திருச்சி வெங்காய வியாபாரியை அடித்துக்கொன்று எரிக்க முயன்ற மனைவி !

சாக்குமூட்டையில் சிவலிங்கத்தின் உடலை கட்டி, அவருடைய காரில் ஏற்றிக்கொண்டு 01.07.2023 மாலை 4 மணி

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

திருச்சி வெங்காய வியாபாரியை அடித்துக்கொன்று உடலை எரிக்க முயன்ற மனைவி

திருச்சியில் வெங்காய வியாபாரியை அடித்துக்கொன்று அவருடைய உடலை மூட்டை கட்டி எரிக்க, காரில் பிணத்தை எடுத்துச்சென்ற மனைவி உறவினர்களுடன் சிக்கினார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன்வேலி 16-வது குறுக்கு வீதியில் வசித்து வந்தவர் சிவலிங்கம் (வயது 40). வெங்காய வியாபாரி. இவருடைய மனைவி தனலட்சுமி (36). சிவலிங்கத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து தனலட்சுமியை கொடுமை படுத்தி வந்தாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி தனது உறவினர்களுடன் சேர்ந்து அங்கிருந்த இரும்பு கம்பியால் சிவலிங்கத்தை அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவருடைய உடலை மறைக்க அவர்கள் திட்டமிட்டனர். ஆள்நடமாட்டம் இல்லாத நவலூர் குட்டப்பட்டு பாலத்துக்கு அடியில் சிவலிங்கத்தின் உடலை வீசி, அடையாளம் தெரியாமல் இருக்க எரித்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

4

இதற்காக அவர்கள் சாக்குமூட்டையில் சிவலிங்கத்தின் உடலை கட்டி, அவருடைய காரில் ஏற்றிக்கொண்டு 01.07.2023 மாலை 4 மணி அளவில் நவலூர் குட்டப்பட்டு பகுதிக்கு சென்றனர். அந்த நேரத்தில் ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை போலீஸ்காரர் விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் ரோந்து வந்தார். அதேநேரம் அவர்கள், உடலை பாலத்துக்கு அடியில் வீசுவதற்காக காரை நிறுத்தியிருந்தனர்.

போலீசில் சிக்கினர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் நிற்பதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் விஜயகுமார் காரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். போலீஸ்காரர் வருவதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

ஆனால் தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகியோரால் தப்பி ஓட முடியவில்லை. உடனே போலீஸ்காரர் விஜயகுமார் காரில் இருந்த 3 பேரிடமும் விசாரித்துள்ளார். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே அவர் காரை சோதனை செய்தார். அப்போது காரில் சிவலிங்கத்தின் உடல் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

மனைவி உள்பட 3 பேர் கைது இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர், உடனே ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, 3 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் சோமரசம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாசன்வேலி பகுதியில் சிவலிங்கத்தை கொலை செய்து உடலை ராம்ஜிநகர் போலீஸ்நிலைய பகுதியில் எரிக்க முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும், காரையும், சிவலிங்கத்தின் உடலையும் சோமரசம் பேட்டை போலீசாரிடம் ராம்ஜிநகர் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். மனைவியே கணவரை கொலை செய்து உடலை எரிக்க முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5
Leave A Reply

Your email address will not be published.