அங்குசம் பார்வையில் ‘தி அக்காலி’

0

அங்குசம் பார்வையில் ‘தி அக்காலி’ [ The Akkaali ]   – தயாரிப்பு: பி.பி.எஸ்.புரொடக்‌ஷன்ஸ்’ பி.யுகேஸ்வரன், டைரக்‌ஷன்: மொஹமத் ஆசிஃப் ஹமீத். நடிகர்-நடிகைகள்: நாசர், தலைவாசல் விஜய், ஜெய்குமார், ஸ்வயம் சித்தா, வினோதினி வைத்தியநாதன், வினோத் கிஷன், அர்ஜெய், யாமினி, தாரணி ரெட்டி, சேகர், மஷிகா சபீர். ஒளிப்பதிவு: கிரி மர்பி, ஆர்ட் டைரக்டர்: தோட்டா தரணி, இசை: அனிஷ் மோகன், எடிட்டிங்: இனியவன் பாண்டியன், காஸ்ட்யூம் டிசைனர்: பூர்ணிமா ராமசாமி, பி.ஆர்.ஓ.நிகில் முருகன்.

சாத்தான்களின் தலைவனுக்குப் பேர் தான் அக்காலி என்பதை படத்தின் இடைவேளைக்கு சற்று முன்பாக அதுவும் பல மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் தான் அக்காலி என்பதை அரைகுறையாக சொல்லும் வரை,  படத்தில் என்ன நடக்கிறது, என்பதே நமக்கு புரிவதற்குள் இடைவேளை விட்டுவிடுகிறார்கள்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

ஆனால்  கிறிஸ்டியானிட்டி சம்பந்தப்பட்ட பேய், சாத்தான், பில்லி, சூன்யம், சூன்யக்காரி, மாந்த்ரீகம், சாத்தான்களை விரட்டியடிக்கும் பாதிரியார் இதெல்லாம் படத்தில் இருக்கு என்பதை நாம் ரிலாக்ஸாக விளங்கிக் கொள்ளத் தான் இடைவேளை விட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. என்னங்க இது, என்னதாங்க சொல்ல வர்றீகன்னு நீங்க நினைப்பது நமக்குப் புரிந்தளவுக்கு படத்தைப் புரிந்து கொள்ள ஏசுவின் கருணை நமக்கு கிடைக்கவில்லை.

அதனால் புரிஞ்சமட்டும் எழுதியிருக்கோம். முடிஞ்சமட்டும் புரிஞ்சிக்கங்க.

- Advertisement -

ஒரு நள்ளிரவு நேரம், அமானுஷ்யமான சர்ச், திகிலடைந்த பங்களா. இதற்குள் துப்பாக்கியுடன் நுழைகிறார் இன்ஸ்பெக்டர் ஹன்ஸா ரஹ்மான்.[ ஜெய்குமார் ]  ஒரு கருப்பு உருவம் சரக்குன்னு கிராஸ் ஆகிறது. கட் பண்ணா ஏழு வருசம் முன்னால நடந்த சில கொலைகள் குறித்து, அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ஜெய்குமாரிடம் விசாரிக்க வருகிறார் இப்போது இன்ஸ்பெக்டராக இருக்கும் செளம்யா [ ஸ்வயம் சித்தா ]`

4 bismi svs

அப்ப என்ன நடந்துச்சுன்னு கட் கட் பண்ணி சொல்கிறார் ஜெய்குமார். அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக்கில் தான் ஃபாதர் டொனால்ட் மற்றும் சாத்தான் செபாஸ்டியன் என இரு கேரக்டர்களில் நாசர், போலீஸ் அதிகாரியாக தலைவசால் விஜய், பத்திரிகை ஆசிரியராக வினோதினி வைத்தியநாதன், சூன்யக்காரக் கூட்டத்தின் தலைவி ஜானிஸ் டேவிட்டாக மஷிகா சபீர், பேய் பிடித்து பெரும்பாடுபடுபவராக தாரணி ரெட்டி, சாத்தானை விரட்ட ஐடியா கொடுக்கும் ஃபாதர் வின்செண்டாக வினோத் கிஷன் ஆகியோரெல்லாம் வருகிறார்கள்.

இடையிடையே ”அந்தக் கொலை அப்படி நடந்துச்சு, இந்தக் கொலை இப்படி நடந்திருக்கணும். ஐ ஆம் ஏ கரெக்ட்” என்கிறார் ஸ்வயம் சித்தா. “எஸ் அப்சல்யூட்லி கரெக்ட்” என்கிறார் ஜெய்குமார். ஏம்மா இன்ஸ்பெக்டர் செளம்யா ஒனக்குத் தான் எல்லாம் தெரிஞ்சிருக்கேம்மா. அப்புறம் ஏம்மா ஹம்சா ரஹ்மானை இம்சை பண்றே” என நமக்கு  கடுப்பு கிளம்புவது டைரக்டருக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னமோ, “இல்லம்மா அந்த இடத்துல அந்த நேரத்துல என்ன நடந்துச்சுன்னா..?” என்ற பிட்டைப் போடுகிறார் ஜெய்குமார்.

படத்தின் கேமராமேன் கிரி மர்பியும் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியும் உழைத்த அளவுக்கு டைரக்டர் மொஹமத் ஆசிஃப் ஹமீத் உழைக்கவில்லை என்பது தான் நிஜம். பொதுவாக கதை—திரைக்கதை எழுதிய பிறகு தான் ஷூட்டிங் போவார்கள். ஆனால் இந்த ‘அக்காலி’யை……?

அட கர்த்தரே….கர்த்தரே… இந்த மாதிரியான சினிமாவைப் பார்க்குறதுக்குன்னே தனியா, ஃப்ரஷ்ஷா ஒரு மூளையக் கொடுங்க கர்த்தரே… எங்களால முடியல கர்த்தரே…

–மதுரை மாறன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.