வேட்டவலம் இலொயோலா கல்லூரியில் – ஜனநாயகம் மற்றும் சமூக நீதி விழிப்புணர்வு கருத்தரங்கம் !

0

அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே ... தொடர்பு எண் - 9488842025 அங்குசம் இதழ் டிசம்பர் 1-15 (2023) இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

வேட்டவலம் இலொயோலா கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம். எவிடன்ஸ் கதிர் பங்கேற்பு.

வேட்டவலம் இலொயோலா கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் எவிடன்ஸ் கதிர் பங்கேற்றார்.வேட்டவலம் இலொயோலா கல்லூரியின் மாணவர் பேரவை மற்றும் மதுரை எவிடன்ஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஜனநாயகம் மற்றும் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று கல்லூரியின் அருளாலயா கலையரங்கத்தில் நடந்தது.முதல்வர் பேசில் சேவியர் தலைமை தாங்கினார். அதிபர் மரியநாதன் ஆசியுரை வழங்கினார்.

2

செயலர் இஞ்ஞாசி முன்னிலை வகித்தார். மாணவி அபிஷா பிரின்சி வரவேற்றார். மாணவி வைஷ்ணவி சிறப்பு விருந்தின ரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர் கலந்துகொண்டு மாணவர்கள் ஜனநாயகத்தை பாதுகாத்திட சமூக நீதியை கொள்கையை பின்பற்றி நடக்க வேண்டும் என பேசினார். இதில் துணை முதல்வர் கேத்தரின் லவ்ரா,மாணவர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்,மற்றும் மாணவர் பேரவையினர், துறைத்தலைவர்கள்,பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கருத்தரங்கினை மாணவி உஷா தொகுத்து வழங்கினார்.முடிவில் மாணவி ப்ரீத்திஷா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.