“அவளை இப்படித்தான் கொன்றேன்.! – அரசு பள்ளி ஆசிரியர்களின் ஆன்லைன்  ஆசை. “தீபா டீச்சர்” கொலையின்  திகில் வாக்குமூலம்..

0

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இரட்டிப்பு பணத்தாசை கொடூர கொலை  செய்யும் அளவுக்கு சென்றுள்ளது விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு.

பெரம்பலூர் வனப்பகுதியில் உல்லாசம் டூ கொலை, புதுக்கோட்டை காரைக்குடி சாலையில் வரை ரத்தம் படிந்த உடலோடு கார் பயணம் என 90 நாட்களுக்கு பிறகு அவிழ்ந்த
டீச்சர் கொலை முடிச்சிகளால் கதிகலங்கி கிடக்கிறது பெரம்பலூர் மாவட்டம்.

2 dhanalakshmi joseph

90 நாட்கள் திக் திக்

- Advertisement -

- Advertisement -

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியரான வெங்கடேசன் மற்றும் கணித ஆசிரியர் தீபா ஆகிய இருவரும் கடந்த 2023  நவம்பர் 15-ந்தேதி தனித்தனியே மாயமானார்கள். இரு குடும்பத்தாரும் கொடுத்த  ”காணவில்லை” புகாரை பெரம்பலூர் மற்றும் வி.களத்தூர் காவல்நிலைய போலீஸார் கொஞ்சம் அலட்சியமாகத்தான் அணுகியிருக்கிறார்கள்.

கோவையில் கார்… தேனியில் ஜாலி !

போலீஸாரின் ஆரம்பகட்ட அலட்சியம் அவர்களுக்கு கூடுதல் தலைவலியை தருமென அப்போது புரியவில்லை. காணாமல் போன தீபா, வெங்கடேசன் இருவரையும் போலீஸார்  தேடிவந்த நிலையில், அடுத்த சில தினங்களில் ஆசிரியர் தீபாவின் கார் கோவை உக்கடம் ராமர் கோயில் அருகே உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பின்புறம் கேட்பாரற்று நின்றது.

அங்கிருந்தவர்கள்  தீபாவின் TN 46Y 4572 Renault Kwid CLIMBER  காரின் பதிவெண் மூலம் அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்த போதுதான், காருக்குள்ளே ரத்தக்கரை படிந்த சுத்தியல், கத்தி. தீபாவின் தாலி உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. அப்போதும் இந்த விவகாரம் பெரம்பலூர் மாவட்ட போலீஸாருக்கு முழுதாய் புரியவில்லை. மேலும்,
அதுவரை மாவட்ட எஸ்.பி. ஷியாமளாதேவி கூட அலர்ட் ஆகவில்லை. பின் சுதாரித்து 5 தனிப்படைகள் அமைத்தும் மதுரை, கோவை, தேனி, கேரளா போன்ற பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்ற போதும் மர்மம் மட்டுமே நீடித்தது.

அசால்டாக வீட்டுக்கு வந்து போன ஆசிரியர்… கோட்டைவிட்ட போலீஸ் !

தீபாவுடன் மாயமான வெங்கடேசன் மட்டும்  கோயமுத்தூரில் காரை விட்டுவிட்டு தேனி, வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் பகுதியில் தலைமறைவாக இருந்தவர், சத்தமில்லாமல் அவரது சொந்த ஊரான குரும்பலூருக்கு வந்து ஆசிரியர் தீபாவின் செல்போனை அவரது மனைவியிடம்  கொடுத்துவிட்டு, கை செலவுக்கு காசு வாங்கிக்கொண்டு காஞ்சிபுரம் சென்றுள்ளார். இந்த தகவல் மாவட்ட எஸ்.பி. ஷியாமளாதேவிக்கு தெரியவர கொதித்தவர், அடுத்து  இரண்டு எஸ்.ஐ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

ஆனால், ஆசிரியர் வெங்கடேசன் அசால்டாக சென்னை மெரினா, பூந்தமல்லி, திருவள்ளூர் என பல பகுதிகளில் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு  ரகசிய தகவல் பேரில், தனிப்படை போலீஸார் வெங்கடேசனை  சுற்றிவளைத்து பிடித்து பெரம்பலூர் அழைத்து வந்தனர்.

காசு பணம் துட்டு …  உல்லாசத்துக்காக …

இனி கொலைகார ஆசிரியர் வெங்கடேசன் ஆசிரியரின் வார்த்தைகளிலே கேட்போம் … “நானும்  ஆசிரியை தீபாவும் ஆரம்பத்தில் நட்பாக பழகினோம். அவர் கொஞ்சம் மாற்றுத் திறனாளி. குடும்பத்தில் அவருக்கு பிரச்சினை இருந்தது. பாசமாக பேசினேன். என்னை முழுசாக நம்பிய தீபா, நான்  ஆன்லைன் டிரேடிங் செய்ய  தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ய பணம் தந்தார். இதுவரை அவளிடம் 19 இலட்சம் வாங்கியுள்ளேன். எனக்கு பணம் கொடுக்க அவ யோசிச்சதே இல்லை. கேட்க கேட்க பணம் தருவாள்.

தீபா கொடுத்த பணத்தை திருச்சியில் உள்ள ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆரம்பத்தில் நல்ல லாபம் அதிகவட்டி வந்தது. பின்னர் அப்படியே பணம் லாக் ஆகிடுச்சு.

ஆயுதங்களோடு அலைந்தேன்…

தொடக்கத்தில் வட்டியை தவறாமல் கொடுத்தேன். பின்னர் பணம் வராததால் தீபா கோவமாக இருந்தார். ஏதேதோ சொல்லி சமாளித்தேன். நாங்கள் அவ்வப்போது தீபாவுடன் பெரம்பலூர் முருக்கன்குடி பாரஸ்ட் பக்கம் போய் தனிமையில் இருப்போம். எங்கள் பழக்கம் எனது மனைவிக்கு தெரிய தீபாவுடன் உறவை நிறுத்த சொன்னவர் கொஞ்சம் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடச் சொன்னார். அதன்படி கடந்த நவம்பர் முதல் வாரம் 50 ஆயிரம் பணத்தை 500 ரூபாய் நோட்டுக்களாக தந்தேன். ஆனால்,  தீபாவோ தான் கொடுத்த பணத்தை மொத்தமாக திரும்ப கேட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனால் பள்ளியில் மாணவர்கள் முன்பு நான் கொடுத்த பணத்தை தீபா தூக்கி என் முகத்தில் வீசினார். மாணவர்கள் முன்னால் தீபா நடந்துகொண்டது எனக்கு  அவமானமாக போனது. இதனால் ஆத்திரமடைந்த நான் தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன்.

4 bismi svs

தீபாவை கொலை செய்தால் அதில் இருந்து எப்படி தப்புவது என இண்டர்நெட்டில் பார்த்ததில் சில விசயங்கள் தெரிந்துகொண்டேன். அதன்படி நவம்பர் 15-க்கு முன்னாலே சுத்தியல் போன்ற ஆயுதங்களை வாங்கி எனது பைக்கில் வைத்துக்கொண்டேன். இடையில் அன்றைய தினம் எனது பைக் ரிப்பேர் ஆக மதியமாக ஒரு தம்பியிடம் கொடுத்து சரி செய்தேன்.   மாலை பள்ளி முடிந்ததும் எனது பைக்கில் கிளம்பினேன். 

இருட்டும்வரை … உல்லாசம் – தனிமை !

கோவமே இல்லாததை போல தீபாவிடம் பேசினேன். அன்று மாலை ”நான் சின்னாறு செல்கிறேன் வா” என தீபாவை கூப்பிட்டேன் வந்தார். நான் சின்னாறு பைக் ஸ்டேண்டில் பைக்கை போட்டுவிட்டு தீபாவின் காரில் சென்றேன். இருவரும் உல்லாசமாக இருக்க வழக்கம்போல் முருக்கன் குடி பாரஸ்ட் பகுதியில் காத்திருந்தோம். இருட்ட ஆரமித்தது. சீக்கிரம் பணத்தை தருகிறேன். நம்பிக்கையாய் இரு என்றேன். எனது ஆசை வார்த்தைக்கு மயங்கிய தீபா, என்னோடு எப்போதும் இருக்கனும் எனச் சொன்னார். 

அவளிடம் வாங்கிய பணத்தை கணக்குப் பார்த்தால் 30 லட்சத்தை தாண்டும். ஆனால் 19 லட்சம் தருவதாக உறுதியளித்தேன். ஆனால், உடனடியாக தரும் அளவுக்கு பண வசதியில்லை. அதனால் அவளை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தேன்.  போலீஸார் என்னை முருக்கன் குடி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த இடத்தில்தான் சார், நான் கொலை செய்யும்போது என் சட்டையில் ரத்தம் படிந்துவிடக் கூடாது என மேல் ஆடைகளை கழட்டி ஓரமாக வைத்து விட்டு, இந்த இடத்தில்தான் சுத்தியால் தாக்கி தீபாவை கொன்றேன். இறந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த தீபாவை காரில் ஏற்றினேன். அப்போது அவள் அணிந்திருந்த தாலி, வளையல் உள்ளிட்டவற்றை கழட்டி காரில் வைத்துக்கொண்டேன்.

தீபாவின் ரத்தம் வழிந்த உடலோடு காரிலேயே நள்ளிரவு வரை சுற்றினேன்.  இறுதியாக சமயபுரம் டோல்பூத் வழியே புதுக்கோட்டை சென்று காரைக்குடி செல்லும் சாலையில் திருமயம் அருகே ஆற்றங்கரை பகுதியில்  லாரி தொழிற்சாலை பக்கமாக போனேன். அப்போது நள்ளிரவு 3 மணி இருக்கும்…” என நிறுத்தினார்.

தடயங்களை அழித்த வெங்கடேசன் !

”இரண்டு மூன்று நாட்கள் போலீஸார் விசாரணையால் தூக்கம் இல்லைங்க சார், தண்ணீர் கொடுங்க” என குடித்துவிட்டு மீண்டும் சொல்ல துவங்கிய வெங்கடேசன், ”திருச்சி தாண்டி போகும் வழியிலே தீபாவின் காருக்கு பெட்ரோல் போட்டேன். கூடவே, காரில் இருந்த வாட்டர் கேன்களில் பெட்ரோல் வாங்கினேன். 

யாரும் இல்லாத இடமாக இருந்த புதுக்கோட்டை நமனசமுத்திரம் ஆற்று  பகுதியில் குப்பைகளோடு, தீபா உடலையும், அங்கிருந்த விறகுகளை போட்டு எரித்துவிட்டேன். எழும்புகள் கூட போலீஸாருக்கு கிடைக்கக் கூடாது என கவனமாக இருந்தேன். கடைசியாக மதுரை வழியாக தேனி, கோயமுத்தூர் போயிட்டு, காரை அங்கு விட்டுட்டு மீண்டும் தேனி போனேன். இதுக்கு நடுவில் என் குடும்பத்தார் என்னைத் தேடி தேனி வந்தார்கள். நடந்ததை சொல்ல அவர்கள் என்னை அனுப்பி வச்சிட்டாங்க.

இதற்கிடையில் எனது குடும்பத்தாரை போலீஸார் கைது செய்திட்டதாக தெரியவந்தது. ஆனால், தீபாவுக்கு என்ன ஆனது என போலீஸார் 90 நாட்கள் ஆகியும் கண்டு பிடிக்கல.  அதனால்தான் நான் கொஞ்சம் அலட்சியமாக இருந்துட்டேன்.  அதனால் என்னை தூக்கிட்டீங்க…” என  கொலை நடந்த இடங்களை திகில் குறையாமல் விளக்கியதை கேட்ட பெரம்பலூர், மங்களமேடு, வி.களத்தூர் போலீஸார் அதிர்ச்சியில் மீளமுடியாமல் கிடக்கிறார்கள்.

வெங்கடேசனின் மனைவி காயத்ரி மற்றும்  உறவினர்கள் மற்றும் நண்பர்களான ஆனந்த், பிரபு பாலச்சந்தர், சரவணன், ஆகியோர் வெங்கடேசனுக்கு உடந்தையாக செயல்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வெங்கடேசனிடம் இருந்து தீபாவின் தாலிக்கொடி, தங்க வளையல்கள் உள்ளிட்ட நகைகளும், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

எஸ்.பியின் அலர்ட் மெசேஜ் இதோ !

தனிப்படை போலீஸாரான மங்களமேடு டி.எஸ்.பி. சீராளன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் எஸ்.ஐ. மனோஜ், வினோத் கண்ணன், சங்கர், செந்தமிழ் செல்வி, சரவணக்குமார், சஞ்சீவி, சிவக்குமார், தலைமைக் காவலர் சுரேஷ், கலைமணி ஆகியோரை பாராட்டியதுடன், பெரம்பலூர் ஆசிரியர் வெங்கடேசன் ஆன்லைன் டிரேடிங் நடத்தி பல்வேறு நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் பணத்தைப் வாங்கி உள்ளதாகவும், மேலும் ஆசிரியர் தீபாவிடம் பல லட்சம் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். ஆன்லைன் டிரேடிங் ஆசை  பல குடும்பங்களை நிற்கதியாக விட்டுள்ளது.

ஆசிரியர் தீபாவின் கொலை ஒரு ரெட் அலர்ட் ! விழித்துக்கொள்ளுமா தமிழ்நாடு அரசு ?


அவர்களுக்கு தெரியுமா ?

ஆசிரியர்களுக்கு கை நிறைய சம்பளம் தருகிறது தமிழக அரசு. ஆனால், சில பள்ளி ஆசிரியர்களின் பணத்தாசை கொலையில் முடிந்துள்ளது. இந்நிலையில்,  பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது சட்ட விரோத டிரேடிங்  நடந்து வருகிறதாம். பெண்ணங்கோணம், பெரம்பலூர், பாடாலூரில் செயல்பட்டுவந்த சில நிறுவனங்கள் புகாரின் பேரில் நடவடிக்கைக்கு ஆளாகின. ஆனால், சத்தமே இல்லாமல் சட்டவிரோதமாக பல நிறுவனங்களால்  பல கோடிகள் லாக் ஆகி கிடக்கிறதாம்.  புகாரே கொடுக்க விடாமல் வாட்ஸ் ஆப் ஆடியோக்களால் ஏமாற்றி வருகிறார்களாம்.

போலிஸுக்கு போனால் பணம் கிடைக்காது என்கிற பயத்தில் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். உடனடியாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றவர்கள். நம்மிடம், அமைச்சர் அன்பில் மகேஸ்  தலைமையிலான பெரம்பலூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் ஆன்லைன் டிரேடிங் இருமடங்கு பணம் என ஆசை வார்த்தைகளை காட்டி அரசு ஊழியர்கள், பொதுமக்களிடம் கோடியில் பணம் வசூல் செய்துள்ளாராம். இவர் மீது ஏற்கெனவே திருச்சி எல்பின், வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புவதுன்னு மோசடி புகார்கள் நீள்கிறதாம்.

தனது ஜித்துக்களில் இருந்து தப்பிக்கவே அந்த நீலநிறக் கடவுள் பெயர் கொண்ட நிர்வாகி, அமைச்சர்கள்  உதயநிதி, அன்பில் மகேஸ், எஸ்.எஸ். சிவசங்கர், ஆ.ராசா ஆகியோருடன் நெருக்கம்  எனச் சொல்லி அவர்களுடன் இருக்கும் போட்டோக்களுடன் லீலை காட்டி வருகிறாராம். மேலிட சப்போர்ட் இருப்பதால் புகார் கொடுக்கவே பாதிக்கப்பட்டவர்கள் தயங்குகிறார்களாம். இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகள் எப்படி அமைச்சர்களை நெருங்க முடிகிறது என  உடன்பிறப்புக்களே புலம்புகிறார்கள்.  அலர்ட் ஆவாரா அன்பில் மகேஷ்?

– அங்குசம் புலனாய்வு குழு.

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.