வன மகள் நீதி(ஸ்ரீ)பதி !
கிராம சபைகளில் கலந்துகொண்டு, கிராம வளர்ச்சிக்கு நீதி கேட்டவள் எங்கள் வனமகள் ஸ்ரீபதி” என்று பெருமைகொள்கிறார்கள் ஜவ்வாது பழங்குடி மக்கள்.
2023 – ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீபதி, முதல் பழங்குடியின நீதிபதி என்ற சாதனையை படைத்துள்ளார். ஜவ்வாது மலையின் உச்சியில் உள்ளது புலியூர் என்ற குக்கிராமம் சிரிய அளவு கொண்ட சிமெண்ட் கூரை குடிசை வீட்டிலிருந்து படித்து, சாதனை படைத்துள்ள ஸ்ரீபதிக்கு மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து தரப்பினர் வரை வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்
யார் இந்த ஸ்ரீபதி? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உச்சியில் இருக்கிறது புலியூர் கிராமம். அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட வனப்பகுதி, கொண்டை ஊசி வளைவுகள் எனச் சிரமப்பட்டே இந்தக் கிராமத்துக்குச் செல்ல வேண்டும்
ஸ்ரீபதி’யை படிக்க வைக்க சொந்த தந்தையே தடையாக இருந்ததாக கூறி , இவரது தாயார் பள்ளி பருவத்திலேயே தனது சொந்த ஊரான புலியூருக்கு அழைத்துச் சென்று . அங்குள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.
பின்னர் ஏலகிரி மலையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ஸ்ரீபதி, BA, BL சட்டப்படிப்பை முடித்தார் தற்போது 23 வயது தாயின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முயன்று வந்த ஸ்ரீபதி, இன்று ’பழங்குடி இனத்தின் முதல் பெண் நீதிபதி’ என்ற பெருமை பெற்றுள்ளார், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்ற ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
ஆசிரியர் மஹாலக்ஷ்மி ஸ்ரீபதியைப் வெளி உலகிற்கு அறிமுகம் செய்த ஆசிரியரின் வலைதள பதிவில் போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23), அவருடைய இனமா, அல்லது அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா…. என்றால்… இவை மூன்றுமே எனலாம் … என தொடங்கி – யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு
எங்கள் வலியைத் தெரிந்த, உணர்ந்த,புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் பக்கபலமாகவும் உள்ளது. இணையேற்பு முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும் ஒரு கிராமசபையில் பங்கேற்று,கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார். எல்லோரையும் போல அரசியல் பெருமகனார்கள் “இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்” என்று எகத்தாளமாக முதுகுக்குப் பின்புறம் பேசியுள்ளனர். இதோ அதையெல்லாம் கடந்து இன்று வெற்றியும் கண்டுள்ளார் ஸ்ரீபதி. Hats off you & congrats Judge SriPathy… என முடியும் . .. வாழ்த்து செய்தி சமுக வளைத்தளங்களில் வைரல் ஆனது.
மேள, தாளத்துடன் வரவேற்பு ; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலமாக, அடுத்த 6 மாதங்களுக்கு பயிற்சிக்குச் செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீபதிக்கு மலைகிராம மக்கள் தடபுடலான வரவேற்பு கொடுத்து அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி. மாலை அணிவித்து, மேள தாளம் முழுங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஸ்ரீபதிக்கு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
முதலமைச்சர்.க.ஸ்டாலின் வாழ்த்து; மலை கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், தனது விடாமுயற்சி மற்றும் கல்வியால் தனிப்பெரும் சாதனை படைத்துள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!” என்று குறிப்பிட்டுள்ளார் , ஸ்ரீபதியின் இந்த வெற்றி தமிழ்நாட்டின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்துள்ளார். “சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!. “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும் பெண்களைக் கற்கவைப் பீரே!, இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன்னேற வேண்டும் வைய மேலே!” என பதிவிட்டுள்ளார்.
மூறையான சாலை வசதி இல்லாத இம்மலைகிராமத்தில் படித்து, நீதிபதியாக தேர்வாகி உள்ள வன மகள் நீதி(ஸ்ரீ)பதி’க்கு அனைத்து தரப்பிலும் வாழ்த்துகள் குவிகிறது
– மணிகண்டன்