கடந்த இரண்டு மூன்று நாட்களில் முதல்வர் ஸ்டாலின் என்ன பண்ணியிருக்கார்னு தெரியுமா ?
கடந்த இரண்டு மூன்று நாட்களில் முதல்வர் ஸ்டாலின் என்ன பண்ணியிருக்கார்னு தெரியுமா ?
கடந்த இரண்டு மூன்று நாட்களில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளில் சில இவை.
1) ஆணவப்படுகொலை செய்த யுவராஜுக்கு ஆதரவாக மிரட்டல் பதிவு செய்த கட்டெறும்புக்காரன் கைது.
2)பள்ளியில் திமுகவினர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அவதூறு செய்தி பரப்பிய சங்கி கைது.
3) குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு ஆளுநர் ராவி பின்னே ஒளியும் சிதம்பரம் தீட்சிதர்கள் கைது
4)தலித்துகளைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் பூட்டி சீல் வைப்பு.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த தமிழ்நாடு எப்படி இருந்தது?
எத்தனை அண்ணல், பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டன?
ஆண்டாளை முன் வைத்த எச்சைகள் ஆடிய ஆட்டமென்ன?
ஹைக்கோர்ட்டாவது மயிராவது என்று சவால் விட்ட எச்சையின் மயிரைக் கூட அன்றைய அடிமை அரசு அசைக்க வில்லை.
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு செய்த சிப்பு சேகருக்குப் போலீஸ் சலாம் போட்டதா இல்லையா
நடூர் தீண்டாமைச் சுவர் 17 பேரைப் பலி வாங்கியது
எத்தனை ஆணவக்கொலைகள்? கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த பட்டியல் சாதியைச் சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா செத்தே போக வேண்டியிருந்தது.
பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், துரை குணா போன்ற எழுத்தாளர்கள் என்ன பாடு பட்டனர்?
அப்போதெல்லாம் முனகக்கூட தெரியாத நிறைய பேர் இப்போது திடீரென விவஸ்தை கெட்ட புரட்சிக்காரர்கள் ஆகி விட்டனர்.
அவர்களது சங்கி அடியாள் அரசியலால் ஊசலாடும் அப்பாவிகளுக்கு ஒன்று மட்டும் சொல்வேன்.
அரசு அனைவருக்கும் ஆனது. ஆட்சியையும் புரட்சியையும் அரசே செய்ய முடியாது.
நல்லாட்சி வழங்கக் கடமைப்பட்ட அரசு அதற்காக ரத்தக்களறியை உருவாக்க முடியாது.
அதன் முதல் கடமை சட்டம் ஒழுங்கைப் பேணுவதே!
– மணி மதிவாணன்