புத்தம் புது வாகனத்தில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

புத்தம் புது வாகனத்தில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, தற்போது புத்தம் புதிய வாகனத்தில் வருகை தருகிறார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சேலம் மாவட்ட த்தில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தனது கால் மூட்டு வலிக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இந்த நிலையிலும் கட்சியினரின் குடும்ப நிகழ்வுகள் மற்றும் அதிமுக கட்சி கொடியேற்ற விழாக்கள் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வுகள் ஆகியவற்றில் உற்சாகமாக கலந்து கொள்கிறார்.

5

இந் நிலையில் நேற்று எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளான கோனேரிப்பட்டி, சின்ன சோரகை உள்ளிட்ட இடங்களில் அதிமுக கட்சி கொடியேற்றி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி “போர்ஸ்” நிறுவனத்தின் “அர்பானியா” வேனில் வந்து இறங்கினார்.

7

உயரமான இருக்கையுடன் குளிர்விக்கப்பட்ட நவீன வசதிகள் இந்த வாகனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தின் இருபுறமும் பாதுகாப்பு வீரர்கள் நின்று செல்லும் வகையில் கைப்பிடி , படிக்கட்டுகளுடன் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த வாகனத்தை தான் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த போகிறார் என்றும் , அதற்கு முன்னோட்டமாக பிரச்சாரம் செய்யும் வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் அதிமுக நிகழ்வுகளில் அவர் பங்கேற்று உரையாற்றி வருகிறார் என்றும் கட்சியினர் உற்சாகமாக தெரிவிக்கின்றனர்.

இன்னோவா கிரிஸ்டா மற்றும் அவர் பயன்படுத்திய முந்தைய கார்களின் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் தன்னை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சரியாக பார்க்க முடியவில்லை என்று அவருக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்த புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சேலம் அதிமுகவினர் கூறுகின்றனர்.

6
Leave A Reply

Your email address will not be published.