கள்ள லாட்டரி அமோக விற்பனை காவல்துறை ஏன் வேடிக்கை பார்க்கிறது?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி அமோகமாக விற்பனை! 

லாட்டரி விற்பனையை தடுத்து வீடியோ வெளியிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது நேற்றைய தினம் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சேலம் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்த நிலையில் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் கூறுகையில்…

ஆளை கொலை செய்யும் அளவிற்கு கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர் அந்த அளவிற்கு சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது காலை 9.30 மணி அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்த பொழுதே இதுபோன்ற தியசக்திகள் செயல்பட்டு வருகிறது சமூக விரோத சக்திகள் சேலத்தில் தங்கு தடையின்றி நடைபெறுகிறது காவல்துறை இருக்கிறதா என்பதே ஒரு கேள்வி குறியாக உள்ளது இல்லையென்றால் அவ்வளவு தைரியமாக பட்ட பகலில் கொலை வெறி தாக்குதல் நடத்த தைரியம் வராது என்றார் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் காவல் துறையினருக்கும் ஒரு வலுவான பிணைப்பு இருப்பதால் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது காவல்துறையினர் லாட்டரி விற்பனையை தடுக்காமல் இருந்ததால் தான் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் ஏன் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் என்ன உறவு உள்ளது என்பதை நான் பகிரங்கமாக கேள்வியாக கேட்கிறேன் என்றார். பல ஆண்டு காலமாக தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடையில் உள்ளது சட்ட விரோதமாக தற்பொழுது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாயை தனி நபர்கள் வருமானமாக ஈட்டி வருகின்றனர் ஏழை மக்களை கொள்ளை அடிப்பதற்கு தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது காவல்துறை ஏன் வேடிக்கை பார்க்கிறது என்கிற கேள்வியை தான் நான் எழுப்ப விரும்புகிறேன் என்றார்

சேலத்தில் மட்டும் கள்ளத்தனமான லாட்டரி விற்பனை நடைபெறவில்லை தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது தமிழக முதல்வர் கள்ளச்சார ஒழிப்பு நடவடிக்கை ஈடுபட்டது போல் ஏழை எளிய மக்களை கொள்ளை அடிக்கக் கூடிய கள்ளத்தமான லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

பல நூறு கோடி ரூபாய் பணப்புழக்கம் இதில் ஏற்படுகிறது பெரிய பெரியவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவே அதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பெரியசாமி மீது தாக்குதல் நடத்திய சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கண் துடைப்பிற்காக தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு கணக்கிற்காக கைது செய்யக்கூடாது என்றார் இந்த தாக்குதலில் பின்பு உள்ளவர்கள் யார் என்பதை ஏன் காவல்துறையினர் விசாரணை செய்ய மறுக்கிறார்கள்

தாக்குதல் நடந்த பிறகு அதனை இட்டு கட்டுவதற்காக காவல்துறையினர் இந்த வழக்கை திசை திருப்புகின்றனர் என்றார் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறது அது ஏற்புடையதாக இல்லை இந்த தாக்குதலில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகள் தான் அது திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவும் இருந்தாலும் சரி அரசியல் கட்சியினர் யாராக இருந்தாலும் சரி இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சமூக விரோதிகள் தான் கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை செய்பவர்களை வேறு எவ்வாறு கூறுவது அவர்களை புனிதமானவர்கள் என்று கூறுவதா அல்லது யோக்கியர்கள் என்று கூறுவதாக என்று கேட்டார் லாட்டரி விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே சமூக விரோதிகள் தான் என்றார்.

-சோழன்தேவ்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.