பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Palani Thaipusa Festival
Palani Thaipusa Festival

இந்த வார அங்குசம் வார இதழில்…

முருகனின் மூன்றாம் படை வீடான ,பழனி மலைக் கோவிலில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமியாக இருந்து தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாளித்து வருகிறார்.

ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் , இந்தாண்டுக்கான விழாவின் தொடக்கமாக இன்று வெள்ளிக்கிழமை அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோவிலில் , தைப்பூசத்திற்கான கொடியேற்றம் மேளதாளம் முழங்க சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களின் அரோகரா சரண கோஷத்துடன் தொடங்கியது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தைபூசம்
தைபூசம்

25ந் தேதியன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாகவும் , பக்தர்களாகவும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 24ஆம் தேதி வள்ளி தேவசேனா சமேதர் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும். 25-ம் தேதி மாலை 4:30 மணி அளவில் கிழக்கு ரத வீதி தேரடியில் தொடங்கி நான்கு ரத வீதிகளிலும் தைப்பூச திரு தேரோட்டமும் 28ஆம் தேதி இரவு தெப்ப தேரோட்டமும் இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கமும் நடைபெறும்.

– ராமதாஸ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.