காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் ! கருணை காட்டுமா அரசு?

சிறுநீரக கல் பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கணவரோடும்

0

காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் ! கருணை காட்டுமா அரசு?

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து அட்டை பெறும் நடவடிக்கைக்காக, நாள் கணக்கில் அலைய வேண்டியிருப்பதாக புலம்புகிறார்கள் பயனாளிகள். தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்ல; அரசு மருத்துவமனைகளிலும் கூட சாதாரண தலைவலி காய்ச்சலை தவிர்த்த மற்ற மருத்துவ சிகிச்சைகளை பெற வேண்டுமானால் அரசின் காப்பீட்டு அட்டை அவசியம் என்கிறார்கள்.

https://businesstrichy.com/the-royal-mahal/

முன்பெல்லாம், அரசு மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்துவந்த நிலை மாறி, இன்று அனைத்தும் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் அவை சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ஒவ்வொரு மருத்துவத்துறையிலும் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்து காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவதற்கென்றே ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

காப்பீட்டு அட்டை
காப்பீட்டு அட்டை

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இவ்வாறு, முறையீடு செய்து பெறப்படும் நிதியை கொண்டுதான், அந்தந்த துறைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் மருந்து மாத்திரைகளையும் வாங்கிக் கொள்வதாவும் சொல்கிறார்கள். இந்த நிலை காரணமாக, ஒரு சாதாரண அறுவை சிகிச்சை தேவைப்பட்டால்கூட, அதற்காக காப்பீட்டு அட்டையை நோயாளி வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிடுகிறது.

இவ்வளவு அத்தியாவசியமான காப்பீட்டு அட்டையை பெறும் நடவடிக்கையோ, நீண்ட அலைக்கழிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள், கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பம் பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தை போதுமான ஆவணங்களுடன் முன்கூட்டியே இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கும்பொழுது, அடுத்து எப்பொழுது வர வேண்டுமென்று நாள் குறித்து அனுப்பி வைக்கிறார்கள். மறுமுறை, அவர்கள் சொன்ன நாளில் காலை பத்து மணிக்கு வந்து சேர்ந்தாலும், எல்லாம் முடித்து வெளியேற மாலை 3 முதல் 4 மணி வரை ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

”காலையில சரியா 10 மணிக்கு வந்தோம். உங்களுக்கு முன்னாடியே நிறைய பேர் கொடுத்திட்டு காத்திருக்காங்க. எப்படியும் உங்கள் முறை வருவதற்கு மூன்று மணி ஆகிவிடும் என்றார்கள். இவ்வளவு நேரம் ஆகும் என முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அதற்கான ஏற்பாட்டோடு வந்திருப்போம். நேரத்திற்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய மாமனாரையும், சிறுநீரக கல் பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கணவரோடும் இவ்வளவு நேரம் காத்திருக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்புகிறார், காப்பீட்டு அட்டை பெறுவதற்காக வந்திருந்த பெண் ஒருவர்.

காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம்
காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம்

”முன்னமே, இவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்லியிருந்தால், கட்டிச்சோறாவது கட்டிக்கொண்டு வந்திருப்போமே. மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போயிடலாம்னு பஸ்-க்கு மட்டும் காசு எடுத்துட்டு வந்தேன். எப்படியும் வீட்டுக்கு போக, சாயங்காலம் ஆயிடும் போல.”னு புலம்புகிறார், வயதான பெண்மணி ஒருவர்.

”நாங்களும் எங்களால் முடிந்த அளவு, விரைவாக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ஒரு நாளைக்கு ஐம்பது முதல் அறுபது பேருக்குத்தான் எங்களால் பதிவு செய்ய முடியும். இதில், சர்வர் பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் இன்னும் காலதாமதம் ஆகிவிடும். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக எப்படியும் 25 பேருக்காவது பதிவு செய்துவிடுகிறோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதன்பிறகு, எஞ்சியவர்களுக்கான பதிவை மேற்கொள்கிறோம். இதற்கிடையில் புதியதாக விண்ணப்பிக்க வருபவர்களை அணுகி அவர்களது மனுவை பரிசீலித்து அவசியமான ஆலோசனைகள் வழங்கவும் செய்கிறோம். முறையான ஆவணங்களுடன் வருபவர்களிடமிருந்து விண்ணப்பத்தை வாங்கி கொண்டு தேதி குறித்து அனுப்பி வைக்கிறோம். எங்களுடைய பணிச்சூழலை புரிந்து கொள்ளாத சிலர், நாள் முழுவதும் காத்திருப்பதாக மேலதிகாரிகளிடம் புகார் தெரிவித்துவிடுகின்றனர். நாங்கள் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?” என்கிறார்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள்.

பதிவுக்கு வரும் பயணாளிகள் நிழலில் அமர்வதற்கான ஏற்பாடு இருப்பது ஆறுதலான ஒன்று. ஆனால், ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்க இடம் கிடையாது என்பது அவலமான ஒன்று.

தினமும் பொதுமக்களிடம் திட்டு வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்..

மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் அவர்களை தொடர்புகொண்டோம், “நீங்கள் சொல்வது புரிகிறது. இங்கு மட்டுமில்லை; தமிழகம் முழுவதுமே இதுபோன்ற காப்பீட்டு பதிவு மையங்கள் மாவட்டத்திற்கு ஒன்றுதான் இருக்கிறது. நாங்களும் எங்களது தரப்பில் கோரிக்கை வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்று மட்டுமில்லை, தினமும் பொதுமக்களிடம் திட்டு வாங்கிக்கொண்டுதான் எங்களது ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காலை 10 முதல் மாலை 6 மணி வரையிலான வேலை நேரத்தில் எங்களால் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக பதிவுகளை மேற்கொண்டுதான் வருகிறோம். மேலதிகாரிகள்தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், அவர்கள் வழங்கியிருக்கும் தகவல்களிலிருந்து எந்த ’மேலதிகாரி’யை தொடர்பு கொள்வது என்ற குழப்பம்தான் மிஞ்சியது.

திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் (TNHSP), சென்னை – 600006; யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், சென்னை – 600014; திட்ட அலுவலகம், சென்னை – 600010 என பல்வேறு பிரிவுகளில் முகவரிகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது தொலைபேசி எண்கள் பதிவிடவில்லை.

எங்களுடைய மேலதிகாரி யாரென்று எங்களுக்கே தெரியாது”

மாநில திட்ட மேலாளர், திருமதி. பிரேமா முகிலன் என்று பதிவாகியிருந்த கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. கடைசி முயற்சியாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் டோல்ஃப்ரீ எண்ணில் தொடர்புகொண்டு விசயத்தை சொன்னோம். சம்பந்தபட்ட உயர் அதிகாரியின் தொடர்பு எண் கேட்டோம். “எங்களுடைய மேலதிகாரி யாரென்று எங்களுக்கே தெரியாது” என்று ஒரே போடாக போட்டார் அவர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் செயல்படும், ”மாவட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் மையத்தின்” எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்; பயனாளிகளுக்கு சிக்கலின்றி காப்பீட்டு அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே நம் கோரிக்கை. உரிய நடவடிக்கை எடுக்குமா, தமிழக அரசு?

– இளங்கதிர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.