நியோமேக்ஸ் வழக்கில் அதிரடி திருப்பம் “நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டோர் சங்கம்” – Neomax victims association

எங்களது தொடர்பில் இருப்பவர்களில் பலருமே இன்னும் போலீசில் கூட புகார் கொடுக்காமல் தான் இருக்கிறார்கள். இதுபோன்று நியோமேக்ஸில்....

2

நியோமேக்ஸ் வழக்கில் அதிரடி திருப்பம் : உதயமானது “நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டோர் சங்கம்” !

நியோமேக்ஸ் நிலவரங்கள் Money Heist வெப் சீரியலை நினைவுபடுத்துகின்றன. முடிந்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் திருப்பங்களுடன் தொடரும் Money Heist வெப் சீரியலை போலவே, நியோமேக்ஸ் விவகாரமும் பல திருப்பங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே, திருச்சியில் நியோமேக்ஸின் துணை நிறுவனமான Neomax centrio groups – Neosco Developers Pvt Ltd நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு, ”நியோமேக்ஸில் முதலீடு செய்து, வட்டித்தொகை மற்றும் முதிர்வு தொகை கிடைக்காமல் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் பேரவை” என்ற ஒருங்கிணைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். தாங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக விரிவான அறிக்கையாகவும் வெளியிட்டிருந்தனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

தற்போது, கம்பம் பகுதியை சேர்ந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்களின் முன்முயற்சியில், ”நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டோர் சங்கம் (Neomax victims association)” என்ற அமைப்பை ஏற்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

 

இந்த அமைப்பு உருவாக்கத்தில் முன்னின்று செயல்பட்டுவரும் கம்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவனிடம் அங்குசம் சார்பில், பேசினோம். ”நியோமேக்ஸில் கம்பம் – தேனியைச் சேர்ந்த பலரும் முதலீடு செய்திருக்கிறோம். எங்களில் ஒரு 26 பேர் ஆரம்பம் முதலாகவே ஒன்றாக சேர்ந்து போட்ட பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். முதல்முறை மதுரை திலகர் திடலில் மனு மேளா நடத்தியபோதே, நாங்கள் 26 பேரும் முதல் ஆளாக புகார் மனு கொடுத்துவிட்டு வந்தோம். தற்போது, இந்த அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திரும்ப மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். மற்றபடி, யாரையும் பழிவாங்க வேண்டும் என்றோ, குற்றம் சுமத்த வேண்டும் என்றோ உருவாக்கவில்லை. எங்களுக்கு தேவை, எங்களுடைய பணம். நியோமேக்ஸ் 420-ஆ, 406-ஆ என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

தனிநீதிபதியை நியமிக்க வேண்டுமென்று அவர்கள் தொடுத்த வழக்கில் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவர்கள் வழக்குப் போடப்போவதாக சொல்கிறார்கள். மிக முக்கியமாக, Neomax Customers Welfare Association ‘”(NCWA) என்ற சங்கத்தை உருவாக்கி தனது வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இதுபோன்று நடைபெறும் என்பதை முன்னரே ஊகித்து இப்படியொரு சங்கத்தை ஏற்கெனவே அரசிடம் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், கூடிய விரைவில் மேற்படி அசோசியேசன் சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஏமாற்றியவர்களே ஏற்பாடு செய்து மீண்டும் நம்மை ஏமாற்றுவதற்காக அவர்களே ஒரு ஏமாற்று சங்கத்தையும் உருவாக்கி வைத்துக்கொண்டு, நியோமேக்ஸில் முதலீடு செய்தவர்களையெல்லாம் அதில் சேர்ப்பதற்குண்டான வேலைகளை செய்துவருகிறார்கள். அதாவது, யாரும் அவர்களின் கையைவிட்டு போய்விடக்கூடாது, கைக்குள் வைத்துக்கொண்டே காரியத்தை சாதிக்க நினைக்கிறார்கள்.

இதற்கு மாற்றாகத்தான், நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டோர் சங்கம் (Neomax victims association)” என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். இதுவரை நீதிமன்றத்தில் மட்டுமே 700 முதல் 900 பேர் வரையில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். எங்களது தொடர்பில் இருப்பவர்களில் பலருமே இன்னும் போலீசில் கூட புகார் கொடுக்காமல் தான் இருக்கிறார்கள். இதுபோன்று நியோமேக்ஸில் முதலீடு செய்து முதலீட்டு பணத்தை திரும்ப பெறுவதற்காக காத்திருக்கும் உண்மையான பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்துதான் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அவ்வளவு பேரையும் தனித்தனியாக தொடர்புகொள்ள முடியாது. நீதிமன்றத்தில் அவர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களிடம் கூட கேட்டுப்பார்த்தோம். பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை தர மறுத்துவிட்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து, நமக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால்தான், நியோமேக்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்றாலும், அங்கே சென்றும் நாமும் ஒரு திறமையான வழக்கறிஞரை அமர்த்தி வழக்கை எதிர்கொள்ள முடியும். பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள முடியும்.

உறுதியாக சொல்கிறோம். நாங்கள் போட்ட பணத்தை திரும்ப வாங்கனும்ங்கிறதுதான் எங்க நோக்கம். யாரையும் பழிவாங்கனும், குத்தம் சொல்லனும்ங்கிற அவசியம் இல்லை. அதுக்கு பாதிக்கப்பட்டவங்க ஒன்னு சேரனும். ” என்கிறார், இளங்கோவன். மேலதிக தகவல்களுக்கு கைப்பேசி: 8870967051 வாட்சப்: 6380588260 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்கள்.

– அங்குசம் புலனாய்வு குழு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

2 Comments
  1. Ganesan Sakthivel says

    யாரல் பதிக்கப் பட்டார்கள் நிருவந்தினால அல்லாது அரசு அலுவலர்களலா? உங்களை போல உடகங்களினால

  2. PRAKASH says

    Naangal ippodhu baathikkappattu iruppathu Neomax niruvanaththaal alla. Ungalaip pondra karungaali mudaleettaalargalaal thaan. Nalla muraiyil nadandu kondiruntha niruvanathai mudakki anaithu mudaleetaalargalaiyum thunbathil aalthiyirukkum evanum azhindu povaan.

Leave A Reply

Your email address will not be published.