தான் விரித்த வலையில் வசமாய் சிக்கிய நியோமேக்ஸ்.. கும்பல் ! முதலீட்டாளர்கள் உண்மையான பட்டியலை கொடுக்குமா ?

2

தான் விரித்த வலையில் வசமாய் சிக்கிய நியோமேக்ஸ்.. கும்பல் ! முதலீட்டாளர்கள் எத்தனை பேர் உண்மையான பட்டியலை கொடுக்குமா ?

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களின் பேரின் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

https://businesstrichy.com/the-royal-mahal/

இந்த நிலையில் நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பழனிசாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தாக்கல் செய்து இருக்கிறது.. அந்த மனுவில்..  எங்களது நிறுவனம் மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனர்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் உள்பட பலர் உள்ளனர். நிறுவனத்துக்கு தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளன.

நகர் ஊரமைப்புத்துறை அனுமதியுடன் மதுரை உட்பட பல மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது. அங்கீகாரம் பெற்ற ‘லே அவுட்’ பிளாட்கள் மீது வாடிக்கையாளர்கள் முதலீடு செய்தனர். அதற்கு ஒப்புதல் ரசீது … உட்பட ஆவணங்கள் வழங்கினோம். பலர்பயனடைந்துள்ளனர்….

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.
நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.

நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி DTCP நகர் மற்றும் நகரமைப்பு இயக்குனரக அனுமதி பெற்று, குறைந்தபட்சம் 1000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்கிறோம்.முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகக்கூறி யாருக்கும் உத்தரவாதம் அளிக்கவில்லை.  நாங்கள் மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட்டுக்குள் கட்டுகிறோம்.

முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். எங்களிடம் 4 கோடியே 12 லட்சத்து 65ஆயிரத்து 276.35 சதுர அடியில் (DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்) நிலங்கள் பத்திர பதிவு செய்ய தயாராக உள்ளன.

நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள் நிலங்கள் ஏராளமாக உள்ளன.  சொத்துக்களை முடக்கி, விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க நீண்ட காலம் ஆகலாம்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களிடம் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாலசுப்பிரமணியன… குறிப்பிட்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நியோமேக்ஸ் மோசடி மன்னர்கள்
நியோமேக்ஸ் மோசடி மன்னர்கள்

இந்த வழக்கை நீதிபதி டி.நாகர்ஜூன் விசாரித்தார்…. அரசு தரப்பில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளார். 557 பேர் புகார் அளித்துள்ளனர்….

நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள், நிர்வாகிகள் தற்போது தான் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  9428 சொத்து விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் செய்து விசாரணை செய்வது தேவையற்றது, வழக்கை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு நியோமேக்ஸ் தரப்பு செய்கிறது.  நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டோரை புகார் செய்யவிடாமல் நியோமேக்ஸ்  நிறுவனம் தடுத்தும், மிரட்டிம் வருகின்றனர்

இதையடுத்து நீதிபதி: முதலீட்டாளர்கள் எத்தனை பேர், அவர்களிடம் வசூலித்த தொகை, நிறுவனத்தின் சொத்து விபரங்களை நியோமேக்ஸ் புள்ளிவிவரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதியரசர்  உத்தரவு தான் நியோமேக்ஸ் கும்பலை பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியும் நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்துவிடுவார்கள், எவ்வளவு பேர் என்கிற பட்டியலை சொல்ல வேண்டியது இல்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் பணத்தை கொடுத்து விட்டு மீண்டும் நிறுவனத்தை திறக்கலாம் என்று இதுவரை சொல்லிக்கொண்டு இருந்தவர்களுக்கு, நீதிபதியின் இந்த உத்தரவு பெரிய  சிக்கலை உருவாக்கியுள்ளது.

இதனால்  முக்கிய குற்றவாளியான பாலசுப்ரமணியன் இனி தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்து சரண் அடைய போகிறேன்.. நான் சிறைக்கு சென்று ஜாமீன் பெற்று வெளியே வந்து மீண்டும் நிறுவனம் திறக்கப்படும். அது வரை யார் புகார் கொடுக்கவில்லையோ அவர்களுக்கு மட்டும் தான் நான் வெளியே வந்தவுடன் பணம் கொடுக்கப்படும் என்று தன்னுடைய நியோமேக்ஸ் ஏஜெண்டுகள் மூலம் நியோமேக்ஸ் முதலீட்டார்களளுக்கு ஒரு தகவலை பரப்பி வருகிறார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்கள் பட்டியலை சமர்பித்த உடன், நீதிமன்றம் அதை பொதுவெளியில் வெளிட்டால் மட்டுமே முதலீட்டார்கள் தங்களின் பெயர் இருக்கா என்பதை சரிபார்க்க உதவும், அதே நேரத்தில் நியோமேக்ஸ் என்கிற பெயரில் மட்டும் இல்லாமல் நூற்றுக்கணக்கான  போலி நிறுவனங்கள் பெயரிலும் ரசீது கொடுத்து கோடி கோடினா பணங்களை இலட்சக்கணக்கான முதலீட்டார்களிடம்  வாங்கியிருக்கிறார்கள், அதை எல்லாம் எப்படி கணக்கு காண்பிக்க போகிறார்கள் என்பது 27ம் தேதி நீதிமன்ற நடவடிக்கை பிறகு தெரியும்…

எது எப்படியே இதுவரை ஓடி ஓளிந்து கொண்டு இருந்த நியோமேக்ஸ் கும்பல் தான் விரித்த வலையில் தானே சிக்கி கொண்ட கதையாகி விட்டது என்பது மட்டும் உண்மை…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

2 Comments
  1. Maruthu says

    உனக்கு அறிவு இருக்கா இல்லையா. 4 லட்சம் பயனடையும் ஒரு நிறுவனத்தில் வெறும் 100 அல்லது 200 புகார்கள் மட்டும் வந்துள்ளது என்று சொல்கிறாய் 4 லட்சம் பேரில் இவ்வளவுதான் புகார் என்றால் மக்கள் நியோ மேக்ஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. உங்களை போன்ற மலம் தின்னும் மீடியாக்கள் கதருங்கள் சிறிது காலத்திற்கு…

    1. J.Thaveethuraj says

      யாருக்கு அறிவு இருக்கு என்பது.. 27ம் தேதி நீதிமன்றத்தில் தெரியும்… சார்…

Leave A Reply

Your email address will not be published.