எம்ஜிஆர் பாதையில் எடப்பாடியார்!

0

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின் முதன் முதலாக தமிழ்சங்கம் வளர்த்த மதுரையில் ஆகஸ்டில் மாநாடு நடக்கப்போகிறது என்ற தகவல் கட்சி தொண்டர் களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் எம்எல்ஏ தவசி இல்ல திருமணத்திற்கும், சிவகாசி ராஜேந்திர பாலாஜியின் தகப்பனார் இறந்த செய்தி கேட்கவும், மதுரை விமான நிலையத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி வந்திறங்கினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடம், ஆகஸ்ட் 20ல் நடத்தப்படும் அதிமுக மாநாடு பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்து, இந்த மாநகர் மதுரையில் நம் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றார்.

மதுரை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மூவர் மாநாட்டை நடத்தி தங்களது பலத்தை நிரூபிக்க தயாராயினர். இதில் உதயகுமார் தனது திருமங்கலம் தொகுதி குன்னத்தூரிலும், ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரிலும், செல்லூர் ராஜு காது குத்து நிகழ்ச்சி நடத்திய பாண்டி கோயில் ரிங் ரோட்டிலும் தங்களுக்கு சாதகமாக நடத்துவதற்கு காய் நகர்த்தி வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

இந்த போட்டிக்கு நடுவில் இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக மதுரை நெல் பேட்டை பகுதி அதிமுக 49 வட்ட கிழக்கு செயலாளர் நஜிமுதீனிடம் எடப்பாடியின் மதுரை மாநாடு நடத்துவது பற்றி நம் அங்குசம் இதழ் சார்பில் கேட்டபோது அவர் ஆர்வமுடன் பதில் அளித்தார். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர், ரஜினி. கமல், விஜயகாந்த். சரத்குமார், டி.ராஜேந்தர், டிடிவி தினகரன் என பலர் அரசியல் பிரவேசம் செய்வதற்கு அடித்தளமாக இருந்தது இந்த மதுரை மண்ணாகும். அதுபோல பலரின் அரசியல் களமாக இந்த மதுரைதான் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. மதுரையில் எடப்பாடியாரை வைத்து மிக பிரமாண்டமாக நடத்திய டாக்டர் சரவணனின் இணைப்பு விழா கூட்டம் மாநாடு போல் நடைபெற்றது இன்று வரை பேசப்படுகிறது. என்றும் எம்ஜிஆர் பாதையை கடைப்பிடித்து அதன் வழியாக தொண்டர்களை வழிநடத்தி செல்லும் ஒப்பற்ற தலைவராக எடப்பாடி இருந்து வருகிறார். அதனை மெருகூட்டும் வகையில் வரும் ஆகஸ்ட் 20ல் மதுரையில் நடக்கும் மாபெரும் மாநாடு தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கும்.

நஜிமுதீன் (அதிமுக) 49வது வட்ட கிழக்கு செயலாளர், மதுரை
நஜிமுதீன் (அதிமுக) 49வது வட்ட கிழக்கு செயலாளர், மதுரை

மதுரை ஏர்போர்ட் ரிங் ரோட்டில் அம்மா திடல் இடமும், டாக்டர் சரவணன் இணைப்பு விழா நடத்திய மதுரை ஏர்போர்ட் பின்புறம் கருப்பசாமி கோயில் எதிரே அனைத்து பகுதியிலிருந்து வரும் தொண்டர்கள் வசதிக்காக அமைந்துள்ள பெரிய திடலும், அதுபோல ஏர்போர்ட்டுக்கு போகும் வழியில் தனியார் மருத்துவமனை பின்புறமுள்ள 70 ஏக்கர் அளவிலுள்ள இடமும் தற்போது பரிசீலனைக்கு உள்ளது.

அதிமுக மாநாட்டிற்கு இடம் பார்த்த போது
அதிமுக மாநாட்டிற்கு இடம் பார்த்த போது

மேலும் ஒத்தக்கடை மற்றும் விஜயகாந்த் மாநாடு நடத்திய தோப்பூரிலுள்ள திடலும் தகுதியானதா என்ற நிலையில் இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற எடப்பாடியாரின் வேண்டுகோளுக்கு இணங்க இடம் தேர்ந்தெடுப்பதில் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்று படபடவென பேசி முடித்தார்.

-ஷாகுல், படங்கள் – ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.