மக்கள் சொல்வது போல் நான் மோசமானவன் இல்லை – சேலம் கனிம வள கொள்ளை சர்ச்சையில் சிக்கிய திமுக புள்ளி !

0

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் உள்ளது கல்லாங்குட்டை ஏரி. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் அருகே மலை உள்ளதால் அங்கிருந்து மழைக் காலங்களில் வரும் மழைநீர் ஏரியில் நிரம்பும் வகையில் இயற்கையாக நீர்வழிப் பாதையும் உள்ளது. இந்த ஏரிதான் வெள்ளாளப்பட்டி சுற்று வட்டார கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரமாக உள்ளது.

வெள்ளாளப்பட்டி
வெள்ளாளப்பட்டி

https://businesstrichy.com/the-royal-mahal/

இதனைக் கருத்தில் கொண்டே கடந்த 2019- 20ம் ஆண்டில் கல்லாங்குட்டை ஏரியை, தமிழக அரசு ரூ.20 லட்சம் செலவில் புனரமைத்து உபரி நீர் தடுப்பணையையும் அமைத்தது. ஆனால் நடப்பு ஆண்டில் பருவ மழை அதிக அளவில் பெய்த நிலையிலும், கல்லாங்குட்டை ஏரி தண்ணீர் இன்றி தற்போது வறண்டு காட்சியளிக்கிறது.

செ . கார்மேகம், மாவட்ட ஆட்சியர்
செ . கார்மேகம், மாவட்ட ஆட்சியர்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘அமிர்த குளம்’ என்ற திட்டம், சேலம் மாவட்டத்தில் அரசால் அமல்படுத்தப்பட்டது . இத்திட்டம் குறித்தும் விதிமுறைகள் குறித்தும் 20.8.2022ம் தேதி கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட “அமுதம் பெருவிழா” வின் ஒரு பகுதியாக புதிய நீர் நிலைகளை உருவாக்கும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட அமிர்த குளங்களை உருவாக்கிடவும், ஏற்கனவே உள்ள குளங்களை புனரமைத்திடவும் நீர் பிடிப்பு பகுதி மற்றும் நீர் வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைக்கு வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'செம்மண்' லாரிகளில் எடுத்து
‘செம்மண்’ லாரிகளில் எடுத்து

அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 160 பணிகளும் ஊரகப் பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் 104 புதிதாக அமிர்த குளம் அமைக்கும் பணிகளும் ஏற்கனவே உள்ள 56 குளங்களை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சாலை பணிக்குத்தான் பயன்படுத்தணும்….
அமிர்த குளங்கள் பணியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மண் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை – கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் , தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டு, முற்றிலும் சட்ட விரோதமாக அமிர்த குளத்திற்காக , பொக்லைன் மூலம் தோண்டி எடுக்கப்படும் ‘செம்மண்’ லாரிகளில் எடுத்து சென்று , கல்லாங்குட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் வீட்டுமனை நிலத்தில், குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது.

தாசில்தார் அன்புச்செழியன்
தாசில்தார் அன்புச்செழியன்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தட்டிக்கழித்த தாசில்தார்…
இது தொடர்பாக பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச்செழியனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது ,’அப்படியா… செம்மண் அள்ளப்படுவது கொட்டப்படுவது எனக்குத் தெரியாது. இதற்கு எல்லாம் பெத்தநாயக்கன்பாளையம் பி.டி.ஓதான் பொறுப்பு’ என தட்டிக்கழித்தார் தாசில்தார்.

சால்ஜாப்பு சொன்ன உதவி பிடிஓ…
தொடர்ந்து பெத்தநாயக்கன்பாளையம் பி.டி.ஓவை தொடர்பு கொண்டபோது அவர் நமது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. அதனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உதவி பி.டி.ஓ. சந்திரசேகரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்ற சந்திரசேகர், “சார் எனக்கு தகவல் தெரியாது. எங்களது இன்ஜினியரை அந்த பகுதிக்கு அனுப்பி விசாரிக்கிறேன். அரசின் திட்டங்கள் சில சமூக விரோதிகளால் மக்களுக்கு நேரடியாக சென்று சேராமல் தடுக்கப்படுகிறது. .அதற்கு இது ஒரு உதாரணமாக தெரிகிறது” .என்று கூறிவிட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார்.

'செம்மண்' லாரிகளில் எடுத்து
‘செம்மண்’ லாரிகளில் எடுத்து

“கவனிப்பால்“ கண்டுகொள்வில்லை-மக்கள் கருத்து

தொடர்ந்து நம்மிடம் பேசிய வெள்ளாளப்பட்டி பொதுமக்கள், ‘இது போன்ற செம்மண் திருட்டு பல நாட்களாக நடந்து வருகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெத்தநாயக்கன்பாளையம் திமுக பிரமுகர் ஒருவர் இதனை செய்து வருகிறார். கேள்வி கேட்டால் வீடு புகுந்து எங்களை அடியாட்களை வைத்து தாக்குதல் நடத்துகிறார். அதிகாரிகளும் செம்மண் திருட்டை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள். விஏஓ முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை திமுக பிரமுகர் ‘கவனிப்பு’ செய்வதால் அவர் சுதந்திரமாக கனிம வளத் திருட்டை தொடர்கிறார்’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

திமுக பிரமுகர் மூர்த்தி
திமுக பிரமுகர் மூர்த்தி

தவறு என்றால் 1 லட்சம் அபராதம் தர்றேன்….

இதனையடுத்து பெத்தநாயக்கன்பாளையம் திமுக பிரமுகரை (மூர்த்தி) செல்போன் மூலம் நாம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் கூறியது, மிகவும் அதிர்ச்சிகரமான ரகம். “சார் நான் தான் அமிர்தகுளத்திற்காக கல்லாங்குட்டை ஏரியை ஆழப்படுத்தி வருகிறேன். அங்கு எடுக்கப்படும் செம்மண் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு எனது நிலத்தில்தான் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அது விவசாய நிலம். விவசாயத்திற்காக கொட்டி வைத்துள்ளேன். அது தவறு என்றால் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை கலெக்டருக்கு செலுத்துகிறேன். பொதுமக்கள் கூறுவதுபோல் நான் மோசமானவன் இல்லை, நல்லவன்தான்’” என்றார். நாம் தொடர்ந்து அவரிடம் ‘அமிர்த குளம் தோண்டும் பணிகளில் அள்ளப்படும் மண் நெடுஞ்சாலை பணிகளுக்கு பயன்படுத்திட வேண்டும், என்று அரசு கூறி உள்ளதே’ என்று கேட்டோம் .அதற்கு அவர், ‘அப்படியெல்லாம் இல்லை. நான் சட்டப்படி தான் மண்ணை அள்ளி விவசாய நிலத்தில் கொட்டி உள்ளேன்’ என்று “தெளிவாகவே” கூறினார்.

அரசு மண் திருட்டை தடுத்து நிறுத்தி எங்களை பாதுகாக்க வேண்டும். கனிம வளம் கொள்ளை போவதை அரசு அனுமதிக்க கூடாது என்பதே வெள்ளாளப்பட்டி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

– சோழன் தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.