வன்மம் இவற்றை தனது பின்னணி இசை மூலமும் பாடல்கள் மூலமும் நம்ம மனசுக்குள் இறக்குகிறார் யுவன்சங்கர் ராஜா. ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனின் அபார உழைப்பு சபாஷ் போட வைக்கிறது.

தேனி மாவட்டம் கோம்பையில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சொந்தமான 350 ஏக்கர் நிலம் சென்னையில் சும்மா கிடக்குமா? அரசாங்கம் தான் அதை கண்டு கொள்ளாமல் இருக்குமா? மைம் கோபி சொன்னவுடனே கோவில் தர்மகர்த்தா தேர்தல் நடத்துவது,  ஆயிரக்கணக்கான ஊர்மக்கள் கூடியிருக்கும் திருவிழாவில், கோவில் நிலத்திற்குரிய பட்டயத்தை, ஏதோ வானத்தில்விடும் பட்டத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போல மைம் கோபி கோஷ்டி ஓடுகிறது. அந்த கோஷ்டியை விரட்டிக் கொண்டு சசிக்குமார் ஓடுகிறார். அதை அம்புட்டு ஜனமும் தேமேன்னு வேடிக்கை பார்க்குது. இதெல்லாமே திரைக்கதைக்கு ரொம்பவே பலவீனம்.

மனிதர்களிடையே பகைக்கு காரணமே மண், பெண், பொன் இந்த மூன்றும் தான் என ஆரம்பத்திலேயே சொல்லிட்டோமேங்கிறதுக்காக கடைசி வரை அந்த மூன்றையும் குழப்பியடித்திருக்கிறார் டைரக்டர் துரை செந்தில்குமார்.

ஆனாலும் இந்த ‘கருடன்’ சூரிக்காக பறக்கிறான்.

–மதுரை மாறன்      

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.