‘பத்துதல’ பக்கா லாபம்! டைரக்டருக்கு பட்டைநாமம்!
‘பத்துதல’ பக்கா லாபம்! டைரக்டருக்கு பட்டைநாமம்!
கெளதம் வாசுதேவ்மேனனிடம் உதவி இயக்குனராக இருந்து சூர்யா-ஜோதிகாவின் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருஷ்ணா. இந்தப் படத்தைத் தயாரித்தவர் ஞானவேல்ராஜா. 2006—ல் ‘சி.ஒ.கா.’ ரிலீசானது. அதன் பின் எட்டு வருடங்கள் கழித்து, அதாவது 2014—ல் தான் கிருஷ்ணாவுக்கு இரண்டாவது படமான‘நெடுஞ்சாலை’ பட வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையே ஜோசியக்காரன் ஒருவனின் ஐடியாப்படி, கிருஷ்ணா என்ற தனது பெயரை, ஒபிலி என்.கிருஷ்ணா என மாற்றிக் கொண்டார்.
ஒன்பது வருடங்கள் கழித்து, இப்போது தான் ஒபிலி கிருஷ்ணாவுக்கு மூன்றாவது படமான ‘பத்துதல’ வாய்ப்பு கிடைத்து, மார்ச்.30-ஆம் தேதி படம் ரிலீஸ். ஒரு கன்னட படத்தின் ரீமேக்கான இந்த ‘பத்துதல’ படமும் எஸ்.டி.ஆர். & கெளதம் கார்த்திக் காம்பினேஷனில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.
தனக்கு முதல் பட வாய்ப்புக் கொடுத்தவர் ஞானவேல்ராஜா என்பதால், ‘பத்துதல’ க்கு சம்பளம் பேசவில்லை கிருஷ்ணா. ஞானவேல்ராஜாவுக்கும் இது வசதியாகப் போய்விட்டது.
எஸ்.டிஆர்., கெளதம் கார்த்திக் உட்பட ஆர்ட்டிஸ்டுகள் சம்பளம், தயாரிப்புச் செலவு என மொத்தம் 60 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘பத்துதல’யை 90 கோடிக்கு விற்றுள்ளார் ஞானவேல்ராஜா. இந்த மார்ச்.18—ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘பத்துதல’யின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய ஞானவேல்ராஜா, இப்போது வரை டைரக்டர் ஒபிலி என்.கிருஷ்ணாவுக்கு சம்பளமே கொடுக்காமல் பட்டை நாமம் போட்டுவிட்டாராம்.
–மதுரைமாறன்