காவிரி தமிழ்நாட்டிற்கு உரிமை படைத்தது – துரைவைகோ கண்டன உரை !

0

திருச்சியில் மதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது – ஒன்றிய அரசைக் கண்டித்துத் துரைவைகோ கண்டன உரை

திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகில் 16.07.2023 ஆம் நாள் திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை காக்கவும், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஒன்றியப் பாஜக அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.

https://businesstrichy.com/the-royal-mahal/

இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், நீர் திறக்கக்கூடாது என்று கர்நாடகத்தில் போராட்டம் நடத்தி வரும் பாஜகவைக் கண்டித்தும், இரு மாநிலங்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தி நதி நீரைப் பெற்றுத்தராத ஒன்றியப் பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் மறுக்கப்பட்டால் தேசிய ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மதிமுக போராட்டம்
மதிமுக போராட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றித் துரைவைகோ,“காவிரி கர்நாடகத்திற்கு உரிமை படைத்தது என்று எண்ணிக்கொண்டு, தண்ணீர் விட மறுக்கிறார்கள். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிந்து நதி பிரச்சனை உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பிரம்மபுத்திரா நதி நீர் பிரச்சனை உள்ளது. எகிப்தின் நன்கொடை என்று அழைக்கப்படுகின்றது நைல் நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனை உள்ளது. ஆனால் எந்த நாடும் தண்ணீர் தரமுடியாது என்று கூறி விடமுடியாது. காரணம் ஒரு நதியின் உரிமை என்பது உருவாகும் மாநிலத்திற்கு மட்டும் உரிமை படைத்தது கிடையாது. நதி எந்த நாட்டில் முடிவடைகின்றதோ அந்த நாட்டிற்கே உரிமை படைத்தது. அப்படியானால் காவிரி தமிழ்நாட்டிற்கு உரிமை படைத்தது என்பதை உணரவேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகம், தமிழ்நாட்டின் நெய்வேலி அனல்மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் வேண்டாம் என்று மறுக்குமா? கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 55% மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படுகின்றது. எஞ்சிய 45% கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இதைத் தமிழ்நாடு மறுத்தால் உங்கள் நிலைமை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்” என்று கூறினார்.

திருச்சியில் துரை வைகோ
திருச்சியில் துரை வைகோ

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சின்னப்பா,“காவிரியில் தமிழ்நாட்டிற்கு முழுஉரிமையுண்டு. அதை மறுக்கக் கர்நாடகத்திற்கு உரிமையில்லை” என்றார். மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் பேசும்போது,“கர்நாடகம் காவிரியில் நீர் தர மறுப்பது என்பதைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மைச்செயலாளர் துரைவைகோ போட்டியிடுவார். வெற்றி பெறுவார். காவிரி சிக்கலைத் தீர்த்து வைப்பார்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய மதிமுக துணைப்பொதுச்செயலாளர் டாக்டர் ரெஹையா,“கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரைவைகோ திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் புலவர் க.முருகேசன், தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, வடக்கு மாவட்டச் செயலாளர் டிடிசி சேரன், வெ.அடைக்கலம், பெல் இராஜமாணிக்கம், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி, மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் மிசா சாக்ரடீஸ், வாழவந்தான் கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மதிமுக தொண்டர்கள் ஏராளனமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.