குளித்தலை அருகே  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

குளித்தலை அருகே  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள‌ பொய்யாமணி பஞ்சாயத்து கோட்டையார் தோட்டம்  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில்  கும்பாபிஷேக விழா இன்று காலை  நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. அன்று மாலை யாகசாலை பிரவேசம் யாகசாலை பூஜைகள் தீபாராதனைகள்  நடைபெற்றது. 19 ஆம் தேதி சனிக்கிழமை மங்கல இசையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், அன்று மாலை மூன்றாம் காலையாக பூஜையும் தீபாராதனைகள் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

செம்ம சூப்பரான திரைப்படம்..

4
இன்று 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மங்கல இசையுடன் கடம்‌ புறப்பாடும்,   கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
 கருவறையில் உள்ள சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும்  பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும்,  அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

-நௌஷாத்  

5
Leave A Reply

Your email address will not be published.