ஊராட்சிகளில் சேகரிக்கும் குப்பைகளை ஏற்றும் பேட்டரி வண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ்
ஊராட்சிகளில் சேகரிக்கும் குப்பைகளை ஏற்றிச் செல்வதற்காக
குப்பை ஏற்றும் பேட்டரி வண்டிகளை வழங்கும் விழா….

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சேகரிக்கும் குப்பைகளை ஏற்றிச் செல்வதற்காக, தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் தலா ரூபாய் 2.50 லட்சம் மதிப்பிலான பேட்டரி வண்டிகளையும், ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான குப்பை ஏற்றும் 36 பேட்டரி வண்டிகளையும், 6 ஊராட்சி பள்ளிகளுக்கு, ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 85 செட் டேபிள் மற்றும் பெஞ்ச் ஆகியவற்றையும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் வழங்கினார் .

செம்ம சூப்பரான திரைப்படம்..

5

நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார் அவர்கள், துணைத் தலைவர் உள்ளூர் டி.கணேசன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி , ஆனந்தராஜ் , கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் , திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.அசோக்குமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

– ஜார்ஜ் பெர்னாண்டஸ்

6
Leave A Reply

Your email address will not be published.