ஒற்றை ஆளாக இருந்தாலும் உப்பாகவும் ஒரப்பாகவும் இருப்பேன் – மன்சூர் அலிகான் அட்ராசிட்டி !

நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரச்சாரம் ஆரம்பித்து விட்டேன் ...

0

ஒற்றை ஆளாக இருந்தாலும் உப்பாகவும் ஒரப்பாகவும் இருப்பேன்
– மன்சூர் அலிகான் அட்ராசிட்டி !

ண்டைக்காட்சி நடிகராகவும், நடன கலைஞராகவும் சினிமாவில் தலைகாட்டத் தொடங்கி கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக தோன்றி மிரட்டியவர். காமெடி கலந்த அவரது வில்லத்தனம் சினிமாவில் பிரபலமானதைவிட, அவரது அன்றாட அரசியல் காமெடி அனைத்துமே குபீர் ரகம்தான்!

2 dhanalakshmi joseph

யாரையும் விட்டு வைப்பதுமில்லை; எதைப்பற்றியும் கவலைப்படுவதுமில்லை; கருத்து கந்தசாமியாகவே பந்தாவாக வலம் வரும் ஜாலியான மனிதர் மன்சூர் அலிகான் என்றால், மிகையல்ல!

ஏற்கனவே, தமிழ் தேசிய புலிகள் என தனிக் கட்சியைத் துவங்கியவர், இப்போது அதை இந்திய ஜனநாயக புலிகள் என்பதாக மாற்றியிருக்கிறார். தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் – 19 அன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் சொந்த ஊரான ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக களம் இறங்கியிருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

மற்ற அரசியல் கட்சிகள் எல்லோருக்கும் முன்பாகவே, வேலூர் பாராளுமன்றத்திற்குட்பட்ட குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.

வெட்டு ஒன்னு … துண்டு ரெண்டு …

பேரணாம்பட்டு கறிகடையொன்றில் நுழைந்தவர், உறித்து வைத்தக் கோழியை இரண்டு துண்டாக்கிவிட்டு, ”என்னை ஜெயிக்க வைத்தால் இதுபோலத்தான் டெல்லியிலும் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுனு மக்களுக்காக பேசுவேன்” என்றார்.

”சட்டசபையை கலகலப்பாக வைத்திருப்பதில் தேர்ந்தவரான அமைச்சர் துரைமுருகன் தனது சொந்த தொகுதி மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அவரது மகன் கதிர் ஆனந்த் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரெட்டிதோப்பு மேம்பாலம் கட்டித் தருவதாக கூறினார். இதுவரை நடக்கவில்லை. அந்த மேம்பாலத்தை கட்டி முடிக்கத்தான் வந்துள்ளேன்.” என்றார்.

4 bismi svs

காதர்பேட்டை மசூதிக்குள் நுழைந்து இளைஞர்களோடு இணைந்து நோன்பு திறந்து தொழுகையை நடத்தியவர், “எந்தக் கட்சியும் என்னைக் கூட்டணியில் சேர்ப்பதற்கு பயப்படுகிறார்கள். தீர்ப்பு எழுதி வைத்து விட்டு இங்கே தீர்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்* . மோடி மஸ்தான் என்கின்ற இ.வி.எம் டப்பாவை வைத்துக்கொண்டு வித்தை காட்டி வருகிறார். நானும் பிச்சைக்காரனாக ஓட்டு பிச்சை கேட்க வந்துள்ளேன்.” என்றார்.

”உங்களுக்கு வேலைக்காரனாக உழைப்பேன். நல்ல கழுதையாக மாறி சுமையை சுமைப்பேன். அந்த கழுதைகளுக்கு ஓட்டு போட்டால் உங்களுக்கு வெறும் பேப்பர்களை கொடுத்து தின்ன வைப்பார்கள்.” என்றார்.

இதனை தொடர்ந்து, வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த் …

“நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரச்சாரம் ஆரம்பித்து விட்டேன்.” என்பதாக ஆரம்பித்தவர்,

”அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு .. கொடுத்தால் இரட்டை இலை. இல்லை என்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது. இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது. கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது.”

”ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு … ஒரே மக்கள் ஒரே நாடாக இந்தியா உள்ளதா? ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியம். டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை ஊறவைத்து ஊறுகாய் போட்டு 45 நாட்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பார்கள். இதுதான் உலகத்திலேயே இல்லாத டிஜிட்டல் இந்தியா. ஒற்றை ஆளாக இருந்தாலும் உப்பாகவும், ஒரப்பாகவும் இருப்பேன். தத்திகள் மாதிரி நான் இருக்க மாட்டேன்.

இந்த தொகுதியில் 10 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளதாக கேள்விப்பட்டேன். ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியும். எனது வேட்பு மனு ஏற்றுக் கொண்ட பின்பு என்னுடைய திப்பு சுல்தான் வாளை சுழற்றுவேன். இப்பவே வாளை சுழற்ற வைக்காதீர்கள்.” என்று தமாஷாக பேசி பத்திரிகையாளர்களை அனுப்பி வைத்தார் மன்சூர் அலிகான்.

மணிகண்டன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.