அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஜோக்கர்களை ஆதரிக்க தேவையில்லை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பொதுமக்கள் நினைப்பதையும் நம்புவதையும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நினைக்கவோ நம்பவோ ஏற்கவோ அவசியமில்லை. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஒரு தரப்பு வாதத்தை நான் பார்க்கிறேன் – எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மக்களின் உணர்வுகளில் இருந்து விலகி நிற்கிறார்கள், அது ஒரு தவறு என்று. நிச்சயமாக இல்லை. அப்படி அவர்கள் நிற்பதே சரி என நினைக்கிறேன். மக்களின் போக்குகளைப் புரிந்துகொள்வது வேறு அதை விமர்சிக்காமல் ஏற்பது வேறு. பின்னது வெகுஜன வணிகப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் குணம், இலக்கு. அவர்கள் வெகுஜனத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவரக்ள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் போக்கிற்கு எதிராகவோ விலகியோ நின்று சிந்திப்பவர்கள். தேர்தலை கணிப்பதோ தேர்தலை வழிநடத்துவதோ அவர்கள் பணியல்ல. தோற்கும் கட்சியைக் கூட அவர்கள் ஆதரிக்கலாம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோது கூட இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த எழுத்தாளர்கள் இல்லையா? கடுமையான அராஜகவாதிகளாகவும் படைப்பாளிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். அதுவே சரி.

பொதுமக்களிடம் அனுபவத்தின் திரட்சியான ஞானம் இருக்கும். ஆனால் பகுத்தறிவோ கருத்துக்களை அலசும் போதமோ நிதானமோ உண்மையின் பால் நிற்கும் துணிச்சலோ இராது. எழுத்தாளர்கள் இதனாலே மக்களுடன் மக்களாக இருக்கலாகாது. உதிரியாகவும் குடும்பமோ நாடோ மொழியோ தேசமோ இல்லாதவராகவும் இருக்கையில் ஒரு எழுத்தாளர் மேலே வர இயல்கிறது. நான் ஒரு உருவகரீதியாக இதைச் சொல்கிறேன். பந்தம் இருக்கலாம், ஆனால் அது உதறித்தள்ளத் தக்கதாக இருக்க வேண்டும் என்கிறேன்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

விஜய் வென்றுவிட்டால் அது சரியாகிவிடாது. அவர் எனக்கு என்றுமே ஒரு கோமாளிதான். இப்போது ஒரு பாசிசக் கோமாளியாகும் வாய்ப்பே அதிகம். தமிழ்நாடு ஒரு ஹிட்லரிடம் செல்கிறது. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரை எதிர்ப்பதையோ விமர்சிப்பதையோ குறித்து எனக்கு குற்றவுணர்வு இல்லை. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பது அரசியல்வாதியின் கருத்து. நான் அரசியல்வாதி அல்லன். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை. மக்கள் தீர்ப்பு இம்முறை ஒரு தன்னழிவுத் தீர்ப்பு என்றே சொல்வேன். ஏனென்றால் எந்த கொள்கையும் தெளிவும் கட்சியமைப்பும் இல்லாத ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். அவர் இனிமேல்தான் இந்த மாநிலத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கப் போகிறார்.

யோசித்துப் பாருங்கள் – லாட்டரி நடத்தி முறைகேடாகப் பணம் சம்பாதித்த மார்ட்டின் தான் இனி பல முடிவுகளை விஜய்யை வைத்து எடுக்கப் போகிறார். தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி சரியப் போகிறது. ஆனால் தமிழ்நாடு எதிர்காலத்தில் விஜய் போன்ற ஜோக்கர்களிடம் இருந்தும் மீண்டு வரும்.

 

யாவரும் கேளீர்

—  அபிலாஷ் சந்திரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.