கடந்த சில ஆண்டுகள் முன்பே இந்த மகாவிஷ்ணு என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு………

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நான் ஆக்டிவிஸ்ட் இல்லை. அதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். கடந்த சில ஆண்டுகள் முன்பே இந்த மகாவிஷ்ணு என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியைப் பார்த்து விரைவில் இவர் ஹிட் லிஸ்டில் இடம் பெறுவார். சரியான சம்பவம் காத்திருக்கிறது என எழுதி இருந்தேன். இப்போது அசோக் நகர் பள்ளியின் மூலம் அவர் கர்மா வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
இந்தப் பையன் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்தவர். அவரது அறைநண்பர் எடுத்த பேட்டி யூடியூப்பில் உள்ளது, தேவையானவர்கள் கண்டறிந்து கொள்ளலாம். இவர் நிருபர் வேலைக்கு முன்பாக காமெடி ஷோவில் ஜோக்ஸ் சொல்லிக் கைதட்டல் பெற்றவர். அதுவும் மட்டமான பொது ரசனையைத் தாண்டாத ஜோக்குகள் அவை. இப்போது வளர்ந்து ஆன்மிக குருவாக நிற்கிறார். நிறையவே ஜக்கி, நித்தி சாயல் கலந்த கலவை இவரிடம் தெரிகிறது. இவர் செய்யும் ஃபிராடு தனம் மூலம் அறிய முடிகிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

இந்த நபரை தேர்வு செய்தவர் யார்? அவரைப் பேச அழைத்து வந்தவர் யார் என்பது முக்கியமாகப் பதில் தேடிவேண்டிய விசயம். பள்ளிக்குப் பேச வந்தவர், இதை எல்லாம் சொல்லிக் கொடுத்தீர்களா? பாவ, புண்ணியம் பற்றி எல்லாம் கற்றுக் கொடுத்தீர்களா என்கிறார். பாடத் திட்டத்தில் பள்ளிக்கல்வி எதைப் பாடமாக வைத்துள்ளதோ அதைப் போதிப்பதே ஆசியப் பணி. கண்டதை கற்றுத் தர இது கைலாசா ஒன்றும் இல்லை. இந்த அதைப்படை கூடத் தெரியாமல் இந்தப் பிஞ்சு மூஞ்சு பேசுகிறார்.
மகாவிஷ்ணு
மகாவிஷ்ணு
ஒரு காலத்தில் 67 ஆயிரம் குருகுலங்கள் இருந்தன என்கிறார். அடுத்த வரியில் 3 லட்சத்து 23 ஆயிரம் குருகுலங்கள் இருந்தன என்கிறார். இதற்கு என்ன வரலாற்றுச் சான்று என்பதை அவர் சொல்லவில்லை. அடுத்ததாக அவர் கொடுத்த விளக்கத்தைக்கேட்டுப் புல்லரித்துப்போனேன். அதாவது ஒரு மந்திரம் சொன்னால் நெருப்பு மழை பெய்யுமாம். ஒரு மந்திரம் சொன்னால் பறந்து போகலாமாம். அத்தனை ரகசியமும் ஓலைச்சுவடியிலிருந்ததாம். அதை எல்லா பிரிட்டிஷ் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டதாம். அந்த ரகசியம் ஏதோ உவேசாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்தியாவைப் பிரிட்டிஷ் 200 ஆண்டுகள் தான் ஆட்சி செய்தது. 1757 தொடங்கி 1947வரை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலம். இந்தக் காலகட்டத்தில்தான் இந்த அழித்தொழிப்பு நடந்தது என்கிறார். இந்தியாவில் ஆவணங்கள் என்பதை நடைமுறைப் படுத்தியதே பிரிட்டிஷ் ஆட்சிதான். 1757 முதல் சற்று அதற்கு முன்னதாகவும் நம்மிடம் அனைத்தைப் பற்றியும் ஆவணங்கள் உள்ளன. அதை நடைமுறை செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். இவை அல்லாமல் டச்சு, பிரெஞ்ச் என ஆவணங்கள் உள்ளன. அதை எல்லாம் இந்த அறிவிலி படித்தாரா எனத் தெரியவில்லை. நெருப்பு மழை பெய்ததை மட்டும் பாட்டியிடம் படித்திருக்கிறார். அதில் தவறில்லை. அறிவு வளர்ந்ததும் பாட்டி நிலவில் வடை சுட்டக்கதையை மறந்துவிட வேண்டும். அதை மகத்துவம் என்று பேசக் கூடாது.

இவர் சொல்லும் இந்த 3 லட்சம் குருகுலங்களிலிருந்த பாடத் திட்டம் என்ன? அதில் யார் படித்தார்கள்? அவர்கள் எந்தநாட்டுக்குச் சென்று பன்னாட்டு கம்பெனியில் சி.இ.ஒ ஆனார்கள் என்பதை எல்லாம் பற்றி இவருக்கு ஞானல் இல்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் அடித்து விடுகிறார். அவ்வளவு கட்டுக்கதை. வெள்ளையர்கள் ஆட்சிக்கு முன்பாக 32 ஆயிரம் குருகுலம் இருந்தது எனத் தெரிந்தவருக்கு, இந்தியாவிலேயே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாடர்ன் யூனிவர்சிடி 1857இல் மெட்ராஸ் ராஜதானியில்தான் உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

மகாவிஷ்ணு
மகாவிஷ்ணு
இந்தியா விடுதலை பெற்ற இந்த 75 ஆண்டுகளில் 56 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 24 பல்கலைக் கழகங்கள் அரசுக்குச் சொந்தமானவை. கல்லூரிகள் மட்டும் 4231 கல்லூரிகள் உள்ளன. 74 மருத்துவக் கல்லூர்களில் 35 அரசுக்குச்சொந்தமானவை. 12 Deemed. 24 தனியார். தமிழ்நாட்டில் 600க்கும் மேல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் 574 தனியார் வசம் உள்ளது. 59 கல்லூரிகள் அரசுக்கு உரியவை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த மாற்றம் எல்லாம் இந்தியா விடுதலை பெற்றபிறகு கிடைத்தவை. அதைவிட முக்கியம் ஆங்கிலேயர்களின் அறிவின் தொடர்ச்சியாக உருவானவை. அடுத்து இந்திய அளவில் பார்ப்போம். நாடு முழுவதும் 1100 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் மத்திய அரசுக்கு 60 பல்கலைக் கழகங்கள் சொந்தமானவை. மாநில அரசுக்கு சொந்தமானவை 399. Deemed யூனிவர்சிடி 126 இருக்கின்றன. தனியார் பல்கலை மட்டும் 330 உள்ளன. இந்தியாவில் உள்ள 170 பல்கலைக்கழகங்கள் டாப் லிஸ்டில் உள்ளன. கல்லூரி பல்கலைக் கழகங்களைச் சேர்த்தால் மொத்தம் 61 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இவை இல்லாமல் மெட்ராஸ் ஐஐடி, பாம்பே ஐஐடி, கான்பூர் ஐஐடி, டெல்லி ஐஐடி என பல உயர்கல்வி நிறுவனங்கள் தரமாகச் செயல்படுகின்றன. மருத்துவக் கல்லூரி என பார்த்தால் இந்தியா முழுமைக்கு 706 உள்ளன. அதில் 386 அரசு நடத்துகிறது. 320 தனியார் நடத்தி வருகின்றது. அதேபோல நாடு முழுக்க 2500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 1400 பாலிடெனிக். ஆண்டுக்கு இந்தியா 1.5 மில்லியன் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது. இந்திய அரசின் மினிஸ்டரி ஆஃப் எஜிகேஷன் அறிக்கையின் படி ஒரு ஆண்டுக்கு 1 மில்லியன் மாணவர்கள் படித்துப் பட்டம் பெறுகிறார்கள். ஆண்டுக்கு 3.9 மில்லியன் பெண்கள் இளங்கலை படிப்பில் பட்டம் பெறுகிறார்கள். இது ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.
இந்தத் தரவுகளைத் தாண்டி விண்வெளி ஆய்வுகளுக்காக எஸ்.டி.எஸ்.சி, யு.ஆர்.எஸ்சி, எஸ்.ஏ.சி என 45 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தலையாய இஸ்ரோ இன்று மகாவிஷ்ணு சொன்ன மந்திரத்தைச் சொல்லாமலே நிலவுக்குப் போய் திரும்பியுள்ளனர். விக்ரம் சாராபாய் விண்வெளி கூடத்தில் உள்ளவர்கள் யாரும் இந்தப் பனை ஓலை மந்திரத்தைப் படித்து வேற்று கிரகண ஆராய்ச்சி செய்யவில்லை.
இந்தியாவில் அசோகன் என்ற மன்னர் ஆட்சி செய்தார் என 2 ஆயிரம் ஆண்டுகள் கழித்து உலகுக்குச் சொன்னவர்கள் பிரிட்ஷ்காரர்கள்தான். மானுடவியல் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு சிந்துவெளி நாகரிகம் என்று ஒன்று இந்தியாவிலிருந்தது என்று சொன்னவன் பிரிடிஷ்காரன். அவ்வளவு ஏன் தமிழ் பெருமை பேசும் நாட்டில் ராஜராஜன்தான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினார் எனச் சொல்ல ஒரு காலனிய ஆய்வாளன்தான் தேவைப்பட்டுள்ளான் என்பது வரலாறு.
இந்தப் பொடியன் சொல்லும் கட்டுக்கதைகளை ஹோமோசேமியன்ஸ் கூட உட்கார்ந்துகேட்காது. அப்படியான காலத்தில் நாம் இருக்கிறோம். அப்புறம் எப்படி ஆசிரியர் சங்கர் உட்கார்ந்து இவர் ஜபிக்கும் மந்திர மாயாஜாலங்களைக் கேட்பார். அது மனிதக் குலத்திற்கே எதிரானதில்லையா? இவ்வளவு வளர்ச்சி இவர் கண்களில் படவில்லை. இவர் போய் ஆஸ்திரேலியாவில் பாடம் நடத்துகிறார். எனக்குப் பெரியார் சொன்ன ஒரு ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. முட்டாள் முழுக்க இந்தியாவில்தான் இருப்பான் என நினைப்பதுகூட ஒருவகையான மூட நம்பிக்கைதான்.
கட்டுரை 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.