கிருஷ்ணகிரி; நாம் தமிழர் கட்சி பாலியல் குற்றவாளி சிவராமனும் தந்தையும் அடுத்தடுத்து மரணம் ! நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி; நாம் தமிழர் கட்சி பாலியல் குற்றவாளி சிவராமன் உயிரிழந்தான்! நடந்தது என்ன? – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி கந்திகுப்பம் கிங்ஸ்லி பள்ளி மாணவி தரப்பில் புகார் ஒன்று பதிவானது. அந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றன.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் பள்ளியில் என்.சி.சி முகாம் ஒன்று நடந்தது. இந்த முகாமில் பாதிக்கப்பட்ட மாணவியுடன் சேர்த்து 17 மாணவிகள் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலையில் என்.சி.சி அலுவலர் எனக் கூறப்பட்ட சிவராமன் என்பவர், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன.
தனக்கு நேர்ந்த கொடூரத்தை சக மாணவிகளிடமும் ஆசிரியைகளிடமும் மாணவி தெரியப்படுத்தியுள்ளார். சீனியர் மாணவிகளுடன் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் பாதிக்கப்பட்ட அந்த மாணவி முறையிட்டுள்ளார்.
அவரோ, ‘இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம். உங்கள் பெற்றோருக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள்’ எனக் கூறி மாணவியை திருப்பி அனுப்பியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து இதுதொடர்பாக, மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது தான், நடந்த கொடூரம் வெளியில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பாலியல் குற்றவாளி சிவராமன், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியை உள்பட 11 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
தேசிய மகளிர் ஆணையம்
சிவராமன் பாலியல் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணைய தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது . மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரி சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து நியாயமான விசாரணையை உறுதி செய்து 3 நாள்களுக்குள் காவல்துறை மற்றும் மாநி அரசு எடுத்த விரிவான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய அறிவுறுத்தியுள்ளது.
என்.சி.சி தலைமை அலுவலகத்தின் மறுப்பு
தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தலைமை அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரியில் நடந்தது போலியான என்.சி.சி முகாம் என்றும் முகாம் நடத்தியவர்களுக்கும் என்.சி.சி அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
“என்.சி.சி முகாமுக்காக பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இந்தப் பள்ளி இல்லை. கிருஷ்ணகிரியில் என்.சி.சி சார்பில் முகாம்களும் நடத்தப்படவில்லை,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சரயு
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், என்.சி.சி என்ற பெயரில் வெளியில் உள்ள ஆட்களை அழைத்து வந்து முகாம் நடத்தியதாக குறிப்பிடுகிறார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு.
“முகாமில் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல் எதுவும் பின்பற்றப்படவில்லை. முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டு வருகிறது. வேறு பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம்கள் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.
சிவராமன் மீது மோசடி வழக்கு
போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் தன்னை வக்கீல் என கூறி ₹36 லட்சம் மோசடி செய்த தாக கிருஷ்ணகிரி கொண்டே பள்ளி கிராமத்தை சேர்ந்த , சக்திவேல் மோகன், சாந்தி, நாராயணன், மஞ்சுளா, கோவிந்த சாமி மற்றும் சந்திரா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்து மேலும் சிவராமனுக்கு கிடுக்கிப்பிடியை ஏற்படுத்தினர்.
தமிழ்நாடு அரசு அதிரடி – தமிழக அரசின் 2 சிறப்பு குழுக்கள்.
இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் காவல்துறை தலைவர் பவானீஸ்வரி ஐ.பி.எஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஒரு பாலியல் வழக்கு.
இந்நிலையில், சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று பதிவானது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற சிவராமன் ?
பாலியல் வழக்கு வெளியே வந்ததும் தான் கைது செய்யப்பட்டுவிடுவோம் என அஞ்சியே சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகே அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
விசாரணை குழு ஆக்ஷன்
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு அமைத்த , குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கிருஷ்ணகிரிக்கு நேற்று முன் தினம் இரவே வந்துவிட்டனர் . இதைத் தொடர்ந்து நேற்று பல்நோக்கு குழுவின் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரனும், புலனாய்வுக் குழுவின் தலைவர் காவல்துறை அதிகாரி பவானீஸ்வரியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அதில் பேசிய காவல் துறை அதிகாரி பவானீஸ்வரி “இந்த சம்பவம் குறித்தும், இது போல மற்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அதையும் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விரைவாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம்” என்றார்.
அதற்கு பல்நோக்கு குழு தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் “பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், சம்பவம் நடந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கியிருக்கிறோம்.
மேலும் ஆலோசனைகள் வழங்குவோம் மேலும் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சிவராமன் இரண்டுமுறை எலி பேஸ்ட் சாப்பிட்டதை அடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார் விசாரணை அதிகாரி பாவானீஸ்வரி.
சிவராமன் தந்தை போதையில் அடிபட்டு மரணம் !
சிவராமனின் தந்தை அசோக்குமார், நேற்று மாலை குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சாலையில் நிலைத்தடுமாறி விழுந்ததில். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
பாலியல் குற்றவாளி சிவராமன் மரணம்
இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலியல் சிவராமனும் அவரது , தந்தையும் அடுத்தடுத்து ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக உள்ளது. சிவராமனின் பல குற்றங்கள் வெளிவருவதற்கு முன்னரே அவனின் மரணத்தால் முடிவுக்கு வந்தது.
– மணிகண்டன்