நாள்தோறும் வகைவகையான பிரசாதம் :  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பிரசாத பட்டியல் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

நாள்தோறும் வகைவகையான பிரசாதம் :  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பிரசாத பட்டியல் !

அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்த காட்சி
அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்த காட்சி

தமிழகத்தில் உள்ள 5 புகழ்பெற்ற கோயில்களில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் முதலானவை நாள்தோறும் வழங்கப்படும்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இத்திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த டிசம்பர் 31-ம் தேதி காணொளிக் காட்சி மூலம் திருவண்ணாமலை கோயிலுக்கும் விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். இதையடுத்து, திருவண்ணாமலை கோயிலில்  நடைபெற்ற  பிரசாதாம் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி  தொடங்கி வைத்தார் .


மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

பிரசாத பட்டியல்:

3

பௌர்ணமி நாட்கள்:       லட்டுகள் ( 1.25 இலட்சம் முதல் 1.50 இலட்சம் பக்தர்களுக்கு)

ஞாயிற்றுக் கிழமை:         லட்டுகள்  (60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு)

4

திங்கட்கிழமை:                    லட்டுகள்  (25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு)  

செவ்வாய்க்கிழமை:        எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் (25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு)

புதன்கிழமை:                        கேசரி  (25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு)

வியாழக்கிழமை:               லட்டுகள்  (25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு)

வெள்ளிக்கிழமை:             கேசரி  (60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு)

சனிக்கிழமை:                      லட்டுகள் ( 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு)  


 

பிரசாதமாக வழங்கப்படும் என திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரத்யேகமாக கோயில் வளாகத்தின் உள்ளேயே, அன்னதான கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணாமலையார் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக  நாள் முழுவதும் சுமார் 3000 பக்தர்களுக்கு அன்றாடம் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிவபக்தர் முருகன்
சிவபக்தர் முருகன்

”தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்து செல்லும் பக்தர்கள் பசி இன்றி அண்ணாமலையாரை  தரிசித்து செல்லும் காட்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவனிடம் வரம் கேட்டு வரும் பக்தர்களை வெறுங்கையோடு அனுப்பாமல், மனம் நிறையும்படி பிரசாதம் வழங்கி வழியனுப்பி வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி” என்கிறார் பக்தர் முருகன் நெகிழ்ச்சியோடு!

 மணிகண்டன்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.