கலைஞர் இஸ்லாமியர்களுக்குச் செய்த நன்மைகள் – மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் !

0

கலைஞர் இஸ்லாமியர்களுக்குச் செய்த நன்மைகள் – மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் !

கலைஞர் இஸ்லாமியர்களுக்குச் செய்த ஒரு நன்மை உண்டா? – சீமான் கேள்வி. நன்மைகளின் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

https://businesstrichy.com/the-royal-mahal/

அண்மையில் நடைபெற்ற மணிப்பூர் கலவரம் தொடர்பாக வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாடத்தில் கலந்துகொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் சாத்தானின் குழந்தைகளாக விட்டனர். இல்லையென்றால் 18% வாக்கு வங்கி உள்ள இவர்கள் திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களித்து நாட்டை இப்போது நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.  உங்களுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் போடவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் போடவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. 2024இல் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களிக்கப் போவதில்லை. இலஞ்சம், அநீதி இவற்றைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் திமுகவுக்கும் காங்கிரஸ்க்கும் தொடர்ந்து வாக்களித்து வருகிறீன்ர்கள். இஸ்லாமியர்களுக்குத் திமுக செய்த ஒரு நன்மையைக் கூறினால் நான் கட்சியைக் கலைத்துவிடுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

சாத்தானின் குழந்தைகள் இஸ்லாமியர்கள். கிறித்தவர்கள் என்று சீமான் குறிப்பிட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவகருல்லா,“சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்ற கூறியுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள சீமான், “மன்னிப்பு கேட்டுவிட்டால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? என்று எதிர்கேள்வியை முன்வைத்துள்ளார். மக்களை வாக்காளர்களாகவும். வாக்காளர்களை மதரீதியாகவும் பிரித்து பார்ப்பது என்பது பாசிசம் என்று மே 17 அமைப்பின் தலைவர் திருமுருகன்காந்தி சீமானின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்நிலையில், ”இஸ்லாமியர்களுக்குத் திமுக செய்துள்ள ஒரு நன்மையைக் கூறினால் நான் கட்சி கலைக்கத் தயார்” என்ற சீமானுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் மு.க.ஸ்டாலின், திமுக இஸ்லாமியர்களுக்குச் செய்துள்ள பல நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

1. முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர். அதைக்கூட அதற்குப் பிறகு வந்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி அதை ரத்து செய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், ரத்து செய்ததை ரத்து செய்து மீண்டும் அரசாணை வெளியிட்டு மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.

2. உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தலைவர் கலைஞர்.

3. சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கியவரும் கலைஞர் 4. வக்பு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கியவரும் தலைவர் கலைஞர்.

5. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கியவரும்கலைஞர் தான்.

6. உருது அகாடமியைத் தொடங்கியவர் கலைஞர்.

7. காயிதேமில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்கியதும் கலைஞர்.

8. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொடுத்தவரும் கலைஞர்.

9. காயிதேமில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

10. காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் கலைஞர். – இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

என்னுடைய தலைமையில் 2012இல் ஆட்சி அமைந்தவுடனே சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.* சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு தரப்படுகிறது.

* உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

* சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முஸ்லீம் உதவி சங்கம் துவங்க ஆணையிடப்பட்டுள்ளது.

* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

* உலமாக்கள் மற்றும் பணியாளர் வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது.

* தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 4 வக்பு சரக அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிவாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* வக்பு சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. – இவை அனைத்தும் 2021-இல் நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு செய்து கொடுக்கப்பட்டிருப்பவை. இதெல்லாம் இஸ்லாமியர்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து கொடுக்கப்பட்டவை

மு.க.ஸ்டாலின் இந்தப் பேச்சு ஏப்.14,2023ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இப்தார் விழாவில் பேசியது. என்றாலும் சீமானுக்கு இப்போது பதில் சொல்வதுபோல் உள்ளது என்பதுதான் தனிச்சிறப்பு.

–ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.